Dinamani Cuddalore - May 10, 2025

Dinamani Cuddalore - May 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 10, 2025
400 ட்ரோன்களை ஏவி பாகிஸ்தான் அத்துமீறல்
பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுவதாகவும், மே 8-9-ஆம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவிலும், நள்ளிரவைக் கடந்தும் 400 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும் மத்திய அரசு மற்றும் பாதுகாப்புப் படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
சித்திரை மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
பிளஸ் 2-வில் தோல்வி: மாணவர் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால், மனமுடைந்த மாணவர் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
அமலோற்பவம் பள்ளி 100% தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி 30-ஆவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
திருவண்ணாமலைக்குள் நாளை முதல் வெளியூர் வாகனங்கள் வரத் தடை
சித்திரை மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலை நகருக்குள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) பிற்பகல் 2 மணிக்குப் பிறகு வெளியூர் வாகனங்கள் வரத் தடை விதித்து மாவட்டக் காவல் துறை உத்தரவிட்டது.
1 min
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்காரர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
கைப்பந்து விளையாட்டு மேம்பட அரசு உதவ வேண்டும்
கைப்பந்துப் போட்டி தமிழ்நாடு அளவில் மேம்பட தமிழக அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கைப்பந்து ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரிட்பால் சிங் சலூஜா கோரிக்கை விடுத்தார்.
1 min
மே 31 வரையில் பி.எம். கிசான் சிறப்பு முகாம்
கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்டம் (பி.எம். கிசான்) தொடர்பாக வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் தகுதியுடைய விவசாயிகள் இணைந்திட வேண்டும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
1 min
இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெள்ளிக்கிழமை நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
1 min
புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.26 கோடி பண மோசடி
பங்குச் சந்தையில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என புதுச்சேரி தொழிலதிபருக்கு ஆசை காட்டிய மர்ம நபர் ரூ.1.26 கோடி மோசடி செய்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி பள்ளி 99% தேர்ச்சி
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 99 சதவீத தேர்ச்சி பெற்றது.
1 min
பக்தர்களுக்கு வழங்க 2.25 லட்சம் குடிநீர் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் தயார்
திருவண்ணாமலை சித்திரை பௌர்ணமி
1 min
சேந்தமங்கலம் எஸ்எஸ்வி பள்ளி சிறப்பிடம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சேந்தமங்கலம் எஸ்எஸ்வி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றது.
1 min
பிளஸ் 2 தேர்வில் ஆறுமுகநாவலர் பள்ளி 98% தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிதம்பரம் ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
1 min
புதுவை அரசு உதவியாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வு ஜூன் 22-க்கு மாற்றம்
புதுவை அரசு உதவியாளர்கள் காலி பணியிடங்களுக்கான முதல்கட்ட எழுத்துத் தேர்வில் தேறியவர்களுக்கான 2-ஆம் கட்ட எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 22-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
1 min
மண்டகொளத்தூர் ஸ்ரீதர்மநாதேஸ்வரர் கோயில் தேரோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மண்டகொளத்தூரில் ஸ்ரீதர்மசம்வர்த்தினி சமேத தர்மநாதேஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
'ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும்'
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தனியாருக்கு வழங்காமல் தமிழக அரசே செயல்படுத்த வேண்டும் என்று கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
1 min
ஜெயப்பிரியா பள்ளியில் பாராட்டு விழா
ஜெயப்பிரியா கல்விக்குழுமங்களில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் செய்யாறில் தமுமுக சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
செங்கம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மொபெட் மீது பைக் மோதல்: உணவக உரிமையாளர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மொபெட் மீது பைக் மோதியதில் உணவக உரிமையாளர் உயிரிழந்தார்.
1 min
புதுச்சேரி கிராம வங்கியில் தீ விபத்து
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதியார் கிராம வங்கியில் வெள்ளிக்கிழமை திடீரென தீ பற்றியது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
1 min
ராஜீவ் காந்தி தேசிய மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலம் ராஜீவ் காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.
1 min
ஏர்வாய்பட்டினம் ஸ்ரீவிவேகானந்தா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கச்சிராயபாளையத்தை அடுத்த ஏர்வாய்பட்டினம் ஸ்ரீவிவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தலைவர் சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி வியாழக்கிழமை பாராட்டினார் (படம்).
