Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - KOVAI

நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்', 'சிந்துபாத்' படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் 'ஃபீனிக்ஸ்' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

மதுரை:பால்பண்ணை அதிபர் விஷம் குடித்து தற்கொலை

மதுரையில் வங்கி ஊழியர்களின் அழுத்தத்தால் பால்பண்ணை அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

“வரும் 1-ந் தேதி முதல் அமல் படுத்தப்படும்” என தமிழக அரசு அறிவிப்பு

வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு வரும் 1-ந் தேதி முதல் அமல் படுத்துகிறது. முதல் கட்டமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதம்

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணுஆயுதங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய அணு மையங்கள் தகர்க்கப் பட்டதுடன், அணுஆயுத விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 6 மாதங்களில் அனுமதியின்றி கனிம வள பொருட்கள் எடுத்துச் சென்ற 313 வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் அனுமதியின்றி கனிம வள பொருட்கள் எடுத்து சென்ற 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா?- ‘உதயசூரியன்’

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

காதல் விவகாரத்தில் மகள் கழுத்தை அறுத்துக்கொன்ற தந்தை கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே டி.புத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலூர் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 50). இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண் ஒரு பெண் பிள்ளை. இதில் இரண்டாவது மகளாக பிறந்தவர் அபிதா (24).

1 min  |

June 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தி.மு.க. பிரமுகர் கொலையில் 3 பேர் கைது

பரபரப்பு தகவல்கள்

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

கடன் வாங்கியவரின் சகோதரரை கடத்திய 4 பேர் கும்பல் சிக்கினர்

மதுரை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி (வயது 40). இவரும், இவருடைய நண்பா முரளிமணிகண்டன் (39) ஆகிய இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வோருக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கப்படும் என அறிவித்து இணையத்தில் தொழில் நடத்தி வந்தனர்.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

குற்றாலம்: அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு

பெண்கள் அலறியடித்து ஓட்டம்

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: 110 அடியை எட்டிய ஆழியாறு அணை

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான வால்பாறை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிவித்த ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்தது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்: அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம்பகுதியை சேர்ந்தவர் யூசப் அலி (வயது 45). ஜோதிடரான இவர், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள், கஷ்டங்கள் அரபி ஜோதிடம் முறையில் தீர்க்கப்படும் என்றுகூறிவந்தார்.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சென்னையில் வாரஇறுதியில் குறைந்த தங்கம் விலை

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. இதற்கிடையே, பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கேரளாவில் கனமழையால் பழமையான கட்டிடம் இடிந்து 3 பேர் பலி

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குடகரை பகுதியில் பெய்த கனமழையால் சுமார் 50 வருடங்கள் பழமையான கட்டிடம் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

டிரம்ப் உத்தரவுகளுக்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாவட்ட நீதிபதிகளிடமிருந்து பறித்த அமெரிக்க உச்சநீதிமன்றம்

நீதிபதிகள் தன்னிச்சையாக அமெரிக்க அரசின் நிர்வாக நடவடிக்கைகளைத் தடுக்கும் அதிகாரங்களைக் அந்நாட்டு உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சத்தீஷ்காரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மாத் பகுதி காட்டில் நக்சலைட்டுகள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் காவல் படையினர், சிறப்பு பணிக்குழு ஆகியவற்றின் கூட்டுக்குழு அந்த பகுதியில் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

9 பேரை கொன்று துண்டுதுண்டாக வெட்டியவருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்

தனதுஅடுக்குமாடிகுடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்றுஅவர்களின்உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மான் பிடிபட்டது

வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மானை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

2026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்

செனனை ஜூன் 292026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

3 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

அரசு பஸ்-வேன் மோதி பழ வியாபாரி பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 47). மச்சூர் அருகே சாலையோரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

300 கிராம் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார், மொட்டக்கோபுரம் கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

மது பதுக்கி விற்ற 3 பெண்கள் கைது

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில், மதுபானங்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களின் பேரில், ஆத்தூர் எஸ்பி சதீஷ்குமார் தலைமையில் எஸ்.ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு

ரெயில் கட்டுப்பாட்டு துறை, இந்திய ரெயில்வேயின் மூளை அல்லது நரம்பு மையமாக கருதப்படுகிறது. அத்துறையில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ரெயில்வே தேர்வு வாரியம் நடத்திய ரெயில்வே போக்குவரத்து பழகுனர் தேர்வு மூலம் ஊழியர்கள் நேரடி தேர்வுமுறை மூலம் நியமிக்கப்பட்டு வந்தனர்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் நடைபெற்றது.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

பரிகார பூஜை செய்வதாக விவசாயியை கத்தியால் குத்திய சாமியார் கைது

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 54). சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலை ஒன்றை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

மலையிடப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர், ஜூன்.29-20252020 ஆண்டிற்கான சட்டப்மானியக் கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண்.5-இல் 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 1.7.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - KOVAI

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 117.3 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

1 min  |

June 29, 2025