Facebook Pixel அகமும் புறமும்... | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

அகமும் புறமும்...

Dinamani Dharmapuri

|

November 05, 2025

மாநகராட்சி உபயோகமற்ற பொருள்களை வீடுகளிலிருந்து நேரடியாகச் சென்று பெறும் வரவேற்கக் கூடிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முன்னெடுப்பு. நமது வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் தினமும் வாங்கிச் செல்கிறார்கள். இருப்பினும், இவற்றைத் தவிர்த்து, தாவரக் கழிவுகள், தேவையற்ற படுக்கைகள், உடைந்த தளவாடங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் குப்பையாகப் பொது இடங்களில் வீசிச் செல்கிறார்கள். இவை பொது இடங்களில் ஆங்காங்கே குவிந்து சுகாதாரச் சீர்கேடாகவும், நீர்நிலைகளில் அடைப்புகளாகவும் மாறி விடுகின்றன.

- வெ. இன்சுவை

அகமும் புறமும்...

இதைத் தவிர்ப்பதற்காக, மாநகராட்சி சார்பில் வாரத்தில் சனிக்கிழமைதோறும் வீடுகளுக்கு நேரடியாகத் தூய்மைப் பணியாளர்கள் சென்று, உபயோகமற்ற பொருள்களைப் பெற்றுக் கொள்வார்கள். இந்தத் திட்டத்தை நாம் வெற்றிகரமாகச் செயல்படுத்திவிட்டால், நகரின் ஒட்டு மொத்தத் தூய்மை ஓரளவுக்கு சீரடைய வாய்ப்புள்ளது.

ஒவ்வொருவர் வீட்டிலும் தேவையற்ற பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. நுகர்வுக் கலாசாரம் பெருகிவிட்டதால், எதையாவது வாங்கிக்கொண்டே இருக்கிறோம். நாம் உபயோகித்த கட்டில், மேஜை போன்றவற்றை யாருக்காவது கொடுத்துவிடலாம் என்று நினைத்தால், பழைய பொருள்களைக் கொடுக்கின்றோம் என்று அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்ற அச்சம் உண்டாகிறது. எந்தப் பொருளும் நம் வீட்டை விட்டுப் போகாது; அனைத்தும் வீட்டை அடைத்துக் கொண்டு கிடக்கும்.

வீட்டுக்குள் இருக்கும் இந்தப் பொருள்களைத் தவிர, நம் வீட்டுக்கு வெளியே கண்களை உறுத்துவது கட்டடக் கழிவுகள். மக்கள் பெரும்பாலும் இரவில், சாலைகள், நடைபாதைகள் மற்றும் பிற இடங்களில் இவற்றைச் சட்டவிரோதமாகக் கொட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். கட்டுமானக் கழிவு மேலாண்மை குறித்த விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்க வேண்டும். சட்டவிரோதமாகக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதிலும், விதிகளைச் சரியாக அமல்படுத்துவதிலும் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.

மேலை நாடுகளில் நம்மைப்போல் கட்டடக் கழிவுகளைத் தெருவில் போட்டு வைப்பதில்லை. வேலை நடக்கும்போது ஒரு பெரிய கலனில் போட்டு விடுகிறார்கள்; பின்னர், அதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்கள் அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துகின்றன. ஆகவே, மாநகராட்சி இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலில் மாநகராட்சி, அறிவித்திருக்கும் திட்டத்தை முழுவீச்சில் அமல்படுத்த வேண்டும். இந்தச் சேவையைப் பயன்படுத்தப் பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தகவல் பலருக்கும் சென்றடையவில்லை.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சி அரங்கில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

time to read

1 mins

April 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கோடை விடுமுறை: ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் மற்றும் ஏற்காடு பகுதிகளில் ஆயி ரக்கணக்கான சுற்றுலாப் பயணி கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்த னர்.

time to read

2 mins

April 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அருணாசலேஸ்வரர் கோயில் வசந்த உற்சவம்: வெட்டிவேர் பல்லக்கில் வலம் வந்த சுவாமி

அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆம் நாள் நிகழ்வில் சுவாமி வெட்டிவேர் பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்தார் (படம்).

time to read

1 min

April 27, 2026

Dinamani Dharmapuri

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!

இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது.

time to read

2 mins

April 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பொறுப்பால் உயரும் பெருமை!

தலைமை மனது வைத்தால், தகரமும் கூட தங்கமாக மாறிவிடும்.

time to read

3 mins

April 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் முன்னோடி

'காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னோடியாக திகழ்கின்றன' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

time to read

1 mins

April 27, 2026

Dinamani Dharmapuri

பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள்: மத்திய அமைச்சர் ஆலோசனை

பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள் அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Dharmapuri

ஆலங்குடி கோயிலில் மே 26-இல் குருப்பெயர்ச்சி விழா

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் வரும் மே 26-ஆம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரர்கள் உடனடி வெளியேற்றம்

அமித் ஷா வாக்குறுதி

time to read

1 min

April 27, 2026

Dinamani Dharmapuri

ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

பொதுத் துறை வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு நடைமுறையை அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்யும்படி, அந்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

April 27, 2026

Listen

Translate

Share

-
+

Change font size