Try GOLD - Free
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்
Dinamani Cuddalore
|May 27, 2026
இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.
இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும். இந்தப் பருவத்தில் புதிய அனுபவங்களைத் தேடிச் செல்லும் இளைஞர்களில் சிலர், தவறான திசையில் பயணித்து, அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்துக்கும், அவர்கள் சார்ந்த சமூகத்துக்கும் சுமையாக மாறிவிடுகிற காட்சிகள் தொடர்ந்து நிகழ்கின்றன.
நண்பர்களிடையே நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வால், மது மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை பல இளைஞர்கள் அவர்களுடைய நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொள்கின்றனர். தனிப்பட்ட குடும்பப் பிரச்னைகளால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து தற்காலிகமாக விடுபட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் இளைஞர்களும் உண்டு.
சென்னை உள்ளிட்ட இந்தியப் பெரு நகரங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் உயர் கல்வி கல்லூரி விடுதிகளில் மாணவர்களிடையே போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் 1960-களில் வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை நகரில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் 'போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு' என்ற அமைப்பு சென்னை நகரில் முதன்முதலில் 1963-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த நுண்ணறிவுப் பிரிவு தமிழ்நாட்டிலுள்ள பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
நகரங்கள், கிராமங்கள் என மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போதைப் பொருள்கள் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதும், மாணவர்களிடையே போதைப் பழக்கம் வேகமாகப் பரவி வருவதும், போதைப் பொருள்கள் பயன்பாடு பல கொடுங்குற்றங்கள் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்திருப்பதும் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடையே அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.
கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தங்குதடையின்றி நடைபெறுவதால் பொதுமக்களிடையே ஏற்பட்ட அச்சத்தைத் தணிப்பதற்காக 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை' என்ற பெயரில் 2021 - 2022-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும், போதைப் பொருள்கள் விற்பனையை அரசு கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவு, சமீபத்திய தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் எதிரொலித்தது.
This story is from the May 27, 2026 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
மத்திய அரசு மீது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கோபம்: கார்கே
'பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதன் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் மத்திய அரசு மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்' என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
1 mins
May 27, 2026
Dinamani Cuddalore
ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் சம்பவம்: 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னையில் 3 இடங்களிலும், மதுரையில் இரு இடங்களிலும் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
1 min
May 27, 2026
Dinamani Cuddalore
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்
இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.
3 mins
May 27, 2026
Dinamani Cuddalore
சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 27, 2026
Dinamani Cuddalore
2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை
சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
May 27, 2026
Dinamani Cuddalore
மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் நட்பு ரீதியிலான ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 27, 2026
Dinamani Cuddalore
தெலங்கானா: மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சரண்
தெலங்கானாவில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் பசுனூரி நரஹரி (எ)விஸ்வநாத் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.
1 min
May 27, 2026
Dinamani Cuddalore
மதுரையில் கோயில் அருகே சிறுவன் கொலை: 5 பேர் கைது
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 26, 2026
Dinamani Cuddalore
புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்கள்
நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி
1 min
May 26, 2026
Dinamani Cuddalore
மண் வளத்தில் கூட்டணி நிர்ப்பந்தம்
இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது; அனைவரும் நஞ்சில்லா உணவையே விரும்புகின்றனர். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது.
2 mins
May 26, 2026
Listen
Translate
Change font size

