Newspaper
Thinakkural Daily
ஜனாதிபதி பதவி, 2/3 பெரும்பான்மை, உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மை அதிகாரம் இருந்தும் எவ்வித பலனுமில்லை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம்
இன்று நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகவே காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்ப்புகளை வழங்கி, மக்களை ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்று, இன்று நாட்டின் 2.2 மில்லியன் மக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளனர். புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்கவோ, மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்கவோ முடியாது போயுள்ளது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் சார் பிரச்சினை எழுகிறது. இதற்கும் எந்த தீர்வும் இல்லை. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு அரசாங்கத்தால் நாடு ஆளப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து அவுஸ்திரேலியாவில் போராட்டம்
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். அந்நாட்டில் வசிக்கும் 2-ல் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராக அல்லது அவரது பெற்றோர் வெளிநாட்டில் பிறந்தவராக உள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுங்கள்
ஜனாதிபதி தெரிவிப்பு
1 min |
September 02, 2025
Thinakkural Daily
யாழில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஜனாதிபதியால் திறப்பு
மூவருக்கு ஜனாதிபதியால் கடவுச்சீட்டுகள் வழங்கல்
1 min |
September 02, 2025
Thinakkural Daily
இலங்கையின் (2 - 0) தொடர் வெற்றிக்கு வழிவகுத்த நிஸங்கவின் அபார சதம்
ஸிம்பாப்வேக்கு எதிராக ஹராரே விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பத்தும் நிஸன்க குவித்த அபார சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
யாழ்.பொது நூலகத்தின் இணையத் தளம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு
எண்ணிமப்படுத்தல் செயற்திட்டமும் தொடக்கி வைப்பு
1 min |
September 02, 2025
Thinakkural Daily
சங்கானை விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் வைத்தியசாலையில்
சங்கானைப் பிள்ளையார் ஆலய வளைவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட் டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் உயிரி ழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்
600 பேர் பலி
1 min |
September 02, 2025
Thinakkural Daily
கெஹெல்பத்தர பத்மே உட்பட ஐவர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலம்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
மக்கள் வங்கி 2025 முதற்பாதியில் தனது வரலாற்றிலேயே அதிகபட்ச வரிக்கான ரூபா 28.0 பில்லியன் பதிவு
இலங்கையின் முன்னணி நிதிச் சேவைகள் வழங்குனரான மக்கள் வங்கி, 2025 ஜூன் 30 ல் முடிவடைந்த காலப்பகுதிக் கான தனது பெறுபேறுகளை அறிவித்துள்ளதுடன், ரூபா 80.8 பில்லியன் தொழிற்பாட்டு இலாபத்தையும், மற்றும் ரூபா 18.2 பில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்தையும் அறிவித்துள்ளது. அரசுக்குச் சொந்தமான பல நிறுவனங்க ளின் கடன்கள் குறித்து கணிசமான மதிப்பிறக்க கட்டணங் களை மேற்கொண்டமைக்குப் பின்னரும் இந்த இலாபம் பதிவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்படவேண்டிய ஒரு சாதனையாகும்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
புத்தரும் மார்க்ஸும்: ஒத்த இலக்குகளை அடைவதற்கான இரண்டு பாதைகள்
பூமியில் இரண்டு சிறந்த ஆளுமைகளான புத்தர் மற்றும் கார்ல் மார்க்ஸ் - வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சிந்தனைத் துறைகளில் தங்கள் கொள்கைகளைப் பரப்பினர். கிமு 563 இல் பிறந்த புத்தர் ஒரு புதிய மதத்தின் நிறுவனராகக் கருதப்படுகிறார், அதே நேரத்தில் கி.பி 1818 இல் பிறந்த கார்ல் மார்க்ஸ், அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தத்துவார்த்தக் கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர்.
3 min |
September 02, 2025
Thinakkural Daily
மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் கைது
காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29) இரவு கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி
இந்தியப் பிரதமர் மோடி கூறுகிறார்
1 min |
September 02, 2025
Thinakkural Daily
சுமார் 4 கிலோ கத்தரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க விவசாயி!
