Try GOLD - Free

Now Indiar Times - May 20, 2025

filled-star
Now Indiar Times
From Choose Date
To Choose Date

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

May 20, 2025

மதிமுகவில் சோ.வீரக்குமாரன் கே.கே.சேதுபாஸ்கரன் மு.கோபால் ஆகியோர் மாவட்டக் கழக பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு அவர்கள் பொறுப்பாளர்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி

மறுமலர்ச்சி திமுக வின் நிர்வாக வசதிக்காக ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு ஈரோடு மேற்கு ஈரோடு தெற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டு அவற்றிற்குமுறையே சோ.வீரக்குமாரன் கே.கே.சேதுபாஸ்கரன் மு.கோபால் ஆகியோர் மாவட்டக் கழக பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு அவர்கள் பொறுப்பாளர்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 18.5.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்டக் கழக அலுவலகமான அண்ணா அறிவகம் கூட்ட அரங்கில் தலைமை தணிக்கை குழு உறுப்பினர் வழக்கறிஞர் பெ.மு.குழந்தைவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

1 mins

பேருந்து வசதியும் இல்லை இருக்கின்ற தார்சாலையும் பழுது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை சாலை அமைத்து தரக்கோரி ஊர் பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி இந்திரா நகர் என்னும் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை அமைத்து ஆறு வருடங்கள் ஆகிறது இப்பொழுது அந்த சாலை குண்டும் குழியுமாகி மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இப்பகுதிக்கு பேருந்து வசதியும் இல்லை அவசர உதவிக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கும் கூட மற்றொரு மாற்று வழியும் இல்லை இருக்கின்ற தார் சாலையும் பழுது நிலையில் உள்ளது.

1 mins

முகநூல் சமூக வலைதளத்தில் பெண்ணின் புகைப்படத்தை தவறான கருத்துக்களுடன் பதிவிட்ட கணவர் கைது : செல்போன் மற்றும் கார் பறிமுதல்

கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண்மணி, V-6 கொளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனக்கு திருமணமாகி முதல் கணவர் இறந்த நிலையில், 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் முகமது பைசல் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், முகமது பைசல் முகநூல் வலைதளத்தில் தனது பெயரில் கணக்கு தொடங்கி, தனது புகைப்படம் செல்போன் எண்ணை பதிவிட்டு, என்னை பற்றி தவறாக சித்திரித்தும் பதிவிட்டுள்ளதால், தனது செல்போன் எண்ணுக்கு நிறைய அழைப்புகள் வருவதாகவும், எனது புகைப்படைத்தையும், என்னை பற்றி தவறாகவும் முகநூலில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.

1 mins

மடிப்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிய வழக்கில் மேலும் இருவர் கைது

வைகை தெருவில் வசித்து வந்த கல்யாணசுந்தரம் என்பவர் அவரது வீட்டைபூட்டி மும்பையில் வசித்து வருவதாகவும், அவருக்கு தெரிந்த நபரான அதே பகுதியில் வசிக்கும் தணிகை அரசு வ/59, த/பெ.அய்யாதுரை 08.08.2024 அன்று காலை பார்த்தபோது, கல்யாண சுந்தரத்தின் வீட்டின் மாடியிலுள்ள கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கல்யாணசுந்தரத்திற்கு தகவல் கொடுத்து, மேற்படி வீட்டை சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திருடு போ யிருந்ததாகவும், தணிகை அரசு என்பவர் S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மடிப்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிய வழக்கில் மேலும் இருவர் கைது32

1 mins

Recent issues

Related Titles

Popular Categories