Newspaper
Maalai Express
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
சென்னை - நாகை இடையே கரையை கடக்கும்
1 min |
November 25, 2025
Maalai Express
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த கவாய் நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றார். டெல்லி தர்பார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
1 min |
November 24, 2025
Maalai Express
டிசம்பர் 10ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதி ஆகும்.
1 min |
November 23, 2025
Maalai Express
"தவெகவினர் தற்குறிகள் அல்ல.. அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி.."- மக்கள் சந்திப்பில் விஜய் பரபரப்பு பேச்சு
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் இன்று தொடங்கி இருக்கிறார். முன்னதாக சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருந்தார். ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
2 min |
November 23, 2025
Maalai Express
பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும்
கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள்
2 min |
November 22, 2025
Maalai Express
நாளை மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்: 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார். அந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார்.
1 min |
November 22, 2025
Maalai Express
திடீர் உயர்வில் தங்கம் விலை
தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 18ந்தேதி குறைந்து, 19 ந்தேதி உயர்ந்த நிலையில், நேற்று முன்தினம் விலை சரிந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500 க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40 ம், சவரனுக்கு ரூ.320ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 460க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 680க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.92 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
1 min |
November 22, 2025
Maalai Express
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
நேற்று முன் தினம் (20-11-2025) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, நேற்று (21-11-2025) காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவியது.
1 min |
November 22, 2025
Maalai Express
தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜி20 நாட்டு தலைவர்களின் 20வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.
1 min |
November 21, 2025
Maalai Express
தமிழ்நாட்டில் 2 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கண்புரை 82 சதவீதம், விழித்திரை பாதிப்பு 5.6 சதவீதம், நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு 1 சதவீதம், கண் நீரழுத்த நோய் பாதிப்பு 1.3 சதவீதம் மற்றவை 10.1 சதவீதம் ஆகும். 14.3 சதவீத குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலம் பார்வையை சரி செய்ய வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
1 min |
November 21, 2025
Maalai Express
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபாடு
ஜனாதிபதி நேற்று மாலை 4.30 மணிக்கு தனது மகள் இதி ஸ்ரீ முர்மு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார்.
1 min |
November 21, 2025
Maalai Express
சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை
1976ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் 10,000க்கு அதிகமான பாடல்களை உருவாக்கியும் உள்ளார்.
1 min |
November 21, 2025
Maalai Express
மசோதாவுக்கு ஒப்புதல்: கவர்னருக்கு கெடு விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது. செப்டம்பர் 11ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை வாசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு கூறியதாவது:
1 min |
November 20, 2025
Maalai Express
திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா
மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் மல்லை சத்யா. கட்சி தலைமைக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட பிரச்சினையால் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து ஆதரவாளர்களுடன் இணைந்து புதிய கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் கட்சி பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது.
1 min |
November 20, 2025
Maalai Express
புதுச்சேரியில் அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் திடீர் விலகல்
புதுவை மாநில அ.தி.மு.க.வில் ஜெ. பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர்.
1 min |
November 19, 2025
Maalai Express
விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றம்: அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை?
விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து பா.ஜனதா கொள்கை எதிரி, தி.மு.க. அரசியல் எதிரி என்ற அடிப்படையில் தன்னை அடையாளப்படுத்தினார். தி.மு.க.வை கடுமையாக தாக்கி பேசினார். ஆனால் அ.தி.மு.க. மீது அவர் எந்தவொரு பெரிய விமர்சனத்தையும் வைக்கவில்லை. எனவே விஜய் அ.தி.மு.க.வுடன் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று பேசப்பட்டது.
1 min |
November 19, 2025
Maalai Express
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடைகொடுத்து வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சமாகும். அதாவது, வடகிழக்கு பருவமழை சிறப்பாகவே தொடங்கியது எனலாம். ஆனால் நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் மாத சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், இது மிகவும் குறைவு என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
1 min |
November 18, 2025
Maalai Express
அடுத்த 3 ஆண்டுகளில் விண்கலம் தயாரிப்பை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டம்: இஸ்ரோ தகவல்
விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்கு சவால் அளிக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் குறித்து அதன் தலைவர் நாராயணன் விவரித்து உள்ளார்.
1 min |
November 17, 2025
Maalai Express
முதல்மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்
20ந்தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு
1 min |
November 17, 2025
Maalai Express
சவுதி அரேபியாவில் பஸ் விபத்து: 42 இந்தியர்கள் பலி
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொள்வோர் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ்சில் 43 பேர் பயணித்தனர். அப்போது அந்த பஸ் இன்று அதிகாலை 1.30 மணியளவில் முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
1 min |
November 17, 2025
Maalai Express
டெல்லி கார் வெடிப்பு: 3 மருத்துவர்கள் உட்பட 4 பேரை விடுவித்தது என்.ஐ.ஏ.
டெல்லியில் கடந்த 10ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பலியான டாக்டர் உமர் கடந்த 10ந் தேதி அரியானாவில் இருந்து டெல்லி செங்கோட்டை வந்த பாதைகளில் போலீசார் இடைவிடாமல் விசாரித்து வருகிறார்கள். குறிப்பாக அவர் எங்கெல்லாம் நின்றாரோ? அங்கு விசாரணை நடத்தப்படுகிறது.
1 min |
November 17, 2025
Maalai Express
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
November 17, 2025
Maalai Express
முதலமைச்சர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன.
1 min |
November 17, 2025
Maalai Express
தேசிய பத்திரிகை தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஜனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Pillar of Democracy) என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள்.
1 min |
November 16, 2025
Maalai Express
தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இதன்படி 31 ஆயிரத்து 373 தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
1 min |
November 16, 2025
Maalai Express
அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரி ரத்து செய்தார் டிரம்ப்
அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வருகிறார். இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1 min |
November 16, 2025
Maalai Express
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தவெகவினர் ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 16ம் தேதி (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக தவெக மாவட்ட செயலாளர்கள் முறையாக போலீஸ் அனுமதி பெற்றுள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டனர்.
1 min |
November 16, 2025
Maalai Express
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மறுப்பு
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு
1 min |
November 16, 2025
Maalai Express
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, நவ. 15சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் டிச.6 முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
November 15, 2025
Maalai Express
SIR-க்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளை தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் என். ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
1 min |