Try GOLD - Free
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தும் இந்தியத் தரப்பு
Virakesari Daily
|September 18, 2025
மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்து தாமதமடைந்து வருகிற நிலையில் அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக் கவையுடன் சந்தித்து பேச்சு நடத்திய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்ததாகத் தெரியவருகிறது.
அதுமட்டுமன்றி இந்தச் சந்திப்பின் போது 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம், அதேபோல இலங்கையில் இந்தியா மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின் விரைவுத்தன்மை உள்ளிட்டவை தொடர்பாகவும் பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
அண்மையில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 60ஆவது கூட்ட தொடர் ஆரம்பமானது.
அதில் ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரின் இலங்கை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், உரையாற்றிய ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதி, இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதுடன் மாகா ண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையிலேயே கடந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மாகாண சபை இதேவேளை மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற உறுதியை இலங்கை தரப்பினர் இந்திய தரப்புக்கு வழங்கியதார்க்கவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வருடம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்தலை இவங்க விரைவாக நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்தியா, தற்போதைய நிலையில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இலங்கையில் மேற்கொண்டு வருகிறது. காங்கேசந்துறைமுக அபிவிருத்தி, பருத்தித்துறை மீன்பிடித்துறை அபிவிருத்தி மற்றும் திருகோணமலையில் சம்பூர் சூரிய ஒளி மின்திட்டம், வடக்கில் மூன்று தீவுகளில் கலப்பு மின்உற்பத்தித் திட்டம், மலையகத்தில் வீடமைப்புத் திட்டங்கள்.
மன்னார் வைத்தியசாலை அபிவிருத்தித் திட்டம் உள்ளீட்ட பல்வேறு வேலைத் திட் டங்கள் தொடர்பாகவும் இலங்கை‑இந்திய தரப்புகள் தொடர்ச்சியாக பேச்சுக்களை நடத்தி வருகின்றன.
This story is from the September 18, 2025 edition of Virakesari Daily.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
