Poging GOUD - Vrij

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல்

DINACHEITHI - DHARMAPURI

|

June 06, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல்

வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனக் காவலர்கள், நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

மனிதகுலம் சந்தித்துவரும் பெரும் சவாலாக தற்போது காலநிலை மாற்றம் உள்ளது. அதனை எதிர்கொள்ள இவ்வரசு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்களை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு, இயற்கைப் பாதுகாப்பினையும் வளங்குன்றா வளர்ச்சியையும் தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை ஒழித்திட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பை பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை "திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் தமிழ்நாடு மீன் வலை முன்னெடுப்பின் கீழ், சென்னை காசிமேட்டில் நிறுவப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்வலை சேகரிப்பு மையம் மூலம் கைவிடப்பட்ட மீன் வலைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதால் கடலில் நெகிழி மாசுபாடு குறைந்து, கடல் பல்லுயிரியம் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பேணிக் காத்திட இவ்வரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இம் மையத்திற்கான கட்டடம் சுற்றுச்சூழலுக்கு சாதகமான மற்றும் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பசுமை கட்டடமாக உருவாக்கப்படும். இக்கட்டடத்தின் மொத்த நிலப்பரப்பு 16,555 சதுர அடி மற்றும் மொத்த கட்டுமானப் பரப்பளவு 46,823 சதுர அடி ஆகும்.

MEER VERHALEN VAN DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்

லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்

time to read

1 mins

January 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

January 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

பழைய ஓய்வூதியத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்

அதிகாரிகள் தகவல்

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

3 mins

January 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வங்க கடலில் 6-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை: டிரோன்களுக்கு தடை

துணை ஜனாதிபதியாக சி. பி. ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.

time to read

1 min

January 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சிகரெட், பீடி விலை உயர்வு: புதிய வரி விதிப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

time to read

1 min

January 02, 2026

Translate

Share

-
+

Change font size