Intentar ORO - Gratis
கண்ணியக் காவலர் கக்கன்ஜி!
Dinamani Tiruvarur
|June 18, 2025
மதுரை அரசு மருத்துவமனையில் கக்கன்ஜி சிகிச்சை பெற்றபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவரைச் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். "என்ன உதவி உங்களுக்கு வேண்டும்?" என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது, "உங்கள் அன்பு மட்டும் போதும்" என்றார் கக்கன்ஜி.
வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்ட, ஜாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, இந்தியத் திருநாட்டில் தமிழ்நாட்டின் மதுரை மேலூரை ஒட்டிய சிற்றூர் தும்பைப்பட்டியைத் தனது பிறப்பால் தூய்மைப்பட்டி ஆக்கியவர் கக்கன்ஜி. 1909-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 18-ஆம் நாளில் சிதைந்த மண்சுவர், செல்லரித்த கூரை வீட்டில், பூசாரி கக்கனுக்கும் தாய் குப்பிக்கும் பிறந்த குழந்தை; படிப்பு கைவிட்டாலும், உழைப்பால் உயர்ந்து, விடுதலைப் போராட்டக் களத்துத் தளபதியாக, சிறைத் தண்டனையும் கசையடியும் பெற்று, மக்களவை உறுப்பினராக, தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சராகத் தொண்டாற்றிய அந்தத் தூயவர். கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடித்து ஐந்து மகன்களும் ஒரு மகளும் அவருக்கு வாரிசாக வாய்த்தனர்.
வாழ்வில் திருப்பம் - காங்கிரஸ் கட்சிப் பணிகளில் விருப்பம்; தம் வாழ்வின் முன்னோடியாக வரித்துக்கொண்ட தியாகி மதுரை வைத்தியநாத ஐயர் முன்னிலையில் கக்கன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனார். காந்திய வழியில் பொதுத் தொண்டு புரிய விழைந்தார். 1939-ஆம் ஆண்டில் முனைப்பாகச் செயல்பட்டார்.
விடுதலைப் போராட்டம் தீவிரமான போது 'வந்தே மாதரம்' என்று அச்சிட்ட துண்டு அறிக்கைகளை மக்களிடையே வழங்கினார். இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவரைக் கைது செய்து 15 நாள்கள் சிறைத்தண்டனை விதித்தனர். விடுதலை ஆனதும் கக்கன் முன்னிலும் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றினார். புதிய இளைஞர்களைக் காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்தார். இதைக் கேள்விப்பட்ட அண்ணல் காந்தி, கக்கனைத் தனிநபர் சத்தியாகிரகப் போரின் தலைமைத் தளபதியாக நியமித்தார். இதை அறிந்த அரசு அவரைக் கைது செய்து கடுங்காவல் தண்டனை விதித்தது.
கசையடியும், சிறைக் கொடுமையும் அனுபவித்து வெளியே வந்த மறுநாளே, கக்கனுக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பைத் தலைமை வழங்கியது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தால் நாடெங்கும் கலவரம் மூண்டது. காங்கிரஸ் இயக்கத்தை வெள்ளையர் ஆட்சி தடை செய்தது. ஆனால், தம் நண்பர்கள் பழனிசாமி, ராமசாமி ஆகியோருடன் கக்கன் தலைமறைவானார்.
Esta historia es de la edición June 18, 2025 de Dinamani Tiruvarur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை
சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
நடுக்கடலில் 6 நாள்களாக தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு
என்ஜின் பழுதானதால் நிகழ்ந்த சோகம்
1 mins
June 09, 2026
Dinamani Tiruvarur
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Tiruvarur
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Tiruvarur
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Tiruvarur
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Translate
Change font size
