Intentar ORO - Gratis
லஞ்சம்: எம்.பி., எம்எல்ஏக்களுக்கு சட்ட பாதுகாப்பு கடையாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Dinamani Chennai
|March 05, 2024
‘நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் வாக்களிக்கவோ அல்லது குறிப்பிட்ட விஷயத்தை பேசவோ உறுப்பினா்கள் லஞ்சம் பெறுவது குற்றமாகும்; எனவே, குற்றவியல் விசாரணையில் இருந்து அவா்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அதிரடியாக தீா்ப்பளித்தது.
-
மேலும், நாடாளுமன்றம், பேரவை உறுப்பினா்கள் லஞ்சம் வாங்குவதும் ஊழலில் ஈடுபடுவதும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையை சிதைத்துவிடும்; உறுப்பினா்கள் லஞ்சம் பெறுவது, நாடாளுமன்ற சிறப்புரிமைகளின்கீழ் பாதுகாக்கப்பட்டதல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இத்தகைய லஞ்ச குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் உறுப்பினா்களுக்கு சட்ட பாதுகாப்பை உறுதி செய்து, கடந்த 1998-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்திருந்தநிலையில், அந்தத் தீா்ப்பை சுமாா் 25 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் இப்போது ரத்து செய்துள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கியுள்ளது.
வழக்கு விவரம்: கடந்த 1993-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவரப்பட்டபோது, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவா் சிபு சோரன் உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்கள் சிலா் லஞ்சம் பெற்றுக் கொண்டு, தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த எம்.பி.க்களின் ஆதரவால் நரசிம்ம ராவ் அரசு தப்பியது.
இதைத் தொடா்ந்து, சிபு சோரன் உள்பட அக்கட்சி எம்.பி.க்கள் 5 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 105 (2), 194 (2) பிரிவுகளின்கீழ், குற்றவியல் விசாரணையில் இருந்து உறுப்பினா்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதாக குறிப்பிட்டு, சிபு சோரன் உள்ளிட்டோா் மீதான வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமா்வு கடந்த 1998-ஆம் ஆண்டில் ரத்து செய்தது.
Esta historia es de la edición March 05, 2024 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
கனரா வங்கி லாபம் 10% குறைவு
நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் தனது நிகர லாபம் 10 சதவீதம் குறைந்து, ரூ.
1 min
May 12, 2026
Dinamani Chennai
சூரிய சக்தியில் சென்னை ரயில்வே கோட்டம் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி
சூரிய சக்தி மூலம் சென்னை ரயில்வே கோட்டம் 2025-2026ஆம் ஆண்டில் மட்டும் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Chennai
எம்.ஜி.ஆர். திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவன 4 ஆண்டு பட்டப் படிப்பு
மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்
1 min
May 12, 2026
Dinamani Chennai
கிருஷ்ணகிரி அருகே கார் மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்
கேரளத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு
1 min
May 12, 2026
Dinamani Chennai
வேதாரண்யம் அருகே சிப்காட் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பான பழைய கோப்புகளுடன் ஆய்வுக்குச் சென்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளை திங்கள்கிழமை கிராமத்தினர் சிறைபிடித்தனர்.
1 min
May 12, 2026
Dinamani Chennai
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Chennai
திருமலையில் 85,942 பக்தர்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 85,942 பக்தர்கள் தரிசத்தனர்.
1 min
May 12, 2026
Dinamani Chennai
தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா?: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வென்றுவிட்டு, தார்மிக அடிப்படையில் வெளியில் இருந்து தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அதன் அமைச்சரவையில் இடம்பெறுவது சரியாக இருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்தது.
1 min
May 12, 2026
Dinamani Chennai
ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றார்.
1 min
May 12, 2026
Dinamani Chennai
சென்னை ஐஐடியில் பிஎஸ் படிப்பு: மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை ஐஐடியில் பிளஸ் 2 முடித்த அனைவரும் படிக்கக் கூடிய பிஎஸ் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
1 min
May 12, 2026
Listen
Translate
Change font size
