Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஒரேர் உழவரா? நக்கீரரா?

சங்கப் புலவர் பலரின் பெயர்கள் இன்றும் ஆய்வுக்குரியனவாகவே உள்ளன. அவற்றுள் ஒரேர் உழவர் அல்லது ஒரேர் உழவனார் என்பதும் ஒன்று. அவர் பாடிய பாடல் ஒன்றின் ஒரு சொற்றொடராலேயே இப்பெயர் அமைந்திருத்தல் வேண்டும்.

2 min  |

November 09, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இறுதிச் சுற்றில் சபலென்கா-ரைபகினா

சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் நடைபெறும் டபிள்யுடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் பெலாரஸின் அரினா சபலென்காவும் கஜகஸ்தானின் எலனா ரைபகினாவும் மோதுகின்றனர்.

1 min  |

November 09, 2025

Dinamani Nagapattinam

நியூயார்க்கின் விடியல்...

நியூயார்க் மேயராக, ஸோரன் குவாமே மம்தானி அண்மையில் தேர்வாகியுள்ளார். இவர் தனது வெற்றியை நியூயார்க் நகரத்தில் ஒரு புதிய விடியல்' என்று வர்ணித்துள்ளார்.

1 min  |

November 09, 2025

Dinamani Nagapattinam

சிவாஜி நடித்த ராஜராஜ சோழன்...

தமிழ் எழுத்தில் வல்லமை காட்டிய எழுத்தாளர் அரு. ராமநாதன்.

1 min  |

November 09, 2025

Dinamani Nagapattinam

அரையிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா

மகளிருக்கான டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.

1 min  |

November 08, 2025

Dinamani Nagapattinam

தேம்பாவணி தந்த திருமகனார்!

இத்தாலி நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அருந்தமிழ்த் தொண்டு செய்த அருட் குருக்களில் சிறந்ததொரு பெருமகனார் வீரமாமுனிவர் (1680-1747). அகிலம் போற்றும் பெருங்கவிஞரான வெர்ஜில் பிறந்த நகருக்கு அருகிலுள்ள காஸ்திக்கிளியோனே என்பது இவர் பிறந்த ஊராகும். இவர் பிறந்தது 1680-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி. இவர்தம் தந்தை பெயர் கண்டால்போ பெஸ்கி; தாயார் எலிசபெத் பெஸ்கி; இவர்தம் பிள்ளை ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்பதாம்.

2 min  |

November 08, 2025

Dinamani Nagapattinam

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அணிகளை 10-ஆக அதிகரிக்க முடிவு

2029 மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 10-ஆக அதிகரிப்பதாக ஐசிசி வெள்ளிக்கிழமை அறிவித்தது. தற்போது வரை அந்தப்போட்டியில் 8 அணிகளே பங்கேற்று வருகின்றன.

1 min  |

November 08, 2025

Dinamani Nagapattinam

நிலம் கற்று நேரம் காப்போம்...

கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்துவரும் விவசாயம், இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. விவசாயத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நமது நாடு நீர் மற்றும் பயிர் நாள்காட்டிகளைச் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மழைப்பொழிவு, அணைகளில் நீர் திறப்பு, நீர்ப்பாசனம் ஆகியவற்றுக்கான நீர் நாள்காட்டிக்கும் விதைத்தல், பயிர் வளர்ச்சி, அறுவடை ஆகியவற்றுக்கான பயிர் நாள்காட்டிக்கும் இடையேயான காலமொன்றா நிகழ்வுகள் இந்திய விவசாயத்தில் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன.

2 min  |

November 07, 2025

Dinamani Nagapattinam

'வந்தே மாதரம்' 150...

இந்தியத் திருநாட்டின் வரலாற்றின் நீண்ட நெடிய ஊக்கமளிக்கும் பயணத்தில், பாடல்களும் கலைகளும் இயக்கங்களின் உணர்வாக மாறி மக்களின் உணர்வுகளை செயல்பாடாக மாற்றிய ஏராளமான தருணங்கள் இருந்துள்ளன. சத்ரபதி சிவாஜி பேரரசர் படையின் போர்ப் பாடல்களாகட்டும், சுதந்திரப் போராட்டத்தின் போது இசைக்கப்பட்ட தேசியப் பாடல்களாகட்டும், அவசரகால நிலை பிரகடனத்தின் போது இளைஞர்களின் மெல்லிசைகளாகட்டும், இந்திய சமூகத்தில் பாடல்கள் எப்போதுமே கூட்டு உணர்வையும் ஒற்றுமையையும் தூண்டுகின்றன.

2 min  |

November 07, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

மதம் பிடிக்காத யானை !அறிவியல் வளர்ச்சியை யாராலும் தவிர்க்க இயலாது. தற்போதுள்ள வளர்ச்சியின் வேகம் மலைக்க வைக்கிறது. அதற்குச் சான்றாக செயற்கை நுண்ணறிவுத் துறையைச் சொல்லலாம். நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை, இணையதளத்தின் எல்லா அடுக்குகளில் இருந்தும் தேடித் தந்து விடுகிறது (‘செயற்கை நுண்ணறிவு-இருமுனைக் கத்தி!'-கட்டுரை-எஸ்.எஸ். ஜவஹர், 30.10.25). இது நல்ல விஷயம்தான் என்றாலும், அந்த செயற்கை நுண்ணறிவை உளவு பார்ப்பதில் பயன்படுத்தினால், அதன் தாக்கம் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும். மருத்துவத் துறையில் அதன் உதவி பேருதவியாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், அது குறித்து ஒரே வரியில் சொல்வதென்றால், மதம் பிடிக்காத யானை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.தே. காளீஸ்வரன், மதுரை.

