कोशिश गोल्ड - मुक्त
சிவன் கோவிலுக்கு சண்டை போடும் தாய்லாந்து - கம்போடியா?
Kanmani
|August 20, 2025
ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம், இந்தியா-பாகிஸ்தான் போர்களைத் தொடர்ந்து தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது தாய்லாந்து-கம்போடியா இடையிலான மோதல்தான்.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிவன் கோவில்தான் இந்த இரு நாடுகளின் தீரா பகைக்கு காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இந்த இரு நாடுகளும் 817 கிலோ மீட்டர் பரப்பளவிலான எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. தாய்லாந்தின் சுரின் மாகாணமும், கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே மாகாணமும் இந்த எல்லைப் பகுதியை ஒட்டியே அமைந்துள்ளன.
குறிப்பாக, தாய்லாந்தும் கம்போடியாவும் லாவோஸ் நாட்டுடனும் எல்லையை பகிர்ந்து கொள்ளும் எமரால்டு முக்கோணம் என்ற நிலப் பகுதியில் ஏராளமான கோவில்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் டாங்க்ரெக் என்ற உயரமான மலையில் அமைந்துள்ள ஒரு பழம்பெரும் சிவன் கோவில் பிரே விஹியர்.
தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய மிக்க ஆன்மிக தலமாக இந்த கோவில் பார்க்கப்படுகிறது. இந்த கோவில்களில் ஏராளமான மர்மங்களும், அமானுஷ்யங்களும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கோவிலின் பின்புலம் குறித்து அறிய வேண்டுமென்றால் நாம் சோழர் காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.
சோழப்பேரரசை கட்டி ஆண்ட ராஜராஜ சோழனின் மகன், இராஜேந்திர சோழன் கடல் கடந்து பல நாடுகளுக்கு படையெடுத்துச் சென்று வெற்றி கண்ட வரலாறு சரித்திரம் சொல்லும்.
அந்த வகையில் தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளிலும் சோழனின் கால் தடங்களை பறைசாற்றும் வகையில் உயரமான கோவில்கள், நுட்பமான சிற்ப கம்போடியாவில் வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளன.
9-ஆம் நூற்றாண்டில் தென் தமிழக பாண்டியர்கள் வழி வந்த சென்சுலா பேரரசு அகற்றப்பட்டு, அங்கு கெமர் ஆட்சி தொடங்கியது. கெமர் பேரரசு சோழ வம்சத்தின் தொடர்புகளை கொண்டது.
11-ஆம் நூற்றாண்டில் கெமர் பேரரசின் பொற்கால ஆட்சியில் அங்கு ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டன. அதில் ஒன்று தான் 525 மீட்டர் உயரமுள்ள குன்றின் மீது அமைந்துள்ள பிரே விஹியர் சிவன் கோவில். கெமர் பேரரசின் புகழ்பெற்ற அரசனான முதலாம் சூரியவர்மன் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. மிகச்சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த சிவன் கோவில் கெமர்மன்னர்களின் பிரதான சிவன் கோயிலாக விளங்கியது.
கம்போடியாவில் புத்தமதம் கோலோச்சி விட்டாலும் இன்னமும் அங்கு இந்து மத சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அங்குள்ள மக்கள் தொகையில் 97 சதவீதம் பேர் இந்துக்களாக இருந்து புத்த மதத்தை தழுவியர்கள் என்றே சொல்கிறார்கள்.
यह कहानी Kanmani के August 20, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Kanmani से और कहानियाँ

Kanmani
இயக்குனர்களிடம் சரண்டர்.ஆகிடுவேன்!
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யா பாலன், தமிழில் நேர்கொண்ட பார்வையில் நடித்தார்.
2 mins
August 20, 2025

Kanmani
களைக்கொல்லி: நச்சாகிறதா நிலத்தடி நீர்!.
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் இன்று பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பயிர்களை சாகுபடி செய்து மகசூல் எடுக்கும் வரை போராட்டம்தான்.
1 mins
August 20, 2025

Kanmani
மலையை ஆக்கிரமிக்கும் காங்கிரீட்காடுகள்... சரிக்கும் இயற்கை!
மனிதர்களின் நாசவேலை வகைவகையாய் தொடர்வதால் இயற்கையின் சீற்றம் பலவிதமாக வெளிப்படுகிறது.
2 mins
August 20, 2025

Kanmani
என்னவாகும் தமிழ்நாடு?
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.
4 mins
August 20, 2025

Kanmani
SQR தெரியுமா?
படிச்சது நல்லா நினைவில் இருக்கணும்னா என்ன செய்யணும்? உங்க கேள்வியிலேயே பாதி பதில் ஒளிஞ்சிருக்கு. 'படிச்சாலே' போதும், அது தன்னால நினைவில் இருக்கும்.
4 mins
August 20, 2025

Kanmani
புரிஞ்சிக்க முடியாத கேரக்டரில் நடிக்கணும்!
முழுக்க முழுக்க பாலிவுட்டிலேயே செட்டில் ஆகி கவர்ச்சி சோலோ டான்ஸ், கன்டன்ட் உள்ள வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கிறார் தமன்னா. லவ் பிரேக் ஆன பிறகு இன்னும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் தமன்னா, கிளாமர் புகைப்படங்களை ட்வீட்டி ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.
2 mins
August 20, 2025

Kanmani
இருமனம் இணைந்திடும்...
அந்தத் திருமண மண்டபம் சட்டென நிசப்தமானது. சற்று முன்பு வரை மேளதாளத்தோடும் உறவினர்களின் கலகலப்பான உபசரிப்போடும் தடபுடல் விருந்தோடும்பரபரப்பாய் இருந்த மண்டபம் சில நிமிட கலவரத்தில் கப்சிப்பானது.
4 mins
August 20, 2025

Kanmani
சிவன் கோவிலுக்கு சண்டை போடும் தாய்லாந்து - கம்போடியா?
ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம், இந்தியா-பாகிஸ்தான் போர்களைத் தொடர்ந்து தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது தாய்லாந்து-கம்போடியா இடையிலான மோதல்தான்.
4 mins
August 20, 2025

Kanmani
பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி மூலம்... \"பெண்களே நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள்.
3 mins
August 20, 2025

Kanmani
தக்காளியிலிருந்து உருவானதா உருளைக்கிழங்கு?
இந்தியாவில், 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது.
1 mins
August 20, 2025
Translate
Change font size