Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கண்ணியக் காவலர் கக்கன்ஜி!

Dinamani Tiruvarur

|

June 18, 2025

மதுரை அரசு மருத்துவமனையில் கக்கன்ஜி சிகிச்சை பெற்றபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவரைச் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். "என்ன உதவி உங்களுக்கு வேண்டும்?" என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது, "உங்கள் அன்பு மட்டும் போதும்" என்றார் கக்கன்ஜி.

- புலவர் வே.பதுமனார்

வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்ட, ஜாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, இந்தியத் திருநாட்டில் தமிழ்நாட்டின் மதுரை மேலூரை ஒட்டிய சிற்றூர் தும்பைப்பட்டியைத் தனது பிறப்பால் தூய்மைப்பட்டி ஆக்கியவர் கக்கன்ஜி. 1909-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 18-ஆம் நாளில் சிதைந்த மண்சுவர், செல்லரித்த கூரை வீட்டில், பூசாரி கக்கனுக்கும் தாய் குப்பிக்கும் பிறந்த குழந்தை; படிப்பு கைவிட்டாலும், உழைப்பால் உயர்ந்து, விடுதலைப் போராட்டக் களத்துத் தளபதியாக, சிறைத் தண்டனையும் கசையடியும் பெற்று, மக்களவை உறுப்பினராக, தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சராகத் தொண்டாற்றிய அந்தத் தூயவர். கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடித்து ஐந்து மகன்களும் ஒரு மகளும் அவருக்கு வாரிசாக வாய்த்தனர்.

வாழ்வில் திருப்பம் - காங்கிரஸ் கட்சிப் பணிகளில் விருப்பம்; தம் வாழ்வின் முன்னோடியாக வரித்துக்கொண்ட தியாகி மதுரை வைத்தியநாத ஐயர் முன்னிலையில் கக்கன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனார். காந்திய வழியில் பொதுத் தொண்டு புரிய விழைந்தார். 1939-ஆம் ஆண்டில் முனைப்பாகச் செயல்பட்டார்.

விடுதலைப் போராட்டம் தீவிரமான போது 'வந்தே மாதரம்' என்று அச்சிட்ட துண்டு அறிக்கைகளை மக்களிடையே வழங்கினார். இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவரைக் கைது செய்து 15 நாள்கள் சிறைத்தண்டனை விதித்தனர். விடுதலை ஆனதும் கக்கன் முன்னிலும் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றினார். புதிய இளைஞர்களைக் காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்தார். இதைக் கேள்விப்பட்ட அண்ணல் காந்தி, கக்கனைத் தனிநபர் சத்தியாகிரகப் போரின் தலைமைத் தளபதியாக நியமித்தார். இதை அறிந்த அரசு அவரைக் கைது செய்து கடுங்காவல் தண்டனை விதித்தது.

கசையடியும், சிறைக் கொடுமையும் அனுபவித்து வெளியே வந்த மறுநாளே, கக்கனுக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பைத் தலைமை வழங்கியது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தால் நாடெங்கும் கலவரம் மூண்டது. காங்கிரஸ் இயக்கத்தை வெள்ளையர் ஆட்சி தடை செய்தது. ஆனால், தம் நண்பர்கள் பழனிசாமி, ராமசாமி ஆகியோருடன் கக்கன் தலைமறைவானார்.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இஷான், சூர்யகுமார் அதிரடி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

January 24, 2026

Dinamani Tiruvarur

தே.ஜ. கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்

கூட்டணிக் கட்சி தலைவர்கள்

time to read

1 mins

January 24, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பிரதமர் பொதுக்கூட்ட மேடையில் மாம்பழ சின்னம்: ராமதாஸ் எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட மேடையில் மாம்பழம் சின்னத்தைப் பயன்படுத்தியது அதிகார துஷ்பிரயோகம் என பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் கூறியுள்ளார்.

time to read

1 min

January 24, 2026

Dinamani Tiruvarur

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: குற்றஞ்சாட்டப்பட்ட நபருடன் பல முறை சந்திப்பு: காங்கிரஸ் மூத்த தலைவர் ஒப்புதல்

தேவஸ்வம் முன்னாள் நிர்வாகத் தலைவருக்கு ஜாமீன்

time to read

1 min

January 24, 2026

Dinamani Tiruvarur

பியோன் போர்க் சாதனையை சமன் செய்த அல்கராஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

time to read

1 min

January 24, 2026

Dinamani Tiruvarur

எம்.பி.பி.எஸ் சேர்க்கை விவரம்: ஜன.31 வரை அவகாசம்

நிகழ் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்க்கப்பட் டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணைய வழியே வரும் 31ஆம் தேதி வரை பதிவேற்றலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 24, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி

'தமிழகம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது; இரட்டை என்ஜின் ஆட்சி உறுதியாகிவிட்டது' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 mins

January 24, 2026

Dinamani Tiruvarur

ஜன.27-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு

time to read

1 min

January 24, 2026

Dinamani Tiruvarur

வன விலங்குகளின் வாழ்விட உரிமை!

பல்லுயிர் வளம் மிக்கத் தமிழகத்தின் வனங்கள், இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உயிர்வாழும் போராட்டக் களமாக மாறியுள்ளன.

time to read

2 mins

January 22, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக

பியூஷ் கோயல்-டி.டி.வி.தினகரன் சந்திப்பில் உடன்பாடு

time to read

1 mins

January 22, 2026

Translate

Share

-
+

Change font size