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது மிகப்பெரிய அளவிலான கத்தரிக்காய் விளைந்துள்ளது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
டொரன்டோவின் செயலானருடன் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் தலைவர் பிரான்சுவா வெலரியன் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
கல்லுமனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தீர்வை அனுர அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத் திற்கான முழுமையான தீர்வை ஜனாதி பதி அனுரகுமார திசநாயக்க தலைமையி லான அரசாங்கம் பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப் பினர் கந்தசாமி சிவலிங்கம் தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
சட்டவத்தில அதிகாரி, சிரி ஸ்கானர் இன்மையால் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சட்ட வைத்திய அதிகாரிஇன்மை மற்றும் கணிய அச்சுவெட்டு வருடி (CT scanner) இன்மை என்பவற்றால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தமக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டி யுள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பித்து வைக்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி தென்னை முக்கோண வலயம், வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
பாராளுமன்ற ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு குழு அமைப்பு
பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்க ளின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவது சம்பந்தமான யோசனைகளை முன்வைப்பதற் காக ஒரு குழுவை நியமிப்பதற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற சபைக் குழுக்கூட்டத்தில் தீர்மா னிக்கப்பட்டது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
12 ஆவது குளோபல் வர்த்தக மாநாட்டு இலட்சினை வெளியீடு
இலங்கையின் பொருளாதாரம் வேகமாக முன்னேற்றமடைந்து வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெறுகின்ற 12 ஆவது வர்த்தக மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர்களோ அல்லது பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அதிகாரிகளோ கலந்து கொள்வதன் மூலம் இலங்கை; கான மேலும் பல முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும் குளோபல் வர்த்தக மாநாட்டின் ஏற்பாட்டளருமான செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உதய கம்மன்பில நீதிமன்றில் மனுத் தாக்கல்
தம்மை, கைது செய்வதனை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
புங்குடுதீவின் முக்கிய சந்திகளில் உடனே பாதுகாப்பு கமரா பொருத்தப்பட வேண்டும்
புங்குடுதீவு பிரதேசத்தில் தொடர்ச்சியாக நிலவிவருகின்ற அச்சநிலை காரணமாக மக்கள் அங்கிருந்து இடம்பெயரும் அபாயம் காணப்படுகின்றது எனவும் எனவே மக்களின் நலன் கருதி முக்கியமான சந்திகளில் பாதுகாப்புக் கமரா பொருத்தப்பட வேண்டும் எனவும் தீவகம் சிவில் சமூகத்தின் உபதலைவர் கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் மொத்த பணப்பரிசு 418.5 கோடி ரூபா
இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள 8 அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்த பணப் பரிசாக 418 கோடியே 5 இலட்சத்து 74,000 ரூபா (13.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்பட வுள்ளது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
கிளிநொச்சியில் நிலைப்பேண்தகு கற்றகை விவசாயத்தை நிறுவுவதற்கு KIST மற்றும் GIZ நிறுவனங்கள் கைக்கோர்க்கின்றன
2025 ஆகஸ்ட் 14ஆம் திகதியன்று Cargills Food and Beverage Limited நிறுவனத்தினால் சந்தைப்படுத்தபடும் இலங்கையின் முன்னோடி உணவு வர்த்தகநாமமான KI-ST ஆனது இலங்கையின் நிலைப்பேண்தகு விவசாயம் மற்றும் கிராமிய ஊக்குவிப்பில் முக்கியமானதொரு மைல் கல்லை எட்டியது. Deutsche Gesellschaft fr Internationale Zusammenarbeit (GIZ) GmbH-நிறுவனத்துடன் கிளிநொச்சி பிரதேசத்தில் கற்றாழை விவசாயத்தை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதனூடாக இந்த மைல்கல்லை எட்டியது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
கர்கில்ஸ், புலமைப்பிரிசில் மற்றும் சமூக அபிவிருத்தி திட்டங்களினூடாக இலங்கையின் கிராமிய பிரதேசங்களில் சுபீட்சத்தை சேர்க்கின்றது
Cargills (Ceylon) PLC நிறுவனம் கடந்த 2025 ஆகஸ்ட் 29 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் விவசாய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
செயற்கை நுண்ணறிவும் சுகாதாரமும்
செயற்கை நுண்ணறிவை சுகாதாரப் பராமரிப்பில் ஒருங்கிணைப்பது, மருத்துவ கண்டுபிடிப்பு மற்றும் நடைமுறையின் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது, இது நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் நிர்வகிக்கப்படும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கிறது. பாரிய தரவுத் தொகுப்புகளை பகுப்பாய்வு செய்யும் திறன், சிக்கலான பணிகளை தானியங்குபடுத்துதல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நுண்ணறிவுகளை உருவாக்குதல் ஆகியவற்றுடன், செயற்கை நுண்ணறிவு செயல்திறனை அதிகரிக்கவும், துல்லியத்தை மேம்படுத்தவும் மற்றும் முன் எப்போதும் இல்லாத அளவில் நோயாளி விளைவுகளை சிறப்பான முறையில் வழங்கவுமான ஆற்றலைக் கொண்டுள்ளது.
2 min |
September 02, 2025
Thinakkural Daily
Tea Avenue இந்தியாவிற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது
நான்கு தலைமுறைகளாக இயங்கும் பாரம்பரியத்தைக் கொண்ட, இலங்கையின் முன்னணி தேநீர் வர்த்தக நாமமான Tea Avenue, இந்திய சந்தையில் பிரவேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. Franchise India Group இன் சர்வதேச பிரிவான FranGlobal உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தி இந்த விஸ்தரிப்புப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இந்த மைல்கல் செயற்பாட்டினூடாக, இலங்கைக்கு அப்பால் Tea Avenue இன் முதலாவது நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் அதிகளவு தேநீர் நாட்டம் மிக்க சந்தைகளில் ஒன்றினுள் பிரவேசித்துள்ளதுடன், 2035 ஆம் ஆண்டளவில் 200 க்கும் அதிகமான நிலையங்களைக் கொண்டிருக்கும் சர்வதேச பிரசன்னத்தை ஏற்படுத்தும் நிறுவனத்தின் குறிக்கோளுக்கமைவானதாகவும் அமைந்துள்ளது.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
உரிய நடைமுறையும் அதிகாரமும்: ரணில் விக்கிரமசிங்கவின் கைதிலிருந்தான பாடங்களும்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் கைது, அரசியல் பழிவாங்கும்விடயமாக கருதும் அவரது ஆதரவாளர்களுக்கும், முன்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் மீது சட்டம் இப்போது பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொள்ளும் மற்றவர்களுக்கும் இடையே பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
4 min |
September 02, 2025
Thinakkural Daily
விவசாயத் துறையின் ஒழுங்கின்மையால் வாங்குபவர்களால் விலைகள் நிர்ணயம்
ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர் உற்பத்திகளுக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Thinakkural Daily
செல்வச்சந்நிதி தேர்த் திருவிழாவை முன்னிட்டு இரத்ததான முகாம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருவிழாவின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கலாமன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முதன்முறையாக மாபெரும் சிறப்பு இரத்ததான முகாம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 min |