Now Indiar Times - May 13, 2025

Now Indiar Times - May 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Now Indiar Times along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Now Indiar Times
In this issue
May 13, 2025
முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
பாகிஸ்தானின் ‘பயங்கரவாத ஆதரவு தாக்குதல்’ முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என தெரிவித்த இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, அதன் காரணமாகவே இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
1 min
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கோலாகலம் :
\"கோவிந்தா\" கோஷம் முழங்கிட லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

1 min
பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு தேனிமாவட்டம் பெரியகுளம் அம்மா மருத்துவமனை அருகில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் முன்னிட்டு காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தங்கத்தேர் இழுத்து அதிமுகவினர் வழிபாடு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்தநாள் வருகின்ற 12 ஆம் தேதி வரவுள்ள நிலையில், அந்நாளில் பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் அன்னதானம் மற்றும் திருக்கோயில்களில் சிறப்பு பூஜை மேற்கொண்டு சிறப்பாக கொண்டாட அதிமுக நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர்.
1 min
தஞ்சாவூரில் உள்ள பள்ளி 702 வாகனங்கள் ஆய்வு : 35 வாகனங்களின் தகுதி சான்று ரத்து
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், பட்டுக்கோட்டை கும்பகோணம் ஆகிய 702 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது 35 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.
1 min
மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் (பூத்) கிளை கழகம் அமைக்கும் பணி ஆலோசனைக் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம். பட்டணம்காத்தான் முதல் நிலை ஊராட்சியில் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் (பூத்)கிளை கழகம் அமைக்கும் பணி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் எம்ஏ. முனியசாமி தலைமையிலும், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் கழக அமைப்புச் செயலாளர் சுதா கே. பரமசிவன், அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜ வர்மன் ஆகியோர் முன்னிலையில், மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எம். எஸ். தர்வேஸ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கே.என். கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் (பாகம்) கிளைக்கழகம் அமைப்பு பணி ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
1 min
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் செல்போன் பறித்த நபர் கைது
சென்னை, அசோக்நகர், 2வது தெரு, எண்.38/18 என்ற முகவரியில் வசித்து வரும் சாதிக்பாஷா, வ/48, த/ பெ. கௌஷ்பாஷா என்பவர் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 21.04.2025 அன்று புது வண்ணாரப்பேட்டை, வீரராகவன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் மேற்படி சாதிக்பாஷாவிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

1 min
திருச்செங்கோடு கருமாபுரம் சான்றோர்குல நாடார் குரு மடத்தில் சித்ரா பௌர்ணமி பூஜை விழா
ஈரோடு மாவட்டம் , திருச்செங்கோடு கருமாபுரம் சான்றோர்குல நாடார் குரு மடத்தில் சித்ரா பௌர்ணமி பூஜை விழா சான்றோர் குலகுரு மடம் தலைவர் நடேசன் நாடார் மற்றும் பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன் நாடார் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
1 min
அம்பலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஏரிக்கொல்லி பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில் விற்பனை: கண்டுகொள்ளாத அம்பலூர் காவல்துறை மற்றும் மதுவிலக்கு காவல்துறை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான் கொல்லி செல்லும் வழியில் உள்ள ஏரிகொல்லி பகுதியில். தாயம்மா என்பவர் பல காலமாக சாராயம் விற்று வந்துள்ளாராம் தற்போது சாராய வியாபாரத்தையும் காவல் துறையின் கடுமையான நடவடிக்கையால் சாராய விற்பனை பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது ஆனால் தாயம்மா என்பவர் அரசு மது பாட்டில்களையும் கல்லச்சாராயத்தையும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிய வருகிறது ஏரிகொல்லி பகுதியை சுற்றி டாஸ்மாக் கடை எங்கும் கிடையாது அரசு மதுபான கடை திம்மம்பேட்டை பகுதியில் ஒன்று உள்ளது அதை அடுத்து புத்து கோவில் பகுதியில் இரண்டு கடைகள் அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது ஆனால் இப்பகுதியில் உள்ள மது பிரியர்கள் எவரும் மதுபான கடைக்கு சென்று வாங்குவதில்லையாம் (தொலைவில் உள்ளதால்) தாயம்மாவிடம் 140 ரூபாய் மது பாட்டில் 180 முதல் 200 வரை விக்கப்படுகிறதாம் மேலும்

1 min
ஆலங்குளத்தில் ஓரியண்ட் யுபிவிசி விண்டோ - டோர்ஸ் நிறுவனம் திறப்பு
தென்காசி மாவட்டம், ஆலங்கு ளத்தில், தென்காசி பிரதான சாலையில், ஓரியண்ட் யுபிவிசி விண்டோ - டோர்ஸ் நிறுவனம் திறப்பு விழாபிரபல தொழிலதிபர் மறைந்த ஓரியண்ட் எம்.எஸ்.மணி இல்ல வளாகத்தில் நடைபெற்றது.
1 min
மங்கலதேவி கண்ணகி திருக்கோவிலில் அமைச்சர் சேகர்பாபு வழிபாடு
தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக கேரளா மாநில எல்லையான விண்ணேற்றிப்பறை மலை உச்சியில் அமைந்துள்ள மங்கல தேவி கண்ணகி கோயில் சித்திரை பௌர்ணமி முழுநிலவு திருவிழா நடைபெற் றது.

1 min
காவலாகுறிச்சி கிராமத்தில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் ; கழக ஆட்சியின், சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
தென்காசி, மே.13தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காவலாகுறிச்சி பேருந்து நிலையம் முன்பு நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு கழக ஆட்சியின், சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

1 min
சங்கரன் கோவில் அருகே மீன்துள்ளி ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோயில் சித்திரை கொடை விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மீன்துள்ளி கிராமத்தில் ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோயில் சித்திரை பெருங் கொடை விழா நடைபெற்றது.

1 min
ரெட்ரோ சக்சஸ் சூர்யா மகிழ்ச்சி
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ரெட்ரோ இந்த படத்தில் சூர்யா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் படம் எதிர்பார்த்த அளவை தாண்டி வெற்றி பெற்றுள்ளது தமிழ்நாடு முழுக்க படத்தை விநியோகம் செய்திருந்தார் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேல் இந்த தருணத்தில் சூர்யா நண்பருடன் பகிர்ந்து கொண்டது
1 min
குளோபல் கிறிஸ்டியன் சர்ச் ஆப் இந்தியா சினாட் 55வது கவுன்சில் கூட்டம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
அரக்கோணம் மே.13 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கம் மஞ்சம்பாடியில் உள்ள வி.எஸ். ஐசக் கல்லூரியில் ராஜன் விண்ணரசு அரங்கத்தில் குளோபல் கிறிஸ்டியன் சர்ச் ஆப் இந்தியா சினாட் 55வது கவுன்சில் கூட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது.
1 min
வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 98.63 கோடி மதிப்பில் 263.67 கிலோமீட்டர் நீளத்திற்கு 216 சாலைகள்
வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ரூபாய் 98.63 கோடி மதிப்பில் 263.67 கிலோமீட்டர் நீளத்திற்கு 216 சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது.
1 min
மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.சிவசெளந்திரவல்லி பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

1 min
Now Indiar Times Newspaper Description:
Publisher: Nowindiartimes
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Now Indiar Times
Cancel Anytime [ No Commitments ]
Digital Only