Newspaper
DINACHEITHI - DHARMAPURI
தர்மபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
வருவாய்த்துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.36.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம் மற்றும் ரூ.18.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
2 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
வாரச்சந்தை 65 லட்சத்துக்கு ஏலம்
திருவாடானையில் திங்கட்கிழமை நடைபெறும் வாரச்சந்தை இந்த ஆண்டு ரூ.65 லட்சத்திற்கு ஏலம் போனது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை தொடங்கினார், எடப்பாடி பழனிசாமி
கோவை, ஜூலை 8- 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை தொடங்கினார், எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்டவைகை அணைமூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதிபெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
கராச்சியில்: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 27 பேர் பலி
பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள்
தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காலநிலை- பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு உள்ளிட்ட 4 அறிக்கைகள் வழங்கப்பட்டன.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (7.7.2025) தலைமைச்செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ்செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சுய சான்றிதழ் திட்டத்தில் கட்டட அனுமதிக்கான ஆணைகளை பெற்று பயன்பெற்ற பயனாளிகள் சந்தித்து ஆணைகளைகாண்பித்து நன்றிதெரிவித்துக் கொண்டனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டத்தில் மீன்வள-மீனவர் மகளிா்கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மூலமாக அலைகள் திட்டத்தின் கீழ் மீன்-கருவாடு விற்பனை செய்தல், உலர் மீன் தயாரித்தல், மதிப்பு கூட்டு மீன் உணவுப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் மீன்பிடி சார்ந்த உபதொழில் ஈடுபடும் மீனவ மகளிர் உறுப்பினர் இடையே கூட்டுப் பொறுப்பு குழுக்கள் (ஒரு குழுவிற்கு ஐந்து நபர்கள்) உருவாக்கப்பட்டு நுண் கடன் உதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
அண்ணியை கல்லால் தாக்கியவர் கைது
திருச்சியில் அண்ணன் மனைவியை செங்கல்லால் தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
நண்பர் வீட்டு முன் வங்கி ஊழியர் தீக்குளித்து தற்கொலை
ஈரோட்டில் நண்பர் கடன் வாங்கிய பணத்தை திரும்ப தராததால், அவரது வீட்டின் முன்பே நண்பர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம், சகதியில் மூழ்கிய வங்கி
லட்சக்கணக்கான பணம், நகைகள் குறித்து அச்சம்
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
எலான் மஸ்க் கட்சி ஆரம்பித்தது அபத்தமானது| அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
வாஷிங்டன், ஜூலை.8டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
பின்லாந்தில் நடைபெற்ற மனைவியை கணவர் சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி
மனைவிகளை கணவர்கள் சுமந்துசெல்லும் வித்தியாசமான போட்டி பின்லாந்தில் நடைபெற்றுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானல் அணை நீர்தேக்கத்தில் தண்ணீர் குடிக்க வந்த மானை விரட்டிய நாய்கள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி 70 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, மான், காட்டு பன்றி, உள்ளிட்ட வன விலங்குகளும் மயில், பச்சை கிளி, மரகதப் புறா உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களும் வசித்து வருகின்றன.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
புடிஎன்பிஎல் 2025: இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர் தமிழன்ஸ்
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் முடங்கிய ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள கணக்கு சீரானது
சர்வதேச செய்தி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இருந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் தகவல்களை வழங்கி வருகின்றது. இதேபோன்று, அதன் எக்ஸ் வலைதளத்தின் வழியேயும் செய்திகள் தரப்படுகின்றன.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் தக்கலை பகுதியில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்ததைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் முன்னிலையில், குத்துவிளக்கேற்றினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை குடிநீர் ஏரிகளில் 56 சதவீதம் நீர் இருப்பு வரும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
சென்னையில் குடிநீர்வழங்கும் முக்கிய ஆதாரங்களானபுழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரியும் கணவருடன் போனில் பேசியதில் தகராறில் இளம்பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரகாஷ் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே போனில் பேசிய போது குடும்ப தகராறு ஏற்பட்டது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருவாரூர் மாவட்டத்தில் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்: நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
திருவாரூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்யும் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 58,500 கன அடியாக நீடிப்பு
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
செங்கடலில் பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேங்காய் விலை உயர்ந்ததால் இளநீர் வரத்து குறைந்தது
திருப்பூர் மாநகருக்கு பொள்ளாச்சி மட்டுமல்லாது ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.கடந்த சில தினங்களாக தேங்காய், கொப்பரை விலை அதிகரித்து வரக்கூடிய நிலையில் இளநீர் பறிப்பதை நிறுத்தி தேங்காய் அறுவடைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
திவான் பகதூர் - திராவிடமணி இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய தள பதிவு
திவான்பகதூர்-திராவிடமணி இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளை யொட்டி முதலமைச்சரமு.க.ஸ்டாலின் இணைய தள பதிவு வருமாறு :-
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தனது பூனையை பார்த்து கொள்பவருக்கு முழு சொத்தையும் எழுதி வைப்பதாக கூறிய முதியவர்
சீனாவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், தான் இறந்த பிறகுதனதுபூனையைப்பராமரிக்க விரும்புவோருக்கு தனது முழு சொத்தையும்கொடுத்துவிடுவதாக தெரிவித்துள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க.வில் சார்பு அணிகளின் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்றுங்கள்
அரியலூர் அன்னலட்சுமி இராஜபாண்டியன் திருமண மஹாலில், மாவட்ட தி.மு.க. சார்பில் அரியலூர், ஜெயங் கொண்டம், சட்டமன்ற தொகுதிகளுக்கான பாக நிலை முகவர்கள் மற்றும் பி.டி.ஏ. ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் நைஜீரியர் கைது
மராட்டிய மாநிலம் மும்பை மலாடு பகுதியில் சிலர் போதைப்பொருள் விற்க வர உள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று அப்பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில் கடன், பசுமை வீடு கேட்டு மனுக்கள்
உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
த.வெ.க.வின் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம்
தவெகவின்உறுப்பினர்சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம், இன்று ஜூலை 8ம் தேதி பனையூரில் நடக்க உள்ளதாக அக்கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
அமர்நாத் குகைக்கோவிலுக்கு 3-வது யாத்திரை குழு பயணம்
ஜம்மு காஷ்மீரில் மழைக்கு மத்தியிலும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை புறப்பட்டு உள்ளனர். கடந்த 3-ந்தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. கவர்னர் மனோஜ் சின்காயாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
1 min |