Facebook Pixel வணிகப்போர் வளையத்தில் இந்தியா! | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

வணிகப்போர் வளையத்தில் இந்தியா!

Dinamani Madurai

|

April 17, 2025

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டொனால்டு டிரம்ப், உலகமே தனது ஆளுகைக்கு கீழ் வந்து விட்டதுபோல செயல்படத் தொடங்கிவிட்டார். மற்ற நாடுகளைத் தமது அடிமை நாடுகளைப் போல கருதிக் கொண்டு பேசுவதும், செயல்படுவதும் அவரின் அன்றாடச் செயல்களாகிவிட்டன.

- உதயை மு. வீரையன்

அரசாட்சியாக இருந்தாலும், மக்களாட்சியாக இருந்தாலும் வரி விதிக்காமல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், வரியை அளவோடு விதிக்க வேண்டும். தேன் அடையிலிருந்து தேன் எடுப்பதுபோல மக்களைத் துன்புறுத்தாமல் வரி விதித்து ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் தமிழ்ப்புலவர்கள் மன்னர்களுக்கு அறிவுறுத்தினர்.

வேலொடு நின்றான் இடுஎன்றதுபோலும் கோலொடு நின்றான் இரவு (குறள் 552)

அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருள் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், எல்லாவற்றையும் தா என்று கேட்பதைப் போன்றதாகும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

அரசியல் நெறிவாழ்வார் எவ்வாறு குடிமக்களிடம் வரி கேட்டு வாங்க வேண்டும் என்பதற்கு சங்க இலக்கியத்தில் ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது. காய்ந்து முற்றிய நெல்லை அறுத்து கவளம் கவளமாக யானைக்கு உண்ணக் கொடுத்தால் 'மா' அளவுள்ள சிறிய நிலத்தில் விளைவதும் பல நாளைக்கு உணவாகும். அவ்வாறின்றி, 100 வயல் அளவுள்ள பெரிய நிலமாயினும், யானை தானே வயலுக்குள் புகுந்து உண்டால் வாய்க்குள் போவதை விட அதன் கால்களில் பாழாவதே மிகுதியாகும். இவ்வாறு, காய்நெல் அறுத்து கவளம் கொளினே' என புறநானூற்றுப் பாடலில் கூறப்படுகிறது. மக்கள் நலம் நாடும் அரசுகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஏழை, பாட்டாளி மக்கள் இதனால் மிகப்பெரும் துயரங்களை தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி ஆட்சி செய்வோர் கவலைப்படுவதில்லை. அதிகாரம் செய்யும் கார்ப்பரேட்டுகளும் கவலைப்படுவதில்லை.

பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கின. 1990-களின் பிற்பகுதியில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்ததாகக் கூறப்பட்டது.

எப்போதும் ஆண்டுக்கு இரண்டு சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் இப்போது சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகள், உலகமயமாக்கலால் பயனடைந்த உலக நாடுகளுக்கு ஏமாற்றமாகவும், பின்னடைவாகவும் அமைந்துள்ளன.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை 308 கன அடியில் இருந்து 193 கன அடியாக குறைந்தது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

துனிசியாவை வென்றது நெதர்லாந்து

அமெரிக்காவின் கேன்சாஸ் சிட்டியில் கொட்டும் மழையில் நடைபெற்ற ஆட்டத்தில், நெதர்லாந்து 3-1 கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம்: எம்எல்ஏ செந்தில்செல்வன் புறக்கணிப்பு

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக உயர் நிலைக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் சீர்காழி தொகுதி எம்எல்ஏ செந்தில்செல்வன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

தேசிய நல்லாசிரியர் விருது தமிழக ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள தமிழக ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஜூலை 3-இல் அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீரில் கண்காணிப்பு தீவிரம்

ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 3-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குவதையொட்டி, அந்த யூனியன் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு

'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை !

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

time to read

3 mins

June 27, 2026

Dinamani Madurai

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Dinamani Madurai

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்காக கடந்த டிச.27-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெற்றோர் 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க நீதித் துறை நடுவர் மன்றங்களுக்கு உத்தரவு

வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொள்ளும் குழந்தைக்கு பெற்றோர் தரப்பில் உரிமை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என நீதித் துறை நடுவர் மன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 mins

June 27, 2026

Translate

Share

-
+

Change font size