Try GOLD - Free
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
Dinamani Ramanathapuram & Sivagangai
|September 01, 2025
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
போராடுவதிலோ, சாதனைகள் புரிவதிலோ போற்றிக்காக்க வேண்டியது பெண்மை என்கிற அந்தப் புனிதத்தைத்தான்.
மகளிருக்காக ஏராளமான திட்டங்களை இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் தேசத்தில் செயல்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர். அதே வேளையில் இன்னும் மகளிரின் சில பிரச்னைகள் அரசின் கவனத்துக்கு வராமலேயே இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் பணிக்குச் செல்லும் கட்டாயச் சூழல் பரவலாக ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. அப்படி பணிக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளமாக இருப்பினும், குறிப்பட்ட ஒருசில சவால்கள் உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டியவையே. குறிப்பாக, மாதவிடாய் கால வேதனைகளைப் பற்றி எத்தனை பேர் துல்லியமாக அறிந்திருக்கிறோம் என்பது விடை தெரியாத கேள்வி.
ஆங்கிலத்தில் 'டிஸ்மெனோரியா' எனப்படும் இந்தப் பிரச்னை தவணை தவறாத வேதனையாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. உயர்நிலைப் பள்ளி மாணவிகள்; கல்லூரி மாணவிகள்; வேலைக்குச் செல்லும் பெண்கள் என அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படும் இந்தப் பிரச்னையை அரசு கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முறையிலிருப்பது உண்மைதான். ஆனாலும், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெண்களிடம் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பிரச்னைக்கு விரைவில் மத்திய அரசு ஒரு தீர்வை எட்ட வேண்டும்.
This story is from the September 01, 2025 edition of Dinamani Ramanathapuram & Sivagangai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 15, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்க மாட்டோம்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
June 15, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.
1 min
June 15, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
உலகக் கோப்பை வில்வித்தை; இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி
துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், ரீகர்வ் கலப்பு அணிகள் மற்றும் ஆடவர் தனிநபர் என இரு பிரிவுகளில் இந்தியா தங்கத்தை தட்டிச் சென்றது.
1 min
June 15, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
வாழ்க்கைப் பயணம்
நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.
3 mins
June 15, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்த பிரிட்டன்
உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல் முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
1 min
June 15, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்
அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.
2 mins
June 15, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைக்கால இரும்பு உலைக் கலன்!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் பண்டைய கால தமிழர்களின் திறனைப் பறைசாற்றும் இரும்பு உலைக் கலன் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
1 min
June 14, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Translate
Change font size

