Try GOLD - Free
சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது!
Dinamani Madurai
|May 13, 2025
பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் போன்ற சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க, விதிகளில் உரிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
-
அண்மையில் இந்திய குடிமைப் பணித் தேர்வு 2024-ஆம் ஆண்டுக்கான முடிவுகள் வெளிவந்தன. சுமார் 1056 பணியிடங்களுக்கான தேர்வாக அது நடந்தது. முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளைக் கொண்டது அத்தேர்வு. இறுதி முடிவுகளின்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏறத்தாழ 57 தேர்வர்கள் வெற்றி பெற்றனர். இது சுமார் 5.3 சதவீதம் ஆகும்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் சற்றேறக்குறைய 10 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை இருந்து வந்தது. பாடத்திட்டம் மாற்றம், தேர்வு முறையில் மாற்றம் போன்ற புதிய சூழலில் தமிழ்நாட்டின் தேர்ச்சி என்பது 3 சதவீதம் முதல் 4 சதவீதம் சரிந்தது. தற்போது 5.3 சதவீதமாக சற்றே உயர்ந்து மாற்றம் கண்டுள்ளது.
முன்பு இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்ற முதல் 100 தேர்வர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 முதல் 15 தேர்வர்கள் வரை இருப்பார்கள். தற்போது 2 அல்லது 3 தேர்வர்களே இருக்கிறார்கள். தரநிலை பின்னடைவால் 400 ஆவது இடம்பெற்று வெற்றி பெறுபவருக்குகூட ஐஏஎஸ் பணி வாய்ப்பும், 700-ஆவது இடம் பெற்று வெற்றி பெறுபவருக்கு ஐபிஎஸ் பணி வாய்ப்பும் தமிழ்நாடு ஒதுக்கீடும் கிடைக்கிறது. இது மகிழ்ச்சியோ, நல்ல மாற்றமோ அல்ல. இது நாம் தரநிலையில் பின்தங்கியுள்ளதை அறிவிக்கும் ஓர் எச்சரிக்கை மணி ஆகும்.
தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் இன்னும் உயர வேண்டிய சூழலில், தர நிலையிலும் உயர்ந்து வரவேண்டும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஏனெனில், 2007 ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 31-ஆம் இடம் பெற்று ஐஏஎஸ் பணி ஒதுக்கீடு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர் பா.ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாடு ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதே போல 2013-ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் 33 -ஆம் இடம்பெற்று ஐஏஎஸ் பணி வாய்ப்புப்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர் கி. விஜயாவுக்கு தமிழ்நாடு ஒதுக்கீடு கிடைக்கவில்லை. காரணம், தர நிலையில் அவர்களுக்கு முன்னால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 முதல் 5 தேர்வர்கள் இருந்தனர் என்பதைக் கவனத்தில் கொண்டால் கடந்த கால சூழலுக்கும் இன்றைய சூழலுக்குமான உண்மை நிலையை நாம் புரிந்து கொள்ளலாம்.
This story is from the May 13, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
தென்பெண்ணையாறு நடுவர் மன்றம்: எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள்
கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குப் பாயும் தென்பெண்ணையாறு விவகாரத்தில் நடுவர் மன்றம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
2 mins
June 29, 2026
Dinamani Madurai
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Madurai
லெபனானில் ஹிஸ்புல்லா மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்
லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.
1 min
June 29, 2026
Dinamani Madurai
ஏழு மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10
1 mins
June 29, 2026
Dinamani Madurai
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Madurai
வெனிசுலா சென்றடைந்தது இந்திய நிவாரணப் பொருள்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Madurai
கண்டதேவியில் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி பெரியநாயகி அம்பாள் சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
June 29, 2026
Dinamani Madurai
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Madurai
தாமதமாக வீடு ஒப்படைப்பு: குடியேறிய பிறகும் இழப்பீடு கோர முடியும்
'வீடு வாங்குபவர்கள் குடியேறிய பிறகும் வீட்டைத் தாமதமாக ஒப்படைத்ததற்கான இழப்பீட்டைக் கோர முடியும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 mins
June 29, 2026
Dinamani Madurai
நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
1 mins
June 29, 2026
Translate
Change font size
