Newspaper
Dinamani Tiruchy
3-ஆவது நாளாக பங்குச் சந்தையில் சரிவு
தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றம் மற்றும் உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு முதலீட்டாளர்களின் உற்சாகத்தைக் குறைத்ததால், இந்திய பங்குச் சந்தைகள் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சரிவைக் கண்டன.
1 min |
November 08, 2025
Dinamani Tiruchy
தனியார் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை கீழ்ப் பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் அமலாக்கத் துறையினர் வெள் ளிக்கிழமை திடீர் சோதனை செய் தனர்.
1 min |
November 08, 2025
Dinamani Tiruchy
தேம்பாவணி தந்த திருமகனார்!
இத்தாலி நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அருந்தமிழ்த் தொண்டு செய்த அருட் குருக்களில் சிறந்ததொரு பெருமகனார் வீரமாமுனிவர் (1680-1747). அகிலம் போற்றும் பெருங்கவிஞரான வெர்ஜில் பிறந்த நகருக்கு அருகிலுள்ள காஸ்திக்கிளியோனே என்பது இவர் பிறந்த ஊராகும். இவர் பிறந்தது 1680-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி. இவர்தம் தந்தை பெயர் கண்டால்போ பெஸ்கி; தாயார் எலிசபெத் பெஸ்கி; இவர்தம் பிள்ளை ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்பதாம்.
2 min |
November 08, 2025
Dinamani Tiruchy
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அணிகளை 10-ஆக அதிகரிக்க முடிவு
2029 மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 10-ஆக அதிகரிப்பதாக ஐசிசி வெள்ளிக்கிழமை அறிவித்தது. தற்போது வரை அந்தப்போட்டியில் 8 அணிகளே பங்கேற்று வருகின்றன.
1 min |
November 08, 2025
Dinamani Tiruchy
எஸ்ஐஆர் குழப்பத்துக்கு தீர்வுகாண வேண்டும்
திமுக சட்டத் துறைக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min |
November 08, 2025
Dinamani Tiruchy
அரையிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா
மகளிருக்கான டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.
1 min |
November 08, 2025
Dinamani Tiruchy
'வந்தே மாதரம்' 150...
இந்தியத் திருநாட்டின் வரலாற்றின் நீண்ட நெடிய ஊக்கமளிக்கும் பயணத்தில், பாடல்களும் கலைகளும் இயக்கங்களின் உணர்வாக மாறி மக்களின் உணர்வுகளை செயல்பாடாக மாற்றிய ஏராளமான தருணங்கள் இருந்துள்ளன. சத்ரபதி சிவாஜி பேரரசர் படையின் போர்ப் பாடல்களாகட்டும், சுதந்திரப் போராட்டத்தின் போது இசைக்கப்பட்ட தேசியப் பாடல்களாகட்டும், அவசரகால நிலை பிரகடனத்தின் போது இளைஞர்களின் மெல்லிசைகளாகட்டும், இந்திய சமூகத்தில் பாடல்கள் எப்போதுமே கூட்டு உணர்வையும் ஒற்றுமையையும் தூண்டுகின்றன.
2 min |
November 07, 2025
Dinamani Tiruchy
கண்காணிப்பு தேவை
சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து அவரவர் தொகுதியில் மேற்கொள்ளப்படும் தொகுதி மேம்பாட்டுப் பணிகள் எந்த அளவுக்கு தரமானதாக இருக்கின்றன என்பதை அனைவரும் அறிவோம் ('நிதி எழுப்பும் கேள்வி!'- துணைக் கட்டுரை-ப. இசக்கி, 31.10.25).
1 min |
November 07, 2025
Dinamani Tiruchy
நிலம் கற்று நேரம் காப்போம்...
கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்துவரும் விவசாயம், இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. விவசாயத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நமது நாடு நீர் மற்றும் பயிர் நாள்காட்டிகளைச் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மழைப்பொழிவு, அணைகளில் நீர் திறப்பு, நீர்ப்பாசனம் ஆகியவற்றுக்கான நீர் நாள்காட்டிக்கும் விதைத்தல், பயிர் வளர்ச்சி, அறுவடை ஆகியவற்றுக்கான பயிர் நாள்காட்டிக்கும் இடையேயான காலமொன்றா நிகழ்வுகள் இந்திய விவசாயத்தில் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன.
2 min |
November 07, 2025
Dinamani Tiruchy
எஸ்பிஐ நிகர லாபம் 10% உயர்வு
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
November 07, 2025
Dinamani Tiruchy
திமுக அரசு மீதான அதிருப்தியால் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு
தமிழகத்தில் திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்ப தால், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எளிதில் வெற்றிபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப் பாடி கே. பழனிசாமி கூறினார்.
1 min |
November 06, 2025
Dinamani Tiruchy
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடவிருக்கும் ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் 15 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min |
November 06, 2025
Dinamani Tiruchy
ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை: அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை, மதுரையில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
1 min |
November 06, 2025
Dinamani Tiruchy
தலைவர்களும் தலைமைப் பண்பும்...
