Try GOLD - Free
மாணவ மாணிக்கங்கள்!
Dinamani Dharmapuri
|July 04, 2025
நாம் யாருக்கும் பாரமாக வாழாமல் உயர்ந்த சிந்தனையை உருவாக்கிச் செயல்பட வேண்டும். இன்று நம் நாட்டில் அனைத்தும் இருந்தும் சுயநல சிந்தனைதான் நம்மை சிதிலமடைய வைக்கிறது. அதை மாற்ற நம் சிந்தனையை உயர்வாக்கிச் செயல்படுவதன் மூலம்தான் எதிர்கால இந்தியாவைக் கட்டமைக்க முடியும்.
பள்ளி மாணவர்களுக்கான ஒரு பயிற்சி முகாம். நடைபெற்ற இடம்: மாற்றுத் திறனாளிகளை தன்மானமிக்க திறனாளிகளாக உருவாக்கும் திருக்கோயிலாக செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம். தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்துக்கு அருகே அமைந்துள்ள ஒரு தவச்சாலை. மாற்றுத் திறனாளிகளுக்கு புதுவாழ்வு அளிக்கும் இரண்டு மாமனிதர்களால் நடத்தப்படும் வேள்வி. அதைச் சென்று பார்க்கும் ஒவ்வொருவரையும் அந்த இரண்டு மாமனிதர்களும் வாழும் தெய்வங்கள் என்று வணங்க வைக்கும் செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர்கள். மற்றவர் துணையின்றி எந்தச் செயலையும் செய்ய இயலாத இரண்டு மனிதர்களும் கர்மயோகிகளாகச் செயல்பட்டு நம்பிக்கை ஒளியை அனைவருக்கும் தருகின்றார்கள்.
அந்த இடத்தில்தான் இந்த மாணவர்களுக்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முகாமில் பள்ளி மாணவர்கள் 85 பேர் தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர். அவர்களுடன் நானும் உரையாட வருகிறேன் என்று மத்திய, மாநில அரசுகளில் அரசுச் செயலராக பணிபுரிந்த ஓர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்த அதிகாரியும் வந்திருந்தார்.
இந்த முகாமில் அனைத்து வசதிகளுக்கான செயல்களையும் மாணவர்களே பொறுப்பேற்று நடத்தினர். அடுத்து, கருத்துரை அனைத்தையும் உரையாடல்களாகவே வடிவமைத்து அந்த மாணவர்களின் உள் திறனை அவர்களுக்குக் காண்பித்தது முகாமின் மற்றொரு சிறப்பு.
இந்த மாணவர்களின் செயல்களைப் பார்த்த அந்த ஓய்வுபெற்ற அரசுச் செயலர், இவர்கள் என்னுடன் கேள்வி கேட்டு உரையாடட்டும் என்று கூறி, ஓட்டுமொத்த வகுப்பையும் கேள்வி-பதிலாக மாற்றிவிட்டார். முதல் அமர்வில் அவர்களிடம் உரையாடலைத் தொடங்கியவர் பல கேள்விகளை முன்வைத்தார். அதில் முதல் கேள்வி, நாம் வாழும் உலகம் இன்று மிகவும் சிறப்பாக, அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறதா?
This story is from the July 04, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
சிறப்புப் பொருளாதார மண்டல தயாரிப்புகளுக்கு சுங்க வரி குறைப்பு
மத்திய கிழக்கு போர் காரணமாக ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (செஸ்) தயாரிக்கப்பட்டு உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
1 min
April 02, 2026
Dinamani Dharmapuri
ஆந்திரத்துக்கு இனி ஒரே தலைநகரம்
ஆந்திர மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதியை சட்டரீதியாக அங்கீகரிக்க வகை செய்யும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1 min
April 02, 2026
Dinamani Dharmapuri
சொந்த மண்ணில் தேசிய அணிக்கான கடைசி ஆட்டத்தில் மெஸ்ஸி அசத்தல்
சொந்த மண்ணில் தேசிய அணிக்காக ஆடிய கடைசி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா ஜாம்பவான் மெஸ்ஸி அபாரமாக ஆடினார்.
1 min
April 02, 2026
Dinamani Dharmapuri
பிரசார நடவடிக்கைகள்: நேரத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்
தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பவர்கள் அதற்கான தேதி, நேரம், இடத்தைச் சரியாகக் குறிப்பிட வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
1 min
April 02, 2026
Dinamani Dharmapuri
வணிக சிலிண்டர் விலை ரூ.195 அதிகரிப்பு
விமான எரிபொருள் விலை 8.56% உயர்வு
1 mins
April 02, 2026
Dinamani Dharmapuri
எங்களது வாக்குறுதிகள் நம்பகத்தன்மையுடையவை!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுகவின் மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். பி. உதயகுமார் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:
2 mins
April 02, 2026
Dinamani Dharmapuri
திவால் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
திவால் சட்ட திருத்த மசோதா, 2026 மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1 min
April 02, 2026
Dinamani Dharmapuri
தங்கம் பவுனுக்கு ரூ.3,040 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
April 02, 2026
Dinamani Dharmapuri
பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு
சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைமையகத்துக்கு வெளியே புதன்கிழமை மாலை குண்டு ஒன்று வெடித்துச் சிதறியது.
1 min
April 02, 2026
Dinamani Dharmapuri
மேற்காசிய போர் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமர் மோடி உத்தரவு
மேற்காசிய போரால் மாறியுள்ள உலக சூழல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் துறைகளின் பிரச்னைகளை சரிசெய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
1 min
April 02, 2026
Translate
Change font size
