Try GOLD - Free

DINACHEITHI - KOVAI - June 08, 2025

filled-star
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

In this issue

June 08, 2025

தென்காசி அருகே துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை

தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 58)பிரபல தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த குடும்ப நண்பர் வீட்டிற்கு சென்ற போது அங்கு நண்பரின் 15 வயது மகள் மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது. அப்போது நீலகண்டன், சிறுமி மட்டும் தனியாக இருந்ததை பயன்படுத்திக்கொண்டு அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. எனினும் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நீலகண்டன் பாஜக பிரமுகர் மட்டுமன்றி

1 mins

முதல்வரின் முன்னெச்சரிக்கை, தேவை நடவடிக்கை...

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து புள்சிமிழ்ந் தற்று' என்றார் வள்ளுவர். ஒரு ஜனநாயக குடியரசு மக்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் கூட அது புதரில் மறைந்து பறவைகளை வேட்டையாடுவது போலத்தான். இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பார்கள், மறைமுகமாகக் கல்விக் கொள்கை மூலம் அதைத் திணிப்பார்கள். அதைப் போலத்தான் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்ய மாட்டோம் என்று கூறிக்கொண்டு மறைமுகமாக அதற்குரிய வேலைகளைச் செய்து வருகிறார்கள். இது நம் போன்றவர்களின் கவலை மட்டும் அல்ல, அரசியல் அறிஞர்கள், தலைவர்கள் யாவரின் கருத்தாகவும் இருக்கிறது. இதுகுறித்து மிகுந்த விசனத்துடன் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2 mins

கொரோனா பரவலால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு

நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தற்போது 4,302 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை மாவட்ட சுகாதார அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது.

கொரோனா பரவலால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு60

1 mins

Recent Issues

Related Titles

Popular Categories