Try GOLD - Free

DINACHEITHI - NAGAI - June 04, 2025

filled-star
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

In this issue

June 04, 2025

பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடைசெய்யப்பட்டுள்ளதால், வணிகர்களும் அதனை தவிர்க்க வேண்டும்

கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதினால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்களின் பொது சுகாதார நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்குத் தடை செய்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

1 mins

சென்னை மக்களை வறுத்தெடுத்த கொடூர வெயில்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடையின் தாக்கம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கடந்த மே 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது. அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்தது.

1 mins

Recent Issues

Related Titles

Popular Categories