Dinamani Salem - April 26, 2025

Dinamani Salem - April 26, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Salem
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 26, 2025
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
1 min
மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை
பொதுமக்கள் பயன் பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
1 min
அரசுப் பல்கலை. துணைவேந்தர்கள் புறக்கணிப்பு
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்தனர்.
1 min
உரிமைத் தொகை: விடுபட்ட மகளிர் ஜூன் மாதம் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான மகளிர் ஜூன் மாதம் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
உலக பூமி தின விழிப்புணர்வுப் பேரணி
வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் கிராமத்தில், பொள்ளாச்சி வானவராயர் வேளாண் கல்லூரி மாணவிகள் உலக பூமி தின விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர்.
1 min
ஏற்காட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம்
ஏற்காட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்தினர்.
1 min
மூத்தோர் தடகளப் போட்டி: தங்கம் வென்றவருக்கு பாராட்டு
கர்நாடக மாநிலம், மைசூரில் நடைபெற்ற மூத்தோருக்கான அகில இந்திய அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
1 min
சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் கோரி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தென்னை, பாக்கு மரங்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும்: ஆட்சியர்
தென்னை மற்றும் பாக்கு மரங்களை நோய் தாக்குதலிலிருந்து காக்க உரிய பயிர் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
1 min
அரசு, தனியார் நிறுவனங்களில் உள்ளகக் குழு: ஆட்சியர் உத்தரவு
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளகக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
1 min
வேளாண் கல்லூரி மாணவிகள் களப் பயிற்சி
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் தும்பலில் திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவிகள், அங்கக வேளாண்மை குறித்து களப் பயிற்சி பெற்றனர்.
1 min
ஏற்காடு கோடைவிழா முன்னேற்பாடுகள்: தோட்டக்கலை இயக்குநர் ஆய்வு
ஏற்காட்டில் கோடை விழா முன்னேற்பாடுகளை தோட்டக்கலைத் துறை இயக்குநர் குமரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.
1 min
சேலத்தில் வெயில் புதிய உச்சம்; 103.1 டிகிரி வெப்பம் பதிவு
சேலத்தில் கோடை வெயில் நடப்பாண்டில் புதிய உச்சமாக வெள்ளிக்கிழமை 103.1 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
1 min
கோழிக்கழிவுகளால் நிரம்பும் ஏரி! நீர் நிரம்புவது எப்போது?
வாழப்பாடியில் குண்டும் குழியுமாக, குப்பைமேடாக காணப்படும் புதுப்பாளையம் சடையன் செட்டி ஏரியின் கரைகளைப் பலப்படுத்தி சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
1 min
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் மௌன அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை ஊர்வலமாக சென்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் முதல்வர் மருத்துவ காப்பீடு
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளும், முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
ஆழியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாற்றில் மூழ்கி சென்னை யைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை 10,000-ஆக உயர்த்த வேண்டும்
இபிஎஸ், ராமதாஸ் வலியுறுத்தல்
1 min
ஜூன் 12இல் மேட்டூரில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை
காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
1 min
லஞ்ச வழக்கு: ஓய்வு பெற்ற தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை
லஞ்சம் பெற்ற வழக்கில், ஓய்வு பெற்ற நாமக்கல் தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது.
1 min
ரயிலில் கடத்தப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்
இளைஞர் கைது
1 min
பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் காவல் உதவி ஆணையர் விசாரணை
விதிகளை மீறி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் அமைப்பை தொடங்கிய புகாரில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதன் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
1 min
தங்கம் பவுன் ரூ.72,040-க்கு விற்பனை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை எவ்வித மாற்றமும் இன்றி பவுன் ரூ.72,040-க்கு விற்பனையானது.
1 min
மயோனைஸ் உணவுக்கு தடை விதித்தது ஏன்?
அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
1 min
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
கஸ்தூரி ரங்கன் மறைவு: ஆளுநர், முதல்வர் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
ஓமலூர் அருகே கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் வெள்ளிக்கிழமை மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
1 min
பூத் கமிட்டி பணியை விரைந்து முடிக்க வேண்டும்
அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
1 min
காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதி ஏப். 30-இல் நியமனம்
காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மாவுக்கு வரும் ஏப். 30-ஆம் தேதி அக்ஷய திருதியையன்று சந்நியாச தீட்சை அளிக்கவிருக்கிறார்.
1 min
விளையாட்டல்ல வயது மோசடி!
விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துவரும் நிலையில், மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளையோருக்கான போட்டிகளில் வயதைக் குறைத்து போலி ஆவணங்களைக் கொடுத்து பங்கேற்கும் போக்கு பல இளம் வீரர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில் உள்ளது.
2 mins
ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!
ஊராட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? உண்மையில் மக்கள் பணி செய்ய முன்வந்த உள்ளாட்சி நிர்வாகிகள் நிலை என்ன? இவையெல்லாம் இப்போது ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவை ஆகிவிட்டன. மக்களுக்கு அருகிலேயே உள்ள ஆட்சி அமைப்புதான் ஊராட்சி. ஆனால், உண்மையில் மக்களின் கைகளில் அந்த அதிகாரம் உள்ளதா என யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஏன் இந்த நிலை?
2 mins
இனி முதலீடு... தங்கத்தில்!
துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.
3 mins
முதல்வருக்கு மே 3-இல் பாராட்டு விழா
பேரவையில் அமைச்சர் தகவல்
1 min
இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள்
அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
1 min
சென்னையில் தொழில் பூங்கா - நாகையில் டைடல் பார்க்
20,600 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு
1 min
சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு
தொழில் துறை அமைச்சர்
1 min
தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min
துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது.
1 min
பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம்: ராகுல்
நாட்டு மக்களை பிளவுபடுத்தவே பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
1 min
சோனியா, ராகுலுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு
நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு புகார் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு உடனடியாக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு
பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீர் பண்டிட்டுகளை தாக்கத் திட்டம்
உஷார்நிலையில் பாதுகாப்புப் படைகள்
1 min
திட்டமிட்டபடி அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் தகவல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் அமர்நாத் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது; திட்டமிட்டபடியே யாத்திரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை புதிதாக நடத்த வேண்டும்
மத்திய இணையமைச்சர் வி.சோமண்ணா
1 min
போப் பிரான்சிஸுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி
மறைந்த போப் பிரான்சிஸின் (88) உடலுக்கு வாடிகனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min
57 டண் தங்கத்தை வாங்கிக் குவித்த ஆர்பிஐ: 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கொள்முதல்
2024-25 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 57.5 டண் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்தது.
1 min
இந்தியாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது
பாகிஸ்தான் 'செனட்' நிராகரிப்பு
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: கேரள முஸ்லிம் லீக் தலைவர் மீது வழக்கு
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பசீர் வெள்ளிகோத் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
1 min
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உரிய காரணமின்றி தடை விதிக்க முடியாது
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு அரசமைப்பு சட்ட செல்லத்தக்க தன்மை உண்டு என்ற நிலையில், அச் சட்டத்துக்கு உரிய காரணமின்றி முழுமையான தடையை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
2 mins
மேதா பட்கர் கைதாகி விடுவிப்பு
தில்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக ஆர்வலர் மேதா பட்கரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
1 min
தில்லியின் புதிய மேயர் ராஜா இக்பால் சிங்
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் தில்லியின் புதிய மேயராக வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் (84) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.
1 min
லா லிகா: அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 கோல் கணக்கில் ராயோ வல்கேனோவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
கஸ்தூரிரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'பல துறைகளில் பங்காற்றியவர். இஸ்ரோ தலைவராக, நாட்டின் விண்வெளி திட்டத்தின் பரிணாமவளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.
1 min
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 59 பேருடன் இந்திய அணி அறிவிப்பு
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி 59 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
சுல்தான் ஷா கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுக்கு அழைப்பு இல்லை
ஜோஹர் ஹாக்கி சங்கத்துக்கு பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் கட்டண நிலுவை வைத்திருப்பதால், நடப்பாண்டு சுல்தான் அஸ்லான்ஷாகோப்பை போட்டிக்கு பாகிஸ்தானை மலேசிய ஹாக்கி சம்மேளனம் அழைக்கவில்லை.
1 min
எலாவுக்கு ஸ்வியாடெக் பதிலடி
ஸ்வெரெவ், ஃப்ரிட்ஸ் வெற்றி
1 min
IPL சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐபிஎல் போட்டி யின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீர்கள்
சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனர்.
1 min
ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இழப்புகளுடன் முடிவடைந்தன.
1 min
மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,711 கோடியாக உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.7,711 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவத் தளபதி படுகொலை
ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கியத் தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
1 min
ஜிஆர்டி-யின் அட்சய திருதியை கொண்டாட்டம்
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only