Poging GOUD - Vrij
இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு
Dinamani Erode & Ooty
|May 21, 2025
காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரித்துவருகிறது.
-
லண்டன்/பிரெஸ்ஸெல்ஸ்/ஜெருசலேம், மே 20:
இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் பிரிட்டன் நிறுத்திவைத்துள்ளது.
மேலும், இஸ்ரேலுடனான உறவை மறுபரிசீலனை செய்வதற்காக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
காஸாவில் கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஒப்பந்தம் கடந்த ஜன. 19 முதல் மார்ச் 18-ஆம் தேதி வரை அமலில் இருந்தது.
அப்போது, ஹமாஸின் பிடியில் இருந்த 25 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் சிறைகளில் இருந்த சுமார் 1,900-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
இருந்தாலும், அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் காஸா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.
அதற்குப் பிறகு மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 1,563 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர் (ஒட்டுமொத்த உயிரிழப்பு 53,573).
அதுமட்டுமின்றி, காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்வதற்கும் இஸ்ரேல் தடை விதித்தது.
காஸாவின் அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இஸ்ரேல் அங்கு தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், தொடரும் உணவுப் பற்றாக்குறையால் காஸா பகுதி மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துவருகிறது.
Dit verhaal komt uit de May 21, 2025-editie van Dinamani Erode & Ooty.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு
வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Erode & Ooty
லாப நோக்க விற்பனையால் சரிந்த பங்குச் சந்தை
லாப நோக்க விற்பனை மற்றும் ஆசிய சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
October 29, 2025
Dinamani Erode & Ooty
பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...
இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.
3 mins
October 29, 2025
Dinamani Erode & Ooty
அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து
குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.
1 min
October 29, 2025
Dinamani Erode & Ooty
புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
1 min
October 29, 2025
Dinamani Erode & Ooty
தமிழில் மட்டுமே பேசுவோம்!
மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.
3 mins
October 28, 2025
Dinamani Erode & Ooty
ஐஓசி நிகர லாபம் பன்மடங்கு உயர்வு
அதிகரித்த சுத்திகரிப்பு லாப விகிதங்கள் மற்றும் செயல் திறன் காரணமாக, அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) செப்டம்பர் காலாண்டில் பன்மடங்கு நிகர லாப உயர்வைப் பதிவு செய்தது.
1 min
October 28, 2025
Dinamani Erode & Ooty
30 நிமிட இடைவெளியில் போர் விமானம், ஹெலிகாப்டரை இழந்தது அமெரிக்கா
அமெரிக்காவின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்த ஒரு போர் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும், வெறும் 30 நிமிஷ இடைவெளியில் தனித்தனியாக விபத்துக்குள்ளாகி தென் சீன கடல் பகுதியில் விழுந்தன.
1 min
October 28, 2025
Dinamani Erode & Ooty
அன்புள்ள ஆசிரியருக்கு...
மேடைகளில் பேசத் தொடங்கும் காலத்தில் தயக்கம் ஏற்படுவது இயல்புதான் (‘தயக்கம் வேண்டாம்...’- துணைக் கட்டுரை- பெ. சுப்ரமணியன், 20.10.25). பள்ளிகளில் பல வகைப் போட்டிகள் நடத்துவதன் மூலம் தயக்கம் தவிர்க்கப் பயிற்றுவிக்கப்படுகிறது. மனிதர்களுக்கிடையே பிரச்னைகள் தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஆனால், வெளிப்படையான விவாதம், மனம் திறந்த கலந்துரையாடல் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும். நல்ல நூல்களை வாசிப்பதும், நல்ல சிந்தனைக்குப் பழக்கப்படுவதுமே மனம் திறந்த கலந்துரையாடலுக்கும் கருத்தொற்றுமைக்கும் மன இருள் அகன்று அன்பு ஒளிவீசவும் வழிகோலும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதைவிட மகிழ்ச்சியாக வாழ்வதற்கே என்பதை மனதில் கொண்டால் ஆலம் விதைக்கு சுவர் வழிவிடாது.
1 min
October 28, 2025
Dinamani Erode & Ooty
நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்
தமிழகம், புதுவை உள்பட 12 மாநிலங்களில் தொடக்கம்
1 mins
October 28, 2025
Translate
Change font size

