Try GOLD - Free
இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு
Dinamani Erode & Ooty
|May 21, 2025
காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரித்துவருகிறது.
-
லண்டன்/பிரெஸ்ஸெல்ஸ்/ஜெருசலேம், மே 20:
இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் பிரிட்டன் நிறுத்திவைத்துள்ளது.
மேலும், இஸ்ரேலுடனான உறவை மறுபரிசீலனை செய்வதற்காக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
காஸாவில் கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஒப்பந்தம் கடந்த ஜன. 19 முதல் மார்ச் 18-ஆம் தேதி வரை அமலில் இருந்தது.
அப்போது, ஹமாஸின் பிடியில் இருந்த 25 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் சிறைகளில் இருந்த சுமார் 1,900-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
இருந்தாலும், அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் காஸா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.
அதற்குப் பிறகு மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 1,563 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர் (ஒட்டுமொத்த உயிரிழப்பு 53,573).
அதுமட்டுமின்றி, காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்வதற்கும் இஸ்ரேல் தடை விதித்தது.
காஸாவின் அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இஸ்ரேல் அங்கு தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், தொடரும் உணவுப் பற்றாக்குறையால் காஸா பகுதி மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துவருகிறது.
This story is from the May 21, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
தீபாவளி மலர்கள் 2025
கலைமகள் தீபாவளி மலர் 2025கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன்; பக்.222; ரூ.200, சென்னை-600 028, 044-2498 1699.
5 mins
October 27, 2025
Dinamani Erode & Ooty
மழைக்கால விபத்துகளைத் தவிர்ப்போம்!
தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவ மழையால் சராசரி மழையின் அளவைவிட 27% அதிக மழைப் பொழிவு இருந்தது. இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையின் அளவு இயல்பை விட 8% அதிகம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித் துள்ளது. இவற்றின் அடிப்படையில், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை யின் அளவும் சராசரி அளவைவிட அதிக அளவில் பெய்யக்கூடும்.
2 mins
October 27, 2025
Dinamani Erode & Ooty
ஆசிய இளையோர் கபடியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம்
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ், கார்த்திகா ரமேஷ் ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
1 min
October 27, 2025
Dinamani Erode & Ooty
மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது
பட்டுக்கோட்டை அருகே ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
October 27, 2025
Dinamani Erode & Ooty
வீணாகும் விளைச்சல்!
இந்தியா ஒரு விவசாய நாடு; கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று மகாத்மா காந்தி கூறினார். அவர்கள் தங்களுக்காக வாழவில்லை; அனைத்து மக்களுக்காகவும் உழைக்கிறார்கள். ஆனால், அந்த விவசாயமும் விவசாயிகளும் படும்பாடு என்னென்பது?
2 mins
October 27, 2025
Dinamani Erode & Ooty
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பலலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
1 mins
October 27, 2025
Dinamani Erode & Ooty
அன்புள்ள ஆசிரியருக்கு...
முகாம்கள் தேவை
1 min
October 27, 2025
Dinamani Erode & Ooty
ஏ.ஐ. தரும் வேலைத் தளர்ச்சி
'செயற்கை நுண்ணறிவு' எனப்படும் 'ஏ.ஐ.' எவ்வளவு வேகத்தில் அனைத்துத் துறைகளிலும் இப்போது ஊடுருவிவிட்டதோ, அதே வேகத்தில் அது தந்திருக்கும் புதிய வார்த்தையும் உலகெங்கும் இப்போது பரவி வருகிறது. அதுதான் 'ஒர்க் ஸ்லாப்' அல்லது 'ஏ.ஐ. ஸ்லாப்'. இதன் பொருள் ஏ.ஐ-யினால் வரும் வேலைத் தளர்ச்சி!
1 min
October 26, 2025
Dinamani Erode & Ooty
நல்லாசானாய் - வழிகாட்டியாய்!
பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீமை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அவருடைய எழுத்துகள் இன்றைய தலைமுறைக்கும் புரியும்.
2 mins
October 26, 2025
Dinamani Erode & Ooty
பாட்டிகள் படிக்கும் பள்ளி
பள்ளி என்றால் சிறுவர், சிறுமிகள்தான் படிப்பார்கள் என்பதில்லை. இளம்வயதில் படிக்க வாய்ப்புக் கிடைக்காத 'கை நாட்டுப் பெண்களும், மூதாட்டிகளும் முறைசாரா பள்ளியில் சேர்ந்து படிக்கலாம்.
1 mins
October 26, 2025
Translate
Change font size

