Try GOLD - Free
'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...
Dinamani Tiruvarur
|June 13, 2026
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.
அதாவது, 'செல்வந்த நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்த காலம் முடிந்துவிட்டது. அமெரிக்காவுக்கு தேவை கூட்டாளிகளே தவிர, பாதுகாப்புக்காக ஒட்டிக்கொண்டிருக்கும் நாடுகள் அல்ல. கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக் கொண்ட கூட்டணிகளையே அமெரிக்கா விரும்புகிறது. ஒருவர் மூலம் பலனடைந்துவிட்டு, அதற்குப் பதிலாக எதையும் திருப்பி அளிக்க மறுப்பதை ஏற்க முடியாது. ஒரு கூட்டணியின் வலிமை என்பது அதில் உள்ள நாடுகளின் எண்ணிக்கையால் அன்றி, படை அமைப்புகளின் எண்ணிக்கையால் அளவிடப்படுகிறது. மாநாடுகளை நடத்துவதைவிட போர் திறனே தேவை' என்று கூறினார்.
இந்தச் சூழலில், ஆக்கஸ் என்றழைக்கப்படும் ஆங்கிலோ-சாக்சன் ராணுவக் கூட்டணி (ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா இடம்பெற்றுள்ள கூட்டணி) 'க்வாட்' கூட்டமைப்பை (இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ள கூட்டமைப்பு) எங்கு கொண்டு சென்று நிறுத்தும் என்பதே தற்போதைய கேள்வி.
கடந்த 1920-ஆம் ஆண்டில் இந்திய, பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பிராந்தியத்துக்கு கார்ல் ஹௌஸோஃபர் என்ற ஜெர்மானிய புவி அரசியல் அறிஞர் முதன்முதலில் புவியியல் வடிவம் அளித்தார். காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகள், ஆங்கிலோ- அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அவரின் பார்வையாக இருந்தது. அவரின் பார்வைக்கும், தற்போதைய 'க்வாட்' கூட்டமைப்புக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. தற்போதைய இந்திய-பசிபிக் கருத்தாக்கத்தை உருவாக்கி பெயரிட்டவர் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே.
கடந்த 2006, செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், இந்திய நாடாளுமன்றத்தில் 'இரு கடல்களின் சங்கமம்' என்ற தலைப்பில் ஷின்ஸோ அபே உரையாற்றினார். அந்த உரையில், 'இந்தியப் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் ஒன்றோடொன்று இணைந்த ஒரே உத்திசார்ந்த கடற்பரப்பாக கருதப்பட வேண்டும்' என்ற கருத்தை அவர் முன்வைத்தார். அந்தப் பரப்பில் சுதந்திரமும் செழிப்பும் ஒன்றக்கொன்று வலுசேர்க்கும் வகையில் வளரவேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது. இந்தக் கண்ணோட்டமே பின்னாளில் 'க்வாட்' கூட்டமைப்பின் தத்துவ அடித்தளமாகவும், அதைத் தாங்கி நிற்கும் முக்கியச் சிந்தனையாகவும் மாறியது.
This story is from the June 13, 2026 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.
1 min
June 13, 2026
Dinamani Tiruvarur
ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
1 min
June 13, 2026
Dinamani Tiruvarur
உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!
'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.
1 mins
June 13, 2026
Dinamani Tiruvarur
அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?
'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
June 13, 2026
Dinamani Tiruvarur
தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ரூ.2,400 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,10,400-க்கு விற்பனையானது.
1 min
June 13, 2026
Dinamani Tiruvarur
மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 15) வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tiruvarur
வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா
மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.
1 min
June 13, 2026
Dinamani Tiruvarur
'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.
3 mins
June 13, 2026
Dinamani Tiruvarur
பகையைத் தூண்டும் பேச்சு: மம்தா மீது வழக்குப் பதிவு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பகையை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tiruvarur
தாய்லாந்து இளவரசி காலமானார்
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலாங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டின் முன்னணி சட்டநிபுணருமான இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (47) நீண்டகால உடல்நலக் குறைவால் காலமானார்.
1 min
June 13, 2026
Listen
Translate
Change font size

