Try GOLD - Free

தமிழரின் தொன்மையை மறைக்க முயற்சி!

Dinamani Dharmapuri

|

June 25, 2025

புணே, புதுச்சேரி ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் தரம் வாய்ந்த ஆய்வு மையங்களும், அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையமும் கீழடியில் கிடைத்த பழம்பொருள்களை ஆராய்ந்து கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெளிவான அறிக்கை அளித்துள்ளன.

- கட்டுரையாளர்: தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் ரீதியான தரவுகள் தேவை என்று மத்திய அரசின் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். மேலும், 'கீழடி அகழாய்வு குறித்து அளிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல; அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். கூடுதல் தகவல்கள், சான்றுகள், கூடுதல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன' என்றும் அவர் கூறியுள்ளார்.

கீழடியில் 2014-2015 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரியான முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணன் தலைமையில் வைகையாற்றின் தோற்றுவாயிலிருந்து அது கடலில் கலக்கும் இடம்வரை இரு கரைகள் நெடுகிலும் ஆய்வு நடத்தப்பட்டு 293 தொல்லியல் ஆய்வு சுவடுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் மதுரை அருகே கீழடி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து முதலில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் 5,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.

முதன்முதலாக செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் சுவடுகள் கண்டறியப்பட்டன. ஓடுகள், உறைக்கிணறுகள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் அடங்கிய ஏராளமான பானை ஓடுகளும் கண்டறியப்பட்டன. அதில் ஒரு பானை ஓட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. பாண்டியரின் சின்னமான மீன் சின்னம் கிடைத்ததால் இது பண்டைய மதுரையாக இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது.

மேலும், அங்கு கண்டறியப்பட்ட பழம்பொருள்களின் மூலம் கீழடி நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகமே என்பது நிறுவப்பட்டது. இதன் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்பதும் தமிழகத்தின் தொல்லியல் ஆய்வு வரலாற்றில் இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகும் என்பதும் வரலாற்றுப்பூர்வமான உண்மைகளாகும்.

1926-ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின்போது சிந்து மாநிலத்தில் சர் ஜான் மார்ஷல் என்ற தொல்லியல் அதிகாரி நடத்திய அகழாய்வில் சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டது. இந்திய வரலாற்றில் ஆரியர் இந்தியாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே மிகத் தொன்மையான நாகரிகம் இது என்பதை உலகம் உணர்ந்தது. இயற்கை காரணங்களினால் சிந்துவெளி நாகரிகம் அழிந்து 1,000 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆரியர்கள் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தனர் என்பதையும் உலகம் உணர்ந்தது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தினமும் ஒரு மணி நேர புத்தக வாசிப்பு அவசியம்

இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Translate

Share

-
+

Change font size