துறந்தார் பெருமை போற்றுதும்!
Dinamani Dharmapuri
|July 09, 2025
சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு கருதாது இருப்பதோடு எல்லாவுயிரும் இன்புற்றிருப்பதற்காக தன் வாழ்வைத் தகுதிப்படுத்திக் கொள்வதே மெய்த்துறவின் அடிப்படை. எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றவர் யாரோ அவரே மெய்த்துறவி.
தமிழ்மரபு காட்டுகிற அறங்கள் இரண்டனுள் ஒன்று இல்லறம்; மற்றொன்று துறவறம். இல்லறம் துறவறத்துக்கான நல்வழி. துறவை நேரடியாக மேற்கொள்வோரும் உளர்; இல்லறத்தின் பயன்துய்த்துப் பின்னர் துறவறம் சிறந்தவரும் உளர்.
துறவு மார்க்க ஞானம் என்பது பொன்னில் பதித்த ரத்தினம் ஒக்கும்; இல்லற மார்க்க ஞானமானது இரும்பில் பதித்த ரத்தினம் ஒக்கும் என்பர் ஞானியர்.
துறவு வாழ்வு மனிதனின் ஆறாவது புலனாகிய மனதை அடக்கும் வித்தை. மனம் பற்றுகளால் துன்பத்தில் வீழும் போது, அதை உறுதி என்னும் கடிவாளத்தால் பிடித்து நிறுத்திப் பழக்குவதே சரியான துறவுப் பயிற்சியாம். இதற்கு யோகம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்தப் பயிற்சியை சிலர் தனியிடங்களிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பழகுகிறார்கள். வேறுசிலர் மூச்சைக் கட்டியும் அவயவங்களைப் பலவாறு திருப்பியும் பழகுகிறார்கள்: தனியே இருந்து ஜபம் செய்து பார்க்கிறார்கள்.
ஆனால், இவற்றிலெல்லாம் மனம் அடங்கி விடாது. உலகத்தாருடன் கூடி அவர்களைப் போலவே தொழில் செய்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங்கொடாதபடி, தன் மனத்தைக் கட்டக்கூடிய திறமைதான் துறவின் வெற்றி, மற்ற முயற்சிகளெல்லாம் வீண். தண்ணீரிலே இருந்தும் ஒட்டாது இருக்கிற தாமரை இலையைத் துறவுக்குத் தகுந்த உவமையாக்குவர்.
எல்லா சமயங்களும் துறவறத்தைச் சுட்டியபோதும், துறவு சமயம் சார்ந்தது அன்று. அது மானுடம் சார்ந்தது; உயிர்க்குலம் சார்ந்தது. மண்ணால் செய்த ஓட்டினையும் பொன்னால் செய்த அணியினை யும் ஒன்றே என்று பற்றற்று நோக்கும் நற்குணமே துறவின் சிறப்பு.
சங்க இலக்கியம் துறவைப் பேசுகிறது. காப்பியங்கள் விவரிக்கின்றன. சன்னியாசம் என்று இந்து மதம் துறவைக் குறிக்கிறது. அருளாளர்கள் பலர் துறவு போற்றியவர்கள். பௌத்தம் புத்தர் பின்பற்றிய துறவைச் சுட்டி நிர்வாணம் என்றும், முழு விடுதலை யைப் பெருந்துறவு அல்லது பரி நிர்வாணம் என்றும் குறிக்கிறது. சமணம் சாரணம் என்கிறது. கிறிஸ்தவத்தில் இயேசுவின் வாழ்க்கையே துறவின் சான்று. இஸ்லாம் இல்லறத்தை மறுக்காது பற்றில்லாப் பிணைப்பு மூலம் துறவுக்கு வழிகாட்டுகிறது.
Cette histoire est tirée de l'édition July 09, 2025 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Dharmapuri
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'பிரளய்' ஏவுகணைகள், ஒடிஸாவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.
1 min
January 01, 2026
Dinamani Dharmapuri
துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை
கூடலூரை அடுத்துள்ள வடவயல் கிராமத்தில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
1 min
January 01, 2026
Dinamani Dharmapuri
வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
January 01, 2026
Dinamani Dharmapuri
வெற்றியின் தொடக்கம் கனவு!
வெற்றி என்றதும் நம் கண்களுக்கு முதலில் தெரிவது அந்த இலக்கைத் தொடும் இறுதிப் புள்ளிதான் ஒரு தங்கப் பதக்கம், ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அல்லது ஒரு அறிவியல் சாதனை.
2 mins
January 01, 2026
Dinamani Dharmapuri
தமிழகத்தில் 90,421 பேருக்கு காசநோய் பாதிப்பு
தமிழகத்தில் நிகழாண்டில், 90,421 பேருக்கு காசநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
January 01, 2026
Translate
Change font size

