Newspaper
Dinamani Chennai
இந்தியா - சைப்பிரஸ் 6 ஒப்பந்தங்கள் கையொப்பம்: பயங்கரவாத எதிர்ப்புக்கு கூட்டுப் பணிக் குழு
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கூட்டுப் பணிக் குழு அமைப்பது உள்பட இந்தியா, சைப்ரஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை கையொப்பமிடப்பட்டன.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முன்னேறிய வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு தொடர்வது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு ஏன் இடஒதுக்கீட்டின் பலன்கள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
குவாலிஃபையர் 1: பெங்களூரு - குஜராத் மோதல் - எலிமினேட்டரில் ஹைதராபாத்
ஐபிஎல் போட்டியின் 67-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 55 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்கும் தாய்க்கு மரபணு பரிசோதனை அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்
மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்க விரும்பும் தாய்க்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம் - என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பாடப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய சட்டக் கல்வி பாடங்களை இறுதி செய்ய நிபுணர் குழுவில் இடம்பெற்ற 3 கல்வியாளர்கள் தொடர்பாக கடந்த மார்ச் 11-ஆம் தேதி பிறப்பித்த தனது உத்தரவில் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாற்றம் செய்து உத்தரவிட்டது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட குறுகியகால ஒப்பந்தங்கள் நிறுத்தம் - பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
கடந்த திமுக ஆட்சியின் கடைசி காலத்தில் ஒப்பளிக்கப்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஊழலை முற்றிலும் ஒழிக்க அடுத்த 60 நாள்களில் மிகப் பெரிய நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் நிலையங்களுக்கு மக்கள் படையெடுப்பு - எரிபொருள் தட்டுப்பாடு பீதி
மகாராஷ்டிரத்தின் பல்வேறு மாவட்டங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால் பீதியடைந்த மக்கள், பெட்ரோல் நிலையங்களுக்கு கேன்களுடன் படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
உக்ரைன்-ரஷ்யா போரில் 49 இந்தியர்கள் உயிரிழப்பு - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
உக்ரைன் - ரஷியா இடையேயான போரில் இதுவரை 49 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் கட்டியதில் முறைகேடு
ஓட்டேரி நல்லா கால்வாயில் பாலம் கட்டியதில் ரூ.90 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
வேளாண் துறையில் புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கை அவசியம் - அமைச்சர் ர. வினோத் அறிவுரை
விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வருமானம், வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் ர. வினோத் அறிவுரை வழங்கினார்.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
வாகனங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கருவிகள் விலை நிர்ணயம் - உற்பத்தி நிறுவனங்களுக்கு அமைச்சர் அறிவுரை
வாகனங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கருவிகளின் விலையை சீராகவும், நியாயமாகவும் நிர்ணயம் செய்ய உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தினார்.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
பாகிஸ்தான், வங்கதேசத்தையொட்டிய பகுதிகளில் 'ஸ்மார்ட் எல்லை' திட்டம் - அமித் ஷா அறிவிப்பு
'பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளுடனான 6,000 கி.மீ. தொலைவு எல்லைப் பகுதியில் யாரும் ஊடுருவ முடியாத வகையில், 'ஸ்மார்ட் எல்லை' திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
நிதித் துறையிலிருந்து வருவாய்த் துறைக்கு மாற்றம் ஏன்? - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்
மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது வேண்டுகோளுக்கு இணங்கவே துறை மாற்றி அறிவிக்கப்பட்டதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் ஜூன் 18-இல் மாநிலங்களவை இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி. இடத்துக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய மகளிர் அணி
ஜப்பானில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
பாகிஸ்தான் பிரதமர் இன்று சீனா பயணம்
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சனிக்கிழமை (மே 23) புறப்படுகிறார்.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க எஸ்ஐஆர்: இதுவரை 6,581 மேல்முறையீடுகளில் தீர்ப்பாயம் இறுதி முடிவு
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான தீர்ப்பாயங்களில், இதுவரை 6,581 மேல்முறையீட்டு மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
2030-க்குள் இந்தியாவில் 10 புதிய கார்கள் அறிமுகம்
ஜப்பானைச் சேர்ந்த பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, வரும் 2030-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மற்றும் சிறிய ரக எஸ்யூவி உள்பட 10-க்கும் மேற்பட்ட புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்
சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
'நீட்' தேர்வு: குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் சனிக்கிழமை (மே 23) முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணனை நியமனம் செய்து முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
மத்திய அரசுக்கு ரூ.2.87 லட்சம் கோடி வழங்குகிறது ரிசர்வ் வங்கி
மத்திய அரசுக்கு வருவாய் உபரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ.2.87 லட்சம் கோடியை வழங்கவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
குப்பைக் கிடங்கில் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உத்தரவு
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பையோமைனிங் முறையில் மீட்கப்பட்ட நிலத்தில் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தை வரும் ஜூன் மாதத்துக்குள் செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டார்.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்தியாவில் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன், மருத்துவ தயார்நிலையை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
10 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை (மே 23) 10 மாவட்டங்களிலும், ஞாயிற்றுக்கிழமை 19 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
ஐயுஎம்எல், விசிக அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழக அமைச்சர்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) எம்எல்ஏ வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
மாற்றமும் தடுமாற்றமும்!
ஒருபுறம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு; இன்னொரு புறம் எத்தனையோ தடைகள்; இத்தனைக்கும் இடையில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசு தனது அமைச்சரவையை முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
2 min |
May 23, 2026
Dinamani Chennai
தங்கம் பவுனுக்கு ரூ.240 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கு விற்பனையானது.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
அறநிலையத் துறை ஊழியர்கள் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும்
இந்து சமய அறநிலையத் துறையின் உயர் அலுவலர்கள் முதல் திருக்கோயில் கடைநிலை பணியாளர்கள் வரை சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும் என துறையின் அமைச்சர் சீ.ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
May 23, 2026
Dinamani Chennai
ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை
ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.
1 min |
