Try GOLD - Free
புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடக்கம்
Dinamani Vellore
|August 15, 2025
புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடங்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
-
மதுரை, ஆக. 14:
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் யாசர் அராபத் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கர் ஜிவால் தற்போது பணியாற்றி வருகிறார். வருகிற 31-ஆம் தேதியுடன் இவரது பணிக்காலம் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. தற்போதைய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதே பொறுப்பில் கால நீட்டிப்பு செய்யப்படலாம் அல்லது யாரேனும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. இது உச்சநீதிமன்றத்தீர்ப்புகளுக்கு எதிரானது. மாநில அரசால் வழங்கப்படும் மூத்த காவல் துறை அதிகாரிகள் (ஐபிஎஸ்) பட்டியலைக் கொண்டு, தமிழக புதிய டிஜிபி வெளிப்படைத்தன்மையுடன் நியமிக்கப்பட வேண்டும்.
வருகிற 2026-இல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களுக்குச் சாதகமானவர்களை பொறுப்பில் வைத்துக் கொள்ள மாநில அரசு விரும்புவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஆணவக் கொலை, கொள்ளை போன்ற அச்சமூட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட டிஜிபி பணியிடம் முறையாக நிரப்பப்படுவது அவசியம்.
இதுதொடர்பாக நடவடிக்கை கோரி, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசின் முதன்மைச் செயலர், உள்துறைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
டிஜிபி தேர்வு நியமனம் தொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, தமிழக டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்கும் செயல்முறையை உடனடியாகத் தொடங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, அவர் பொறுப்பு டிஜிபியாக தொடரவோ, அவரது பணிக்காலத்தை நீட்டிப்பு செய்யவோ கூடாது. இதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரியினார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமர்வு முன் வியாழக்கிழமை முற்பகலில் விசாரணைக்கு வந்தது.
This story is from the August 15, 2025 edition of Dinamani Vellore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Vellore
Dinamani Vellore
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Vellore
மேற்காசிய அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி உறுதி
1 mins
May 16, 2026
Dinamani Vellore
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Vellore
ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
May 16, 2026
Dinamani Vellore
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Vellore
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Vellore
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Vellore
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani Vellore
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Vellore
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Translate
Change font size
