Try GOLD - Free

Now Indiar Times - May 23, 2025

filled-star
Now Indiar Times
From Choose Date
To Choose Date

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

May 23, 2025

வாணியம்பாடியில் வெளி மாநில மது பாக்கெட் விற்பனை ஈடுபட்ட நபர் கைது கிராமிய காவல்துறை நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் வெளி மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிராமிய காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பேபி வழிகாட்டுதலின்படி உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் தலைமை காவலர்கள் கிரிசமுத்திரம் பகுதியில் விசாரணை மேற்கொண்டு தேடுதல் பணியின் போது அப்பகுதியில் வெளி மாநில மது பாக்கெட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த சதீஷ் த/பெ. ராஜி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 200 வெளி மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

1 mins

வடசென்னையில் முதல் முறையாக நடமாடும் மருத்துவமனை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி துவக்கி வைத்தார்

கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூர் தாழங்குப்பம் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவசர காலத்தில் முதலுதவி சிகிச்சை வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவமனை (ஆம்புலன்ஸ்) திட்டத்தை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி துவக்கி வைத்தார்.

1 mins

Recent issues

Related Titles

Popular Categories