Try GOLD - Free
துறந்தார் பெருமை போற்றுதும்!
Dinamani Dharmapuri
|July 09, 2025
சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு கருதாது இருப்பதோடு எல்லாவுயிரும் இன்புற்றிருப்பதற்காக தன் வாழ்வைத் தகுதிப்படுத்திக் கொள்வதே மெய்த்துறவின் அடிப்படை. எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றவர் யாரோ அவரே மெய்த்துறவி.
தமிழ்மரபு காட்டுகிற அறங்கள் இரண்டனுள் ஒன்று இல்லறம்; மற்றொன்று துறவறம். இல்லறம் துறவறத்துக்கான நல்வழி. துறவை நேரடியாக மேற்கொள்வோரும் உளர்; இல்லறத்தின் பயன்துய்த்துப் பின்னர் துறவறம் சிறந்தவரும் உளர்.
துறவு மார்க்க ஞானம் என்பது பொன்னில் பதித்த ரத்தினம் ஒக்கும்; இல்லற மார்க்க ஞானமானது இரும்பில் பதித்த ரத்தினம் ஒக்கும் என்பர் ஞானியர்.
துறவு வாழ்வு மனிதனின் ஆறாவது புலனாகிய மனதை அடக்கும் வித்தை. மனம் பற்றுகளால் துன்பத்தில் வீழும் போது, அதை உறுதி என்னும் கடிவாளத்தால் பிடித்து நிறுத்திப் பழக்குவதே சரியான துறவுப் பயிற்சியாம். இதற்கு யோகம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்தப் பயிற்சியை சிலர் தனியிடங்களிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பழகுகிறார்கள். வேறுசிலர் மூச்சைக் கட்டியும் அவயவங்களைப் பலவாறு திருப்பியும் பழகுகிறார்கள்: தனியே இருந்து ஜபம் செய்து பார்க்கிறார்கள்.
ஆனால், இவற்றிலெல்லாம் மனம் அடங்கி விடாது. உலகத்தாருடன் கூடி அவர்களைப் போலவே தொழில் செய்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங்கொடாதபடி, தன் மனத்தைக் கட்டக்கூடிய திறமைதான் துறவின் வெற்றி, மற்ற முயற்சிகளெல்லாம் வீண். தண்ணீரிலே இருந்தும் ஒட்டாது இருக்கிற தாமரை இலையைத் துறவுக்குத் தகுந்த உவமையாக்குவர்.
எல்லா சமயங்களும் துறவறத்தைச் சுட்டியபோதும், துறவு சமயம் சார்ந்தது அன்று. அது மானுடம் சார்ந்தது; உயிர்க்குலம் சார்ந்தது. மண்ணால் செய்த ஓட்டினையும் பொன்னால் செய்த அணியினை யும் ஒன்றே என்று பற்றற்று நோக்கும் நற்குணமே துறவின் சிறப்பு.
சங்க இலக்கியம் துறவைப் பேசுகிறது. காப்பியங்கள் விவரிக்கின்றன. சன்னியாசம் என்று இந்து மதம் துறவைக் குறிக்கிறது. அருளாளர்கள் பலர் துறவு போற்றியவர்கள். பௌத்தம் புத்தர் பின்பற்றிய துறவைச் சுட்டி நிர்வாணம் என்றும், முழு விடுதலை யைப் பெருந்துறவு அல்லது பரி நிர்வாணம் என்றும் குறிக்கிறது. சமணம் சாரணம் என்கிறது. கிறிஸ்தவத்தில் இயேசுவின் வாழ்க்கையே துறவின் சான்று. இஸ்லாம் இல்லறத்தை மறுக்காது பற்றில்லாப் பிணைப்பு மூலம் துறவுக்கு வழிகாட்டுகிறது.
This story is from the July 09, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்
பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்
முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 mins
January 06, 2026
Dinamani Dharmapuri
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு
முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Dharmapuri
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.
1 min
January 06, 2026
Dinamani Dharmapuri
திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
1 min
January 06, 2026
Translate
Change font size
