يحاول ذهب - حر
மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?
July 28, 2025
|Dinamani Vellore
லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.
ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய 'சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு 'தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.
மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.
55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களைத் தீவனமாக்கி, இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போதுதான் அந்த ஆபத்து புரியும்.
அந்தக் காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படிகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.
மேலும், அவை வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்துத் தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிகச் சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.
هذه القصة من طبعة July 28, 2025 من Dinamani Vellore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Vellore
Dinamani Vellore
தவறான புகார்களுக்கான தண்டனை என்ன?: காவல் நிலையங்களில் காட்சிப்படுத்தக் கோரி மனு
தவறான புகார்கள், ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரிக்கும் வகையில் காவல் நிலையங்கள், நீதிமன்ற வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் அறிவிப்புப் பலகைகளில் அந்த தண்டனை விவரங்களைக் காட்சிப்படுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
February 15, 2026
Dinamani Vellore
மின் ஆவணங்கள்...
ரீன் ஸ்டோன் மென்பொருள் மூலம் எண்ம நூலகங்கள், வினாத்தாள்கள், மின் நூல்கள், புகைப்படங்கள், வெளியீடுகள், மின் இதழ்கள், மின் ஆய்வேடுகள், பிற ஆய்வு உதவு நூல்கள் கிட்டத்தட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச மின் ஆவணங்களைப் பார்வையிட உதவும் வகையில் இணைப்புச் சொடுக்கிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளேன்.
2 mins
February 15, 2026
Dinamani Vellore
ராகுலுக்கு பக்குவமில்லை, பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லை
ராகுல் காந்திக்கு பக்குவமில்லை, பொருளாதாரம் பற்றி போதிய புரிதல் இல்லை என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சாடினார்.
1 mins
February 15, 2026
Dinamani Vellore
நீண்ட தூர ரயில்களில் தொடர் தூய்மைப் பணிக்கு புதிய திட்டம்
'நீண்ட தூர ரயில் களில் அனைத்து பெட்டிகளிலும் தொடர்ச்சியான தூய்மைப் பணியை மேற்கொள்ளும் வகையில் தொழில் நுட்ப ரீதியில் நிபுணத்துவம் பெற்ற தனியார் நிபுணர் குழுக்கள் பணிய மர்த்தப்பட உள்ளனர்' என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரி வித்தார்.
1 min
February 15, 2026
Dinamani Vellore
நாடு முழுவதும் 466 புற்றுநோய் புறநோயாளி சிகிச்சை மையங்கள்
நாடு முழுவதும் 466 புற்றுநோய் புறநோயாளி சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1 min
February 15, 2026
Dinamani Vellore
திராவிட மொழியியல் சிற்பி
இந்தோ - ஐரோப்பிய மற்றும் திராவிட மொழிகள் பெருவாரியாகப் பேசப்படும் நம் இந்தியாவில் எல்லா மொழிகளுமே காலத்துக்கேற்ப உயரிய சிந்தனைகளை முன்வைப்பதோடு உயிர்ப்புடன் திகழ்கின்றன.
2 mins
February 15, 2026
Dinamani Vellore
எல்லோரும் புத்தகம் எழுத வேண்டும்
அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன்.
3 mins
February 15, 2026
Dinamani Vellore
இலக்கியங்களில் சுற்றுச்சூழல்
தாவரங்கள் மீது தமிழர்களின் பக்தியும், மதிப்பும் அளவிட முடியாதவை.
1 mins
February 15, 2026
Dinamani Vellore
பருத்தி விவசாயிகள், ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஏமாற்றும் மத்திய அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
'இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தால் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது' என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார்.
1 min
February 15, 2026
Dinamani Vellore
அஸ்ஸாம் முதல்வரின் விடியோ சர்ச்சை: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சர்ச்சை காணொலிக் காட்சி தொடர்பாக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (பிப்.
1 min
February 15, 2026
Translate
Change font size
