Try GOLD - Free
எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!
Penmani
|August 2025
சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:

தங்களது பிறந்த ஊர், பெற்றோர் மற்றும் குடும்ப விபரங்கள்?
சென்னையில் பிறந்து வளர்ந்தவள் நான் பி.எஸ். செகண்டரி ஸ்கூலில் பள்ளிப் படிப்பை முடித்து, எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்து, முதுகலைப் பட்டத்தை லயோலா கல்லூரியில் பெற்றேன். எங்கள் குடும்பத்தில், சங்கீதம் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். என் இரண்டு பாட்டிகளும் நன்றாகப் பாடுவார்கள். தாய்வழிப் பாட்டி திருமதி சங்கரி (ராஜம் நாகராஜன்) ஆல் இந்தியா ரேடியோவில் கிரேடட் (graded) ஆர்டிஸ்ட்டாக இருந்தார் எனது சகோதரர் மற்றும் கசின்ஸ் என எல்லோருமே சங்கீதம், வயலின் அல்லது மிருதங்கம் வாசிப்பதில் பயிற்சி பெற்றவர்கள். எங்கள் குடும்பத்தில் ஒருவராக, இசை வாழ்ந்தது.
எந்த வயதில் இசை மற்றும் வயலின் பயின்றீர்கள்?
ஒன்பதாவது வயதில், தாய்வழிப் பாட்டி திருமதி சங்கரி நாகராஜனிடமிருந்து இசையைப் பயின்றேன். வயலினை, விட்டல் ராமமூர்த்தி சாரிடம் கற்றேன். என்னுடைய பெற்றோர்கள், குறிப்பாக தாயார், எனது இசைப் பயணத்திற்கு முதுகெலும்பு போல விளங்கினார், எப்போதும் ஊக்கமளிப்பதுடன், சங்கீதத்தின் மீது எனக்கிருந்த பற்றை வளர்த்தார். அரங்கேற்றம் என முறையாக நடக்கவில்லை எஸ்.வி. கிருஷ்ணன் மாமாவின் வற்புறுத்தலின் பேரில் 1997 ஆம் ஆண்டு “நாத இன்பம்“ அமைப்பில் வாசித்தேன். குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவின் நிகழ்வு விடிஎஸ் ஆர்ட்ஸ் அகாடமியில் நடைபெறுகையில், அவருக்கு பக்க வாத்தியமாக வயலினை முதல் முறையாக இசைத்தேன். இவ்விரண்டு நிகழ்வுகளும் மனதில் நீங்காமல் இருப்பவைகளெனலாம்.

தாய் வழி பாட்டியாகிய திருமதி சங்கரி நாகராஜன் தான் எனது முதல் குரு எனலாம். ஆரம்ப சங்கீதத்திற்கு அடித்தளம் அமைத்தவர். பின்னர் அநேக சிறந்த குருக்களிடமிருந்து பயிற்சி பெற்றது என்னுடைய இசைப் பயணத்தை அழகாக வடிவமைக்க உதவியது நான் செய்த பாக்கியம்.
This story is from the August 2025 edition of Penmani.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Penmani

Penmani
ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!
பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.
1 min
August 2025

Penmani
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!
ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.
4 mins
August 2025
Penmani
வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!
பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.
1 min
August 2025

Penmani
எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!
சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:
4 mins
August 2025

Penmani
அரபிக் கடலின் ராணி கொச்சி!
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.
3 mins
August 2025

Penmani
குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...
மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.
1 mins
August 2025

Penmani
கருணை நிறைந்த கிழங்கு!
கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.
1 mins
August 2025

Penmani
சம்யுக்கையின் வேம்புலி.!
கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.
4 mins
August 2025

Penmani
தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!
தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.
2 mins
August 2025

Penmani
விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
2 mins
August 2025
Translate
Change font size