Facebook Pixel உள்ளம் அளந்திடும் உலகளந்தான் கோல்! | Dinamani Cuddalore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

உள்ளம் அளந்திடும் உலகளந்தான் கோல்!

Dinamani Cuddalore

|

April 29, 2026

தேர்தல் வாக்குறுதி பலூன்கள் பரபரப்பாய் தமிழக வானில் மிதந்து கொண்டிருந்த சூழலில், என் நெருங்கிய அயலகத் தமிழாசிரியர் ஒருவர் அவசரமாய் அழைத்தார்.

- இரா. குறிஞ்சிவேந்தன்

தன் வரலாற்றுக் கோரிக்கை ஒன்றை முக்கிய அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் எப்படியாவது சேர்க்க இயலுமா எனக் கேட்டார். அதாவது, தமிழ்கூறு நல்லுலகின் பெருமித அடையாளமான மாமன்னர் இராஜராஜனின் சமாதி உடையாளூரின் வெயில் மழையில் காய்ந்து வரும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நினைவுமண்டபம் எழுப்பும் வாக்குறுதியே அவருடைய கோரிக்கை.இந்தக் கோரிக்கையின் பின்புலத்தைக் கேட்டபோது, தென்கிழக்காசியாவில் தமிழர்கள் இன்றளவும் தலைநிமிர்ந்து நடப்பதற்கு மாமன்னர் இராஜராஜனின் தீர்க்கமான பார்வையே மூல காரணம் என்றும், அந்நினைவாலயக் கட்டுமானத்துக்கு தன் ஓய்வூதியப் பணத்தில் 50% தொகையைத் தருவதாகவும் அந்த நண்பர் கூறினார்.

இராஜராஜன் என்பது வெறும் சமாதியுடன் அடங்கிவிடும் பெயரன்று; இந்திய அரசியல் வரலாற்றுக்குப் பெரும் படிப்பினைகளைக் கற்றுத்தரும் பல்கலைக்கழகம் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் அவருக்குச் சொல்ல நேரிட்டது. பெருவுடையார் கோயில் கட்டுமானம், கடல் கடந்து ஆட்சியை விரிவாக்கம் செய்த பெருவீரம் என்ற எல்லைகளைத் தாண்டி விசுவரூபம் எடுத்து நிற்கும் அரிய ஆளுமை இராஜராஜன்.

அரசியலின் அரிச்சுவடியே அதிகாரம்தான். அதிகாரத்தின் சின்னமாகிய அரியணையைக் கைப்பற்றும் போட்டிகளில் சிந்திய குருதித்துளிகளிலேயே பேரரசுகளின் வரலாறுகள் பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால், அரசகுடும்பத்தில் தோன்றி, செல்வச் செழிப்பில் வளர்ந்த அருண்மொழிவர்மன் இதற்கு விதிவிலக்கு. அரசர் சுந்தரச்சோழனின் மறைவுக்குப் பின், சோழசிம்மாசனத்தை ஆள, அரசரின் தம்பி உத்தமச்சோழன் விரும்பினார்.

நினைத்திருந்தால் அந்த சிம்மாசனத்தை நொடிப்பொழுதில் கைப்பற்றும் வீரம் இராஜராஜனின் தோள்களில் தேங்கி நின்றது. ஆனால், அரியணை ஆவல் வற்றித் தீரும்வரை உத்தமச்சோழனே ஆட்சியில் இருக்கட்டும் என்று அந்த இளவரசன் ஒதுங்கி நின்றதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன. இப்படி ஆசையையும் அரியணையையும் விடுத்து அப்பொன்னியின் செல்வன் விலகி நின்ற தொலைவு சுமார் 15 ஆண்டுகள்.

வாளெடுத்துப் போர்க்களங்களில் வெற்றி வாகை சூடிய மன்னர்கள்கூட, ஆயுதமில்லா நிர்வாகக் களத்துக்கு தாக்குப்பிடிக்க இயலாமல் புறமுதுகிட்டு ஓடியிருக்கின்றனர்.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

ஐஓபி லாபம் 43% வளர்ச்சி

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

ரெனால்ட் இந்தியா மறுசீரமைப்பு

உலகின் 3ஆவது பெரிய கார் சந்தையான இந்தியாவில் தனது தடத்தை வலுப்படுத்தும் நோக்கில், ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது செயல்பாடுகளை மறுசீரமைக்க அனுமதி கோரி தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தை (என்சிஎல்டி) அணுகியுள்ளது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

time to read

3 mins

May 01, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

வங்கதேசத்துடனான மகளிர் டி20: தொடரை வென்றது இலங்கை

வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கிரெடிட் கார்டு வணிகத்தை வாங்கும் ஃபெடரல் வங்கி!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது வாடிக்கையாளர் தளத்தை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் கிரெடிட் கார்டு வணிகத்தின் ஒரு பகுதியை வாங்குவதாக ஃபெடரல் வங்கி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

ஸ்லோவாகியாவை வீழ்த்தியது இந்தியா

ஐடிடிஎஃப் உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவர் அணி 3-2 என ஸ்லோவாகியாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கேஸ்பருக்கு அதிர்ச்சி அளித்த பிளாக்ஸ்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான நார்வேயின் கேஸ்பர் ரூட் காலிறுதிச் சுற்றில் வியாழக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

சார்லஸுக்கு நியூயார்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூர் வைரம்!

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசர் சார்லஸைச் சந்திக்கும் போது, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்தார்.

time to read

1 min

May 01, 2026

Listen

Translate

Share

-
+

Change font size