Dinamani Salem - May 13, 2025Add to Favorites

Dinamani Salem - May 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 13, 2025

தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது

தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

2 mins

சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியர் தின கொண்டாட்டம்

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

1 min

உடையாப்பட்டியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்ட மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் புதன்கிழமை (மே 14) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

திமுகவினரின் நீர்மோர் பந்தலுக்கு தீ: அதிமுக பிரமுகர் கைது

அரசிராமணி செட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே திமுகவினரின் நீர்மோர் பந்தலை தீ வைத்து எரித்ததாக அதிமுக வார்டு செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

சேலம் மாநகராட்சிப் பகுதியில் இன்று குடிநீர் விநியோகம் இருக்காது

சேலம் மாநகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 13) குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

கஞ்சமலை மேல் சித்தர் கோயிலில் பௌர்ணமி பூஜை

சித்ரா பௌர்ணமியை யொட்டி கஞ்சமலை மேல் சித்தர் கோயிலுக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 min

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: கோயிலில் சிறப்பு வழிபாடு

ஊத்தங்கரை தொகுதிக்கு உள்பட்ட மகனூர்பட்டி கிராமத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

சித்ரா பெளர்ணமி: சேலம் உழவர் சந்தைகளில் ரூ. 96.65 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

சித்ரா பெளர்ணமியை யொட்டி, சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ. 96.65 லட்சத்துக்கு காய்கறி விற்பனையானது.

1 min

சித்ரா பௌர்ணமி: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சித்ரா பௌர்ணமியையொட்டி சேலம் சிவம் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

1 min

பொக்லைன் இயக்குவோர், உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

எடப்பாடி வட்டார பொக்லைன் வாகன ஆபரேட்டர்கள், உரிமையாளர்கள் திங்கள்கிழமை திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

1 min

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் முகூர்த்தக்கால்

வைகாசி விசாகத் திருவிழா

1 min

காடையாம்பட்டியில் 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தகவல்

1 min

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 2,360 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கு விற்பனையானது.

1 min

மே 23-இல் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

மணல் குவாரிகளை திறக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் மே 23-இல் மணல் லாரிகளை இயக்காமல் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.

1 min

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலைப் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

மகளை கொலை செய்துவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை மகளை கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 min

சேலம் தம்பதி கொலை வழக்கு: நகைக்காக கொன்ற வடமாநில இளைஞர் கைது

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த வயதான தம்பதி சம்மட்டி யால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி கைது

பரமத்தி வேலூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இந்து முன்னணி நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

இபிஎஸ் பிறந்த நாள் விழா: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

உதகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக உதகைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

1 min

செவிலியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

உலக செவிலியர் தினத்தையொட்டி (மே 12), செவிலியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்து சென்ற இரு கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில் மோதி உயிரிழந்தனர்.

1 min

14 இடங்களில் வெயில் சதம்: பரமத்திவேலூரில் 104.9 டிகிரி

தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.

1 min

மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவர் உயிரிழப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகர் வைகை யாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவர் உயிரிழந்தனர்.

1 min

ஜாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயர்நீதிமன்றம்

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

1 min

மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திங்கள்கிழமை ஆலமரக் கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.

1 min

வெப்பமும் தாக்கமும்

வெப்ப அலை என்பது எப்போதோ நடக்கும் பாதிப்பாக அல்லாமல் அடிக்கடி நிகழ்வாகவே மாறி இந்தியாவின் சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் சவாலை உருவாக்கியுள்ளது.

2 mins

சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது!

பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் போன்ற சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க, விதிகளில் உரிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

3 mins

மனமது செம்மையானால்...

டும்ப உறவுகளில் சுமுகத்தன்மை நிலவ குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற குணங்கள் அவசியமாகும்.

2 mins

முழுமையான காஷ்மீரே நமது இலக்கு!

சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி

2 mins

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.

1 min

பேராசிரியர் வருகைப் பதிவில் குறைபாடு

தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

1 min

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

1 min

இந்தியாவின் ட்ரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; பாகிஸ்தான்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.

1 min

பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

1 min

பாகிஸ்தானின் அணு ஆயுதப் பகுதியைத் தாக்கவில்லை

இந்திய விமானப் படை

1 min

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் திடீர் நீக்கம்

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் (எஸ்இசிஐ) தலைவர் மற்றும் தலைமை இயக்குநராகப் பதவி வகித்துவந்த ரமேஷ்வர் பிரசாத் குப்தா மத்திய அரசால் திடீரென நீக்கப்பட்டார்.

1 min

டிரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவில் மருந்து விலை உயர வாய்ப்பு

நிபுணர்கள் எச்சரிக்கை

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் நிலை என்ன?

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 'பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களின் நிலை என்ன' என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

1 min

இணை முன்னிலையில் பிரக்ஞானந்தா

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, டி.கு கேஷ் ஆகியோர் 5-ஆவது சுற்றில் டிரா செய்தனர். பிரக்ஞானந்தா மேலும் இருவருடன் இணை முன்னிலையில் இருக்க, குகேஷ் மேலும் இருவருடன் கடைசி இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

1 min

விடைபெற்றார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (36), டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.

1 min

புரோ லீக் ஹாக்கி: 24 பேருடன் இந்திய மகளிர் அணி

மகளிர் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஐரோப்பிய லெக் மோதலுக்காக 24 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

புத்த பூர்ணிமா: பிரதமர் வாழ்த்து

புத்த பூர்ணிமாவையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

1 min

இந்தியா, பாகிஸ்தானுக்கு நேபாள பிரதமர் நன்றி

சண்டை நிறுத்த உடன்பாடு மேற்கொண்டதற்காக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.

1 min

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

1 min

வாட்ஸ்ஆப் மூலம் பிரீமியம்:

செலுத்துவதற்கான வசதியை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி

நடப்பு 2024-25 ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.

1 min

யூனியன் வங்கி நிகர லாபம் 50% உயர்வு

பொதுத்துறையைச் சேர்ந்த யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

வீட்டுக் கடன் வட்டியை குறைத்தது பரோடா வங்கி

வீட்டுக் கடன் களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி குறைத்துள்ளது.

1 min

அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய ரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினர் திங்கள்கிழமை விடுவித்தனர்.

1 min

90 நாள்களுக்கு வர்த்தகப் போர் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்

கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வர்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

1 min

இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

1 min

வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அறிக்கை வெளியிடத் தடை

வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபர்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min

போர் நிறுத்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்வு

போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எழுச்சி பெற்றது.

1 min

துருக்கி: குர்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு

துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1 min

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மீது விமர்சனம்

அரசியல் கட்சிகள் கண்டனம்

1 min

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்

மதுரை அழகர் கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகர் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை காலை வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

1 min

நாட்டின் பாதுகாப்பில் செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்கு

குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்வெளியில் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

1 min

திருவண்ணாமலையில் மூன்றாவது நாளாக பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சித்திரை மாத பௌர்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக திங்கட்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only