Versuchen GOLD - Frei

அகமும் புறமும்...

Dinamani Dharmapuri

|

November 05, 2025

மாநகராட்சி உபயோகமற்ற பொருள்களை வீடுகளிலிருந்து நேரடியாகச் சென்று பெறும் வரவேற்கக் கூடிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முன்னெடுப்பு. நமது வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் தினமும் வாங்கிச் செல்கிறார்கள். இருப்பினும், இவற்றைத் தவிர்த்து, தாவரக் கழிவுகள், தேவையற்ற படுக்கைகள், உடைந்த தளவாடங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் குப்பையாகப் பொது இடங்களில் வீசிச் செல்கிறார்கள். இவை பொது இடங்களில் ஆங்காங்கே குவிந்து சுகாதாரச் சீர்கேடாகவும், நீர்நிலைகளில் அடைப்புகளாகவும் மாறி விடுகின்றன.

- வெ. இன்சுவை

அகமும் புறமும்...

இதைத் தவிர்ப்பதற்காக, மாநகராட்சி சார்பில் வாரத்தில் சனிக்கிழமைதோறும் வீடுகளுக்கு நேரடியாகத் தூய்மைப் பணியாளர்கள் சென்று, உபயோகமற்ற பொருள்களைப் பெற்றுக் கொள்வார்கள். இந்தத் திட்டத்தை நாம் வெற்றிகரமாகச் செயல்படுத்திவிட்டால், நகரின் ஒட்டு மொத்தத் தூய்மை ஓரளவுக்கு சீரடைய வாய்ப்புள்ளது.

ஒவ்வொருவர் வீட்டிலும் தேவையற்ற பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. நுகர்வுக் கலாசாரம் பெருகிவிட்டதால், எதையாவது வாங்கிக்கொண்டே இருக்கிறோம். நாம் உபயோகித்த கட்டில், மேஜை போன்றவற்றை யாருக்காவது கொடுத்துவிடலாம் என்று நினைத்தால், பழைய பொருள்களைக் கொடுக்கின்றோம் என்று அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்ற அச்சம் உண்டாகிறது. எந்தப் பொருளும் நம் வீட்டை விட்டுப் போகாது; அனைத்தும் வீட்டை அடைத்துக் கொண்டு கிடக்கும்.

வீட்டுக்குள் இருக்கும் இந்தப் பொருள்களைத் தவிர, நம் வீட்டுக்கு வெளியே கண்களை உறுத்துவது கட்டடக் கழிவுகள். மக்கள் பெரும்பாலும் இரவில், சாலைகள், நடைபாதைகள் மற்றும் பிற இடங்களில் இவற்றைச் சட்டவிரோதமாகக் கொட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். கட்டுமானக் கழிவு மேலாண்மை குறித்த விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்க வேண்டும். சட்டவிரோதமாகக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதிலும், விதிகளைச் சரியாக அமல்படுத்துவதிலும் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.

மேலை நாடுகளில் நம்மைப்போல் கட்டடக் கழிவுகளைத் தெருவில் போட்டு வைப்பதில்லை. வேலை நடக்கும்போது ஒரு பெரிய கலனில் போட்டு விடுகிறார்கள்; பின்னர், அதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்கள் அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துகின்றன. ஆகவே, மாநகராட்சி இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலில் மாநகராட்சி, அறிவித்திருக்கும் திட்டத்தை முழுவீச்சில் அமல்படுத்த வேண்டும். இந்தச் சேவையைப் பயன்படுத்தப் பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தகவல் பலருக்கும் சென்றடையவில்லை.

WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!

சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.

time to read

2 mins

January 13, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Dharmapuri

பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு

மும்பை, ஜன.

time to read

1 min

January 13, 2026

Dinamani Dharmapuri

சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 26% உயர்வு

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 13, 2026

Dinamani Dharmapuri

அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Dharmapuri

பொங்கல்: சென்னையிலிருந்து இதுவரை 15 லட்சம் பேர் பயணம்

பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் இதுவரை சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Dharmapuri

ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

time to read

1 min

January 13, 2026

Dinamani Dharmapuri

வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!

மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

time to read

3 mins

January 13, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அயன்மேன் டிரையத்லான்: இந்திய அணியினர் சிறப்பிடம்

சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் தூர டிரையத்லான் நிகழ்வான, 'அயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை' போட்டியில் இந்திய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.

time to read

1 min

January 12, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தாமதமாகும் 'ஜனநாயகன்' - பின்புலம் என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளி வரவேண்டிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

time to read

3 mins

January 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size