Try GOLD - Free
ஈதலும் இசைபட வாழ்தலும்...
Dinamani Dindigul & Theni
|November 16, 2025
ஈகை என்பது தமிழர்கட்கு புதிதல்ல; சங்க காலத் தமிழரிடத்து வீரம், காதல், ஈகை என்ற விழுமியங்கள் ரத்தத்தோடு கலந்தவையாக இருந்தன. தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்க்கையில் அகத்தில் காதலும், கருணையும் நிரம்பி வழிந்தன. புறத்திலோ வீரம் துள்ளி விளையாடி நின்றது. இவ்வரிய புகழாய்ந்த பீடுயர் பெருமைகளை விளக்கவல்ல பனுவல்கள்தாம் அகநானூறும் புறநானூறும்.
அத்தகைய பண்டைநாள் தமிழர்கள் வாழ்வில் குறிப்பாக நயம்புகழ, கவிவளம் சுரக்க பாடல் பாடிய புலவர்கள் சில சமயங்களில் வறுமையுற்ற போதும், ஈகையில் குறைந்தார்கள் இல்லை என்பதை, ஒரு காட்சி மெய்ப்படுத்தி இயம்புகிறது.
பெருஞ்சித்திரனார் என்றதொரு புலவர் தமது குடும்பச் சூழ்நிலையை மன்னன் குமணன் பால் எடுத்துரைக்கும் போது, 'பல ஆண்டுகள் யான் வாழ்ந்து விட்டேன், இன்னும் என் உயிர் கழியாது இருக்கிறதே' என்று அரற்றி ஒவ்வொரு நாளையும் போக்கும் துயருற்ற நிலையில் ஊன்று கோலையே காலாகக் கொண்டு நடக்கும், என் தாயின் தலை பஞ்சுவிரித்தாற்போல் நரையுடையவள். கண் மலர்கள் கசங்கிய நிலையில் வீட்டின் முன்புற வாசலுக்கு வர இயலாதவள்.
பசலை படர்ந்த மேனியுடன், மனத்துயரால் நினைவு தடுமாற பக்கத்தில் இருக்கும் பச்சிளம் குழந்தை பால் உண்ண விரும்பும் வாடிய மார்பை உடைய என் மனைவி குப்பை மேட்டில் முன்பே பறிக்கப்பட்ட கீரைத்தண்டின் அடிப்பாகத்தில் புதிதாகத் துளிர்த்திருக்கும் இளந்தளிர்களைப் பறித்து அவற்றை உப்பிடாமல் வெறும் நீரில் உலையில் இட்டு காய்ச்சி சோற்றை மறந்த நிலையில் பச்சை இலையையே உணவாகக் கொள்ளுபவள், அரைகுறை ஆடையும் அழுக்கேறிய நிலையிலும் அறக்கடவுளை மறவாத அன்புடையவள்.
This story is from the November 16, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
காலத்தை வென்ற மரபுக் கவிதை!
மரபுக் கவிதை பல நூற்றாண்டுப் பாரம்பரியத்தை உடையது. பல்லாண்டு காலமாக இலக்கணக் கட்டுக்குள் நின்று கவிதை புனைந்து அதில் படைப்பின் முழுச் சுதந்திரத்தையும் அனுபவிப்பவர்கள் மரபுக் கவிஞர்கள்.
1 min
November 16, 2025
Dinamani Dindigul & Theni
ஈதலும் இசைபட வாழ்தலும்...
ஈகை என்பது தமிழர்கட்கு புதிதல்ல; சங்க காலத் தமிழரிடத்து வீரம், காதல், ஈகை என்ற விழுமியங்கள் ரத்தத்தோடு கலந்தவையாக இருந்தன. தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்க்கையில் அகத்தில் காதலும், கருணையும் நிரம்பி வழிந்தன. புறத்திலோ வீரம் துள்ளி விளையாடி நின்றது. இவ்வரிய புகழாய்ந்த பீடுயர் பெருமைகளை விளக்கவல்ல பனுவல்கள்தாம் அகநானூறும் புறநானூறும்.
2 mins
November 16, 2025
Dinamani Dindigul & Theni
விலைவாசி உயர்வு: மாட்டிறைச்சிக்கு இறக்குமதி வரியைக் குறைத்தார் டிரம்ப்
அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் மாட்டிறைச்சி, காபி உள்ளிட்ட ஏராளமான உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியை நீக்குவதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
1 min
November 16, 2025
Dinamani Dindigul & Theni
திரைப்படத் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்
இந்தியத் திரை உலகின் மூத்த கலை இயக்குநரான தோட்டா தரணி, சென்னை கவின் கலைக் கல்லூரியில் பயின்றவர். தனது திரையுலகப் பயணத்தில் அவரது நினைவில் நிற்கும் காட்சிகள், மனிதர்கள், இடங்கள் அனைத்தையும் வண்ணத்தில் குழைத்து ஓவியங்களாக்கி, கண்காட்சி ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்.
2 mins
November 16, 2025
Dinamani Dindigul & Theni
டொயோட்டா விற்பனை 39% அதிகரிப்பு
முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
November 16, 2025
Dinamani Dindigul & Theni
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: வெற்றிக் கோப்பைக்கு மதுரையில் வரவேற்பு
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான வெற்றிக் கோப்பைக்கு மதுரையில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min
November 16, 2025
Dinamani Dindigul & Theni
பரிசு மழையில் கிரிக்கெட் வீராங்கனைகள்!
இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி முதன் முதலாக உலகக்கோப்பையை வென்றதும், அவர்களை தங்கள் நிறுவன விளம்பரங்களில் தோன்றச் செய்ய பல வணிக நிறுவனங்களிடையே போட்டா போட்டி நடக்கிறது. அதன் காரணமாக அவர்கள் விளம்பரங்களில் தோன்ற வாங்கும் ஊதியம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
1 mins
November 16, 2025
Dinamani Dindigul & Theni
கடலை மிட்டாயால் வந்த ஓவன்
அறிவியல் கண்டுபிடிப்பு
1 mins
November 16, 2025
Dinamani Dindigul & Theni
எஸ்ஐஆர் மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெற எதிர்க்கட்சிகள் முயற்சி
'தேர்தல் வெற்றிக்காக எஸ்ஐஆர் மூலம் குறுக்கு வழியை எதிர்க்கட்சிகள் நாடுகின்றன' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
1 min
November 15, 2025
Dinamani Dindigul & Theni
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (நவ. 15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
November 15, 2025
Listen
Translate
Change font size
