Try GOLD - Free
விழிப்புணர்வு இல்லாத மலைக் கிராம மக்கள்: சவாலாகும் மகப்பேறு சிகிச்சை
Dinamani Tiruppur
|July 21, 2025
ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் மகப்பேறு சிகிச்சையில் சுகாதாரத்துறை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
ஈரோடு, ஜூலை 20:
பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதை தீவிரமாக ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வின்படி, தமிழகத்தில் 99.6 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் பிரசவமும் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக கிராமங்களில் இந்தக் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.
ஆனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துமனைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே பிரசவம் பார்க்கும் நிலை இப்போதும் தொடர்வதால் பிரசவ காலத்தில் தாய்-சேய் உயிரிழப்பும் நிகழ்கிறது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம் சோளகர் தொட்டி கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 25 வயதுப் பெண் இரண்டாவது பிரசவத்துக்கு கடந்த 7-ஆம் தேதி பைனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் நாள் குறித்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி முதல் அவர் குடும்பத்துடன் மாயமாகிவிட்டார். காவல் துறையினருடன் இணைந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரைத் தேடி வரும் நிலையில் இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
முதல் பிரசவத்துக்கே மருத்துவமனைக்கு வருவதற்கு தயக்கம் காட்டிய அந்தப் பெண்ணை சுகாதாரத் துறை அலுவலர்கள் வற்புறுத்தி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் ஆனது. இரண்டாவது முறை கருவுற்றதில் இருந்து சுகாதாரத் துறை பணியாளர்கள் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மகப்பேறு பரிசோதனைகளுக்கு அவர் தவறாமல் வந்தார். பிரசவ நேரத்தில் அவரைக் காணவில்லை.
This story is from the July 21, 2025 edition of Dinamani Tiruppur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruppur
Dinamani Tiruppur
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Tiruppur
மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் புதன்கிழமை பதவியேற்றனர்.
1 min
May 14, 2026
Dinamani Tiruppur
மேற்குத் தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்ட டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக் கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 mins
May 14, 2026
Dinamani Tiruppur
உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்
தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ. ஜி. யாக அஸ்ரா கார்க் புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
May 14, 2026
Dinamani Tiruppur
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Tiruppur
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tiruppur
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruppur
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Translate
Change font size
