Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல்

DINACHEITHI - DHARMAPURI

|

June 06, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல்

வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனக் காவலர்கள், நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

மனிதகுலம் சந்தித்துவரும் பெரும் சவாலாக தற்போது காலநிலை மாற்றம் உள்ளது. அதனை எதிர்கொள்ள இவ்வரசு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்களை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு, இயற்கைப் பாதுகாப்பினையும் வளங்குன்றா வளர்ச்சியையும் தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை ஒழித்திட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பை பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை "திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் தமிழ்நாடு மீன் வலை முன்னெடுப்பின் கீழ், சென்னை காசிமேட்டில் நிறுவப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்வலை சேகரிப்பு மையம் மூலம் கைவிடப்பட்ட மீன் வலைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதால் கடலில் நெகிழி மாசுபாடு குறைந்து, கடல் பல்லுயிரியம் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பேணிக் காத்திட இவ்வரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இம் மையத்திற்கான கட்டடம் சுற்றுச்சூழலுக்கு சாதகமான மற்றும் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பசுமை கட்டடமாக உருவாக்கப்படும். இக்கட்டடத்தின் மொத்த நிலப்பரப்பு 16,555 சதுர அடி மற்றும் மொத்த கட்டுமானப் பரப்பளவு 46,823 சதுர அடி ஆகும்.

MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அரசியல் தலைவர்கள் பரிந்துரைக்கும் பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்கள் செய்வதற்கு ஒவ்வொருவரும் நேரடியாக விண்ணப்பித்து செய்ய முடியும். இது தவிர அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் பூத் ஏஜெண்டுகளை (பி.எல்.ஏ.2) நியமிக்கலாம். பூத் ஏஜெண்டுகளாக யாரை நியமிக்க வேண்டுமோ அவர்களை தேர்தல் ஆணையத்துக்கு கட்சி தலைவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

time to read

1 min

September 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 mins

September 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது: விலை குறைந்த பொருட்கள் எவை? - முழு விவரம்

நாடு முழுவதும் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என்ற 4 அடுக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

time to read

1 mins

September 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

தூத்துக்குடியில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் இரு கப்பல் கட்டும் தளங்கள்

தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

time to read

1 min

September 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

‘மக்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி சேமிப்பு”- பிரதமர் மோடி காணொளி உரை

இந்தியா முழுவதும் இன்று முதல் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அமல் அமலாகிறது. இதனால், நாட்டு மக்களுக்கு மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வரை சேமிப்பு ஆகிறது என்று பிரதமர் மோடி தனது காணொளி உரையில் குறிப்பிட்டார். மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்க வேண்டும் \" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time to read

1 mins

September 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னை ஒன் செயலி மூலம் பயணம் செய்யும் வசதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் வசதியை வசதியை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

September 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

‘இந்திய பொருட்களையே வாங்குங்கள்’

இன்று முதல் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அமல்

time to read

2 mins

September 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

அமெரிக்காவுக்கு பணிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கும் எச். 1 பி விசா கட்டணம் ரூ. 80 ஆயிரமாக உயர்வு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

time to read

1 min

September 22, 2025

DINACHEITHI - DHARMAPURI

பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள \"பூம்புகாரில்\" , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 21, 2025

DINACHEITHI - DHARMAPURI

இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், வாடகை கார், ஆட்டோக்கள் ஒருங்கிணைந்த சேவை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2வது ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப்பெருநகரப்பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கானபோக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த QR (Quick Response) பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை 22.9.2025 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

time to read

1 min

September 21, 2025

Translate

Share

-
+

Change font size