Try GOLD - Free

Now Indiar Times - June 06, 2025

filled-star
Now Indiar Times

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

June 06, 2025

ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் உட்கட்டமைப்புகள் பசுமை சூழலோடு தரம் உயர்த்தப்பட்ட பசுமைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் தொடங்கி வைத்து பார்வையிட்டார்

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் (4.6.2025) திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் கொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பாக ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் உட்கட்டமைப்புகள் பசுமை சூழலோடு தரம் உயர்த்தப்பட்ட பசுமைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். சுதர்சனம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வை யிட்டார்கள்.

ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் உட்கட்டமைப்புகள் பசுமை சூழலோடு தரம் உயர்த்தப்பட்ட பசுமைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் தொடங்கி வைத்து பார்வையிட்டார்7

1 mins

டாலரில் மூதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி 6.88 லட்சம் மோசடி செய்த 2 நபர்கள் கைது. 1 செல்போன் பறிமுதல்

சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த நந்தகோபால், ஆ / வ. 38, த/ பெ.மகேந்திரபாபு என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், கடந்த 07.03.2024ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து Happen என்ற Chat-ting ஆப் மூலமாக அறிமுகமான தீபிகா என்பவரின் @deepikaarulsan என்ற டெலிகிராம் ஐடியில் சாட்டிங் செய்தபோது RTGC siteல் டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபத்தினை பெறலாம் என்று கூறியதை நம்பி தான் மேற்கண்ட வெப்சைட்டில் தனது SBI வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,41,557/ பணமும், Standard Chartered வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் ரூ.5,50,000/ பணம் என மொத்தம் ரூ.6,88,337/ பணம் முதலீடு செய்ததாகவும், தான் டாலரில் செய்த முதலீட்டினை திரும்ப பெற மீண்டும் ரூ.7,62,189/ செலுத்த வேண்டும் என்று கூறியபோது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததின்பேரில், மேற்படி நபரிடமிருந்து தனது பணத்தை பெற்றுத் தரும்படி குறிப்பிட்டிருந்தார்.

1 mins

ஆர்.கே. நகர் பகுதியில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி பண மோசடி செய்த நபர் கைது

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பப்பி, பெ/வ.35 என்பவர் தனது கணவர் மூலம் அறிமுகமான ஈஸ்வரன் மற்றும் கந்தகுமார் ஆகியோர் 2023ம் ஆண்டு தீபாவளி பண்டு சீட்டு நடத்துவதாகவும், தாங்கள் இத்திட்டத்தில் சேர்ந்தால் அதிக லாபம் பெறலாம் என்றும் கூறியதன்பேரில், தானும் தனக்கு தெரிந்த நபர்களும் இவர்களது தீபாவளி பண்டு சீட்டில் சேர்ந்து 2023ம் ஆண்டு நவம்பர் முதல் 2024ம் ஆண்டு ஜூன் வரை பணம் செலுத்தியதாகவும், தான் செலுத்திய பணம் ரூ.82,500/ உட்பட தனக்கு தெரிந்தவர்கள் சேர்ந்து மொத்தம் ரூ.1,62,000/ பணம் செலுத்தியும், சீட்டு முதிர்வடைந்த பின்னர் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கேட்டபோது, தராமல் ஏமாற்றி வந்ததாகவும், இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு தங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தரும்படியும் பப்பி என்பவர் பி6 ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

1 mins

அமெரிக்க டாலரை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.9.4 லட்சம் மோசடி செய்த நபர் கைது. 1 செல்போன் மற்றும் 2 சிம்கார்டுகள் பறிமுதல்

சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 22.08.2024 தேதி ரப்பானிகான், ஆ/வ26, த/பெ.சபீர்கான் என்பவர் அளித்த புகாரில், புகார்தாரர் Binance: BTC, Crypto and NFTS App ல் USDT சம்மந்தமாக டெலிகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த ஒரு கைப்பேசி எண்ணில் பேசியதாகவும், அதில் பேசிய ஒரு நபர் அமெரிக்க டாலரை நேரடியாக Exchange ல் வாங்குவதை விட குறைவான விலைக்கு தருவதாக கூறியதை நம்பி புகார்தாரர் மேற்படி நபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அமெரிக்கா டாலர் வாங்குவதற்காக RTGS மூலம் மொத்தம் ரூ.9,40,000/ அனுப்பியதாகவும், பின்னர் மேற்படி நபர் மனுதாரருக்கு அமெரிக்கா டாலரை கொடுக்காமல் ஏமாற்றியதால் புகார்தாரர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மேற்படி மோசடி நபர் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டுத்

1 mins

செம்மறி ஆடு மற்றும் முயல் வளர்ப்பு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மூலம் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்க நிகழ்ச்சி பல்வேறு கிராமங்களில் காரிப் பருவத்திற்கான வேளாண் தொழில்நுட்பங்கள், கால்நடை சார்ந்த தொழில்நுட்பங்கள் வேளாண் சார்ந்த திட்டங்கள் குறித்து விஞ்ஞானிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, அதனை முன்னிட்டு அடைக்கம்பட்டி, தேக்கம்பட்டி மற்றும் எம்.சுப்பலாபுரம் கிராமத்தில் செம்மறி ஆடு மற்றும் முயல் வளர்ப்பு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

செம்மறி ஆடு மற்றும் முயல் வளர்ப்பு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்21

1 mins

Recent Issues

Related Titles

Popular Categories