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம் இல்லையேல் உரம்! என்கிற தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப சோர்வடையாத உழைப்பால் நிகழ்ச்சிகளை தொடர்ந்துகொண்டே இருப்பவர்கள்தான் பிறரை வழிநடத்தும் தலைவர்களாக உயர்வடைகிறார்கள். தலைவன் என்பவன் தலைமையிடத்தில் இருப்பவன்; அவனிடம் அதிகாரம் இருக்கிறது; அவன் சொல்லுக்கு பலம் இருக்கிறது; கூடுதல் மதிப்பு இருக்கிறது. தலைவன் மிக உயரத்தில் இருக்கிறான்; அவனுடைய கூட்டமோ மிக அதிகம். அதனால் பல தலைவர்களால் எல்லா நேரமும் எல்லோருடனும் கலந்து பழக, சேர்ந்து இருக்க, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முடியாது. அந்தத் தலைவர்களுக்கு கீழ் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் சிலர் இருப்பார்கள். அவர்கள்தான் தினந்தோறும் தலைவர்களுடன் பேசுவார்கள்; ஆலோசிப்பார்கள்.
2 min |
November 06, 2025
Dinamani Tiruchy
பயர்ன் மியுனிக், லிவர்பூல் வெற்றி
ஐரோப்பிய கண்டத்தின் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பயர்ன் மியுனிக், லிவர்பூல் அணிகள் தங்கள் ஆட்டங்களில் புதன்கிழமை வென்றன.
1 min |
November 06, 2025
Dinamani Tiruchy
ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்
உலக அளவில் புகழ்பெற்ற ‘ஹிந்துஜா' தொழில் குழுமத்தின் தலைவரான கோபிசந்த் பி.ஹிந்துஜா (85) லண்டனில் காலமானார்.
1 min |
November 05, 2025
Dinamani Tiruchy
கனவு நனவானது!
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது. 1983-இல் கபில் தேவ் தலைமையிலான அணி முன்பு உலகக் கோப்பையை வென்றது எவ்வாறு திருப்பு முனையாக அமைந்ததோ, அதேபோன்று மகளிர் கிரிக்கெட்டுக்கு இந்த வெற்றி திருப்புமுனையாக அமைந்துள்ளது.
2 min |
November 05, 2025
Dinamani Tiruchy
அகமும் புறமும்...
மாநகராட்சி உபயோகமற்ற பொருள்களை வீடுகளிலிருந்து நேரடியாகச் சென்று பெறும் வரவேற்கக் கூடிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முன்னெடுப்பு. நமது வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் தினமும் வாங்கிச் செல்கிறார்கள். இருப்பினும், இவற்றைத் தவிர்த்து, தாவரக் கழிவுகள், தேவையற்ற படுக்கைகள், உடைந்த தளவாடங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் குப்பையாகப் பொது இடங்களில் வீசிச் செல்கிறார்கள். இவை பொது இடங்களில் ஆங்காங்கே குவிந்து சுகாதாரச் சீர்கேடாகவும், நீர்நிலைகளில் அடைப்புகளாகவும் மாறி விடுகின்றன.
3 min |
November 05, 2025
Dinamani Tiruchy
தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றது குறித்து... வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள், அந்தச் சட்டத்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து பொதுவெளியிலும், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் கருத்துகள் தெரிவித்தனர். இந்தச் சட்டத்தால் என்னென்ன சிக்கல்கள் உருவாகும் என்பதும் அது தேவையற்றது என்பதையும் வலியுறுத்தி அரசுக்குப் பல்வேறு தரப்பும் வைத்த கோரிக்கைகளை ஏற்று அறிமுக நிலையிலேயே சட்ட மசோதாவை திரும்பப் பெற்றிருப்பது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற வெற்றி.
3 min |
November 05, 2025
Dinamani Tiruchy
ஐசிசி அணியில் ஸ்மிருதி, ஜெமிமா, தீப்தி
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஐசிசி அணியில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா உள்பட 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.
1 min |
November 05, 2025
Dinamani Tiruchy
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
435 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்
1 min |
November 04, 2025
Dinamani Tiruchy
விதர்பா 501 ரன்கள் குவிப்பு
கோவை, நவ. 3: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா முதல் இன்னிங்ஸில் 501 ரன்கள் குவித்து திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.
1 min |
November 04, 2025
Dinamani Tiruchy
டெட் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
November 04, 2025
Dinamani Tiruchy
ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!
பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
2 min |
November 04, 2025
Dinamani Tiruchy
மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்
2 min |
November 04, 2025
Dinamani Tiruchy
மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.
1 min |
November 04, 2025
Dinamani Tiruchy
இலங்கை கடற்படையினரால் 35 தமிழக மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவர்கள் 31 பேரையும், ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
November 04, 2025
Dinamani Tiruchy
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
1 min |
November 03, 2025
Dinamani Tiruchy
சமன்செய்து சீர்தூக்கும் கோல்!
தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.
3 min |
November 03, 2025
Dinamani Tiruchy
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min |
