Try GOLD - Free
பஞ்சிய மெல்லடி!
Dinamani Cuddalore
|May 11, 2025
பெண்களுக்குச் குறுகிய நெற்றியும், நுண்ணிய இடையும், சிறிய பாதங்களும் அழகு சேர்ப்பன.
பெண்களுக்குச் குறுகிய நெற்றியும், நுண்ணிய இடையும், சிறிய பாதங்களும் அழகு சேர்ப்பன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் காழிச் சீராம விண்ணகரத்துப் பெருமானிடத்து அடியார்களை ஆற்றுப்படுத்தும் பாசுரத்தில் நப்பின்னையின் பாதங்களின் அழகை, பஞ்சியமெல்லடிப்பின்னை (3:4:4) என்று பாடிப் போற்றியுள்ளார். அந்நூலில், வயலாளிப் பெருமானோடு தன் மகளும் உடன் போய் விட்டாளோ என்று ஐயுறும் தாய், தன் மகளை, 'பஞ்சிய மெல்லடியெம் பணைத்தோளி (3:7:3) என்று பரிவோடு குறிக்கிறாள். அசோதை இடைப்பிள்ளைகளை, 'பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள்' (10:7:10) என்கிறாள். இம்மூன்று இடங்களிலும் முறையே 'செம்பஞ்சு போலே மிருதுவான திருவடிகளையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக' என்றும், 'இது படுக்கையில் இருக்கிலும் பயப்பட வேண்டும் படி மிருதுவான காலையுடையவள்' என்றும், 'பஞ்சு போல மிருதுவான அடியையுடையராய் இருக்கிற பிள்ளைகள்' என்றும் உரையிட்டுள்ளார் பெரியவாச்சான்பிள்ளை. பதிப்பாசிரியர்கள் இவ்விடங்களில் காணப்படும் 'பஞ்சிய' என்பதை ஒரு சொல்லாகக் கொண்டுள்ளார்கள். பாடல்களைச் சொற்களாகப் பிரித்துப் பதிப்பித்துள்ள மர்ரே பதிப்பு முதலியவற்றிலும் பஞ்சிய மெல் அடி என்றே காணப்படுகிறது. 'பஞ்சிய' என்னும் சொல் வழக்கு வேறு இலக்கியங்களில் எங்கும் காணப்படவில்லை. பெரும்பாலான வினைச்சொற்கள் வினையடியிலிருந்தே உருவாகின்றன. ஆனால், பெயர்ச்சொல்லில் இருந்து வினைச்சொற்கள் உருவாதலும் உண்டு. கடைக்கண், சித்திரம் என்னும் பெயர்களின் அடியாகக் கடைக்கணித்தான், சித்திரித்தான் என்னும் வினைச்சொற்கள் தோன்றியுள்ளன. அதுபோலப் பஞ்சு என்னும் பெயர்ச்சொல்லில் இருந்து பஞ்சிய என்னும் சொல்
This story is from the May 11, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
மிகக் கடுமையான பரிசோதனை கட்டுப்பாடுகளைக் கடந்து வந்தேன்
செபாஸ்டியன் சாவே
1 min
April 29, 2026
Dinamani Cuddalore
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி
உலக அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என துனிசியாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
April 29, 2026
Dinamani Cuddalore
ஐபிஎல் பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
April 29, 2026
Dinamani Cuddalore
பார்சல் சேவையை விரைவுபடுத்த தபால் துறை-டிடிடிசி ஒப்பந்தம்
நாடு முழுவதும் உள்ள இந்திய தபால் துறையின் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, டிடிடிசி எக்ஸ்பிரஸ் கொரியர் நிறுவனத்தின் பார்சல் வணிகத்தை மேம்படுத்த இரு தரப்பும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
1 min
April 29, 2026
Dinamani Cuddalore
ரைபகினா, கௌஃப் அதிர்ச்சித் தோல்வி; பொடாபோவா, சின்னர் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான எலனா ரைபகினா, கோகோ கௌஃப் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறினர்.
1 min
April 29, 2026
Dinamani Cuddalore
வெளியேறியது இந்திய மகளிர் அணி
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 0-5 என சீனாவிடம் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து வெளியேறியது.
1 min
April 29, 2026
Dinamani Cuddalore
உள்ளம் அளந்திடும் உலகளந்தான் கோல்!
தேர்தல் வாக்குறுதி பலூன்கள் பரபரப்பாய் தமிழக வானில் மிதந்து கொண்டிருந்த சூழலில், என் நெருங்கிய அயலகத் தமிழாசிரியர் ஒருவர் அவசரமாய் அழைத்தார்.
3 mins
April 29, 2026
Dinamani Cuddalore
கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்
கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
1 min
April 28, 2026
Dinamani Cuddalore
ரக்பி ப்ரீமியர் லீகில் மகளிர் அணிகள் அறிமுகம்
ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ், ரக்பி இந்தியாவுடன் இணைந்து, எச்எஸ்பிசி ரக்பி பிரீமியர் லீக் (ஆர்பிஎல்) நடைபெறவுள்ள தொடரில் 4 மகளிர் அணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
1 min
April 28, 2026
Dinamani Cuddalore
சபலென்கா, லெய்லா முன்னேற்றம்
ஸ்பெயினில் நடைபெறும் களிமண் கள டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில், நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
1 min
April 28, 2026
Translate
Change font size

