Try GOLD - Free
பழைமையும் அற்புதங்களும் கொண்ட தம்பலகாமம் ஆதிகோணநாயகர் திருக்கோயில்
Virakesari Daily
|August 05, 2025
இலங்கையைச் சிவபூமி என்றார் திருமந்திரம் தந்த திருமூலர். இவ்வாறு போற்றப்பட்ட இத்தீவில் பழம்பெரும் வழிபாட்டிடங்கள் ஐந்து இருந்தமைக்கு கட்டியம் கூறி நிற்கின்றது புத்த துறவிகளால் எழுதப்பட்ட மகாவம்சம் எனும் நூல்.
-
புத்தரின் அவதாரத்தின் போது இலங்கையில் விஜயன் கரையொதுங்கினான் என்றும், அவனுடன் உபதிஸ்ஸன் என்ற பிராமணனும் இருந்தானென்றும், இலங்கையில் நாலாதிசைகளிலு மிருந்த ஐந்து சிவாலயங்களை சென்று தரிசித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது இற்றைக்கு 2554 ஆண்டுகளுக்கு முன் புத்தர் பிறந்த காலத்தில் இலங்கையில் ஐந்து சிவாலயங்கள் இருந்தமை மகாவம்சத்தின் மூலம் உறுதியாகின்றது.
வடக்கே நகுலேஸ்வரம், கிழக்கே கோணேஸ்வரம், தெற்கே தொண்டீஸ்வரம், மேற்கே கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் ஆகியவையே உபதிஸ்ஸன் சென்று வழிபட்ட பஞ்சேஸ்வரங்கள் எனப்படும் சிவாலயங்கள் ஐந்துமாகும்.
இவ்வாறு பழைமையும், பெருமையும் கொண்ட ஐந்து சிவாலயங்களில் ஒன்றாக திருகோணமலையிலுள்ள திருக்கோணேஸ்வரம் விளங்குகின்றது. இதன் மூலம் இப்பிராந்தியம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, அதாவது உலகில் வழக்கிலுள்ள வேறு சமயங்கள் எதுவும் தோற்றம் பெறாத காலத்தில் இந்து சமயத்தவரின் புனித பூமியாகவும் பண்டைய இருப்பின், சிறப்பின் ஆதாரமாகவும் விளங்குகிறது.
ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் தேவாரத் திருப்பதிகம் பாடப்பெற்ற திருக்கோணேஸ்வர திருத்தலத்துடன் வரலாற்று ரீதியாகத் தொடர்புபட்டதாக தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் விளங்குகின்றது. இதிகாச காலமான இராமாயண காலத்துடன் அதாவது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்துடன் தொடர்புகொண்டதாகக் கொள்ளப்படும் திருக்கோணேசர் ஆலயத்தை கி.மு. 1300 ஆண்டளவில் இப்பகுதியை ஆட்சி செய்த மனுராசா என்கின்ற தமிழ் அரசன் திருப்பணி செய்வித்ததாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான சிறப்புக்கொண்ட இச்சிவாலயம் கி.பி. 1624 இல் போர்த்துக்கேயரால் சிதைத்தழிக்கப்பட்டது. திருக்கோணேஸ்வரத்தை போர்த்துக்கேயப் படையினர் சிதைக்க முற்பட்ட வேளை அங்கிருந்த தெய்வத் திருவுருவங்களை அடியார்கள் எடுத்துச் சென்று கிணறுகளிலும், காடுகளிலும் மறைத்து வைத்தனர். அவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட விக்கிரகங்களில் சில தம்பலகாமத்துக்கு மேற்கேயுள்ள சுவாமிமலை என்று அழைக்கப்படும் இடத்திலும் கொண்டு செல்லப்பட்டு மறைத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதுடன் வழிபாடுகளும் செய்யப்பட்டன.
This story is from the August 05, 2025 edition of Virakesari Daily.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