1 min
ஊராட்சி செயலர் மரணம்: நெடுங்குணத்தில் மறியல்
ஆரணி, மே 9: திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் ஊராட்சிச் செயலர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது இறப்புக்கு பணிச்சுமையே காரணம் எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
அனைவருக்கும் முதுமை உண்டு!
அண்மைக்காலமாக முதியோர் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுவும், அந்தத் தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.
2 mins
முன்னேற்றமாகும் மாற்றம்
சர்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவர்கள் தயாராக ஏதுவாக தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.
3 mins
வேளாண் பட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
1 min
நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு
நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களைத் திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
1 min
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகம், மேற்கு வங்கம், கேரளத்தில்
1 min
நமக்கு நாமே திட்ட நிதி ரூ.150 கோடியாக உயர்வு
நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
எல்லைப் பகுதி, விமான நிலையங்கள் பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு
இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
1 min
பைக் விழுந்து விவசாயி மரணம்
விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டையில் பைக் மேலே விழுந்ததில் விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min
வீடு திரும்பினார் துரைமுருகன்
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் நலமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.
1 min
கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் மரணம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min
புதுவை ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வாயிலாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
1 min
சி.முட்லூர் அரசு கல்லூரியில் 5 புதிய பாடப்பிரிவுகள்
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக, கல்லூரி முதல்வர் ஜெ.லலிதா தெரிவித்தார்.
1 min
வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் அருகே காவல் துறையினர் நடத்திய வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
லாரியில் கடத்திய 10,032 போலி மதுப் புட்டிகள் பறிமுதல்: 4 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் நடத்திய வாகனத் தணிக்கையின்போது லாரியில் கடத்தி வரப்பட்ட 10,032 போலி மதுப்புட்டிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
1 min
திமுக ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
1 min
திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு அனுமதி
சித்திரை மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க 137 பேருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
1 min
புதிய போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதிய போப் பாக தேர்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
பாகிஸ்தானுக்கு கடன்; ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
1 min
24 இந்திய விமான நிலையங்கள் மூடல்: மே 15 வரை நீட்டிப்பு
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகர், சண்டீகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 24 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
தில்லியின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தில்லியின் முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் போரில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா
\"இந்தியா - பாகிஸ்தானிடையே போரில் தலையிட மாட்டோம்\" என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
1 min
பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவர் உயிரிழப்பு; ஐவர் காயம்
பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
1 min
கம்பராமாயணத்தில் காலமாற்றத்துக்கேற்ற கருத்துகள்
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்
1 min
மின் துண்டிப்பு, சைரன் ஒலி, குண்டுவெடிப்பு சப்தம்...
வீடுகளுக்குள் முடங்கிய எல்லையோர மக்கள்
1 min
பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்
ஊடகங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்
1 min
கண்ணீர்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.தாஹிர் இக்பால் கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
1 min
இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
1 min
ராணுவத்துக்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயார்
ம.பி. போக்குவரத்து சங்கம் அறிவிப்பு
1 min
நாட்டின் இறையாண்மையை காக்க உறுதி
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியுடன் உள்ளதாக இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்கப்பட்டார்
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூர் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
'ஆபரேஷன் சிந்தூர்' தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத் துறை
தங்கள் திரைப்படங்களுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனர்.
1 min
ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை
பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் 'ஜெய் ஹிந்த்' என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது.
1 min
தீபிகா, சலுன்கே காலிறுதியில் வெற்றி
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பார்த் சலுன்கே ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினர்.
1 min
குகேஷ், பிரக்ஞானந்தா மீண்டும் 'டிரா'
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் டிரா செய்தனர்.
1 min
இந்தியாவின் பாதுகாப்பு அரண்...
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக்-8, ஆகாஷ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
முதல் திருப்பலிக் கூட்டத்தில் போப் 14-ஆம் லியோ பங்கேற்பு
கத்தோலிக்க திருச்சபையின் 267-ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14-ஆம் லியோ, வாடிகனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பலிக் கூட்டத்தில் போப் என்ற முறையில் முதல்முறையாகப் பங்கேற்றார்.
1 min
சீனா மீதான வரிவிதிப்பைக் குறைக்க டிரம்ப் பரிசீலனை
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள 145 சதவீத கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.
1 min
ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு
வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மார்க் குற்றச்சாட்டு
தங்களது நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் ரகசிய உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரித்து வருவதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியது.
1 min
இலங்கை: ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் உயிரிழப்பு
இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் நீர்த்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only