1 min  |

November 07, 2025

Dinamani Nagapattinam

தனியார்மயம் குறித்து நிர்மலா சீதாராமன் பேச்சு: வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அதிருப்தி

பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை விமர்சித்துள்ள வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு, 'கூடுதல் மூலதனம் ஒதுக்கீடு செய்து பொதுத் துறை வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளது.

1 min  |

November 07, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை: அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை, மதுரையில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

1 min  |

November 06, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பயர்ன் மியுனிக், லிவர்பூல் வெற்றி

ஐரோப்பிய கண்டத்தின் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பயர்ன் மியுனிக், லிவர்பூல் அணிகள் தங்கள் ஆட்டங்களில் புதன்கிழமை வென்றன.

1 min  |

November 06, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு; ஷமி மீண்டும் புறக்கணிப்பு

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி, ஷூப்மன் கில் தலைமையில் 15 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min  |

November 06, 2025

Dinamani Nagapattinam

ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடவிருக்கும் ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் 15 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min  |

November 06, 2025

Dinamani Nagapattinam

தலைவர்களும் தலைமைப் பண்பும்...

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம் இல்லையேல் உரம்! என்கிற தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப சோர்வடையாத உழைப்பால் நிகழ்ச்சிகளை தொடர்ந்துகொண்டே இருப்பவர்கள்தான் பிறரை வழிநடத்தும் தலைவர்களாக உயர்வடைகிறார்கள். தலைவன் என்பவன் தலைமையிடத்தில் இருப்பவன்; அவனிடம் அதிகாரம் இருக்கிறது; அவன் சொல்லுக்கு பலம் இருக்கிறது; கூடுதல் மதிப்பு இருக்கிறது. தலைவன் மிக உயரத்தில் இருக்கிறான்; அவனுடைய கூட்டமோ மிக அதிகம். அதனால் பல தலைவர்களால் எல்லா நேரமும் எல்லோருடனும் கலந்து பழக, சேர்ந்து இருக்க, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முடியாது. அந்தத் தலைவர்களுக்கு கீழ் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் சிலர் இருப்பார்கள். அவர்கள்தான் தினந்தோறும் தலைவர்களுடன் பேசுவார்கள்; ஆலோசிப்பார்கள்.

2 min  |

November 06, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அகமும் புறமும்...

மாநகராட்சி உபயோகமற்ற பொருள்களை வீடுகளிலிருந்து நேரடியாகச் சென்று பெறும் வரவேற்கக் கூடிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முன்னெடுப்பு. நமது வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் தினமும் வாங்கிச் செல்கிறார்கள். இருப்பினும், இவற்றைத் தவிர்த்து, தாவரக் கழிவுகள், தேவையற்ற படுக்கைகள், உடைந்த தளவாடங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் குப்பையாகப் பொது இடங்களில் வீசிச் செல்கிறார்கள். இவை பொது இடங்களில் ஆங்காங்கே குவிந்து சுகாதாரச் சீர்கேடாகவும், நீர்நிலைகளில் அடைப்புகளாகவும் மாறி விடுகின்றன.

3 min  |

November 05, 2025

Dinamani Nagapattinam

ஐசிசி அணியில் ஸ்மிருதி, ஜெமிமா, தீப்தி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஐசிசி அணியில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா உள்பட 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.

1 min  |

November 05, 2025

Dinamani Nagapattinam

கனவு நனவானது!

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது. 1983-இல் கபில் தேவ் தலைமையிலான அணி முன்பு உலகக் கோப்பையை வென்றது எவ்வாறு திருப்பு முனையாக அமைந்ததோ, அதேபோன்று மகளிர் கிரிக்கெட்டுக்கு இந்த வெற்றி திருப்புமுனையாக அமைந்துள்ளது.

2 min  |

November 05, 2025

Dinamani Nagapattinam

பவுன் ரூ.91,000-ஐ நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து ரூ.90,800-க்கு விற்பனையானது.

1 min  |

November 04, 2025

Dinamani Nagapattinam

ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!

பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

2 min  |

November 04, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்

2 min  |

November 04, 2025

Dinamani Nagapattinam

தமிழகம் முழுவதும் நாளை பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் புதன்கிழமை (நவ. 5) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

1 min  |

November 04, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.

3 min  |

November 03, 2025

Dinamani Nagapattinam

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

1 min  |

November 03, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

1 min  |

November 03, 2025

Dinamani Nagapattinam

வாரிசுகளின் கடமை

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

2 min  |

November 03, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

2 min  |

November 02, 2025

Dinamani Nagapattinam

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

1 min  |

November 02, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

1 min  |

November 02, 2025