Try GOLD - Free
Budget 2025 ஆச்சரியமும் ஏமாற்றமும்!
Nakkheeran
|February 05-07, 2025
மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற மோடியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி 11 மணியளவில் தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக 8-வது முறையாகத் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்யும் பட்ஜெட் இது.
இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பங்குச் சந்தை சரிவு, ஜி.டி.பி. விகிதம் நடப்பாண்டில் 6.4 ஆகச் சரிந்த சூழல் போன்றவற்றால், மிகவும் எதிர்பார்ப்புமிக்க பட்ஜெட்டாக இது திகழ்ந்தது. இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை பொருளாதார அறிஞர்கள் பட்ஜெட்டில் எதிர்பார்த்திது. ஒரு நிதியாண்டில் எவ்வகையில் வருவாய் ஆதாரங்களைத் திரட்டப் போகிறோம், அதை எவ்விதத்தில் செலவிடப் போகிறோம் என்ற திட்டமே பட்ஜெட்டாகும். இவ்வாண்டு வரி மற்றும் வருவாய்க்கும் செலவுக்குமான வித்தியாசம் இந்தியாவின் இவ்வாண்டு ஜி.எஸ்.டி.யில் 4.8% இருக்குமென மதிப்பிட்டார் நிதியமைச்சர், பற்றாக்குறையைச் சரிக்கட்ட 11.54 லட்சம் கோடி கடன் பெற திட்டமிருப்பதாக தெரிவித்தார்.
தற்போதைய பட்ஜெட் இளைஞர், பெண்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டது என தெரிவித்தார். வேளாண் உற்பத்தி பெருக்கம், விவசாயிகள் நிலையை மேம்படுத்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வருமான வரி விதிப்பு எளிமைப்படுத்தப்படுமென்ற நிதியமைச்சர், வருமான வரி தொடர்பான புதிய மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார். புதிய வருமான வரித் திட்டத்தின்கீழ் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரிப்பிடித்தம் கிடையாதென அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை மீதான டி.டி.எஸ். பிடித்தம் 2.4 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
விவசாயிகளை மகிழ்விக்க, 1.70 கோடி விவசாயிகள் பயன்பெற 100 மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை பெருக்கும் திட்டம், பருப்பு உற்பத்தியை அதிகரிக்க திட்டம், அதிக விளைச்சல் தரும் பருத்தி விதைகளை உற்பத்தி செய்ய திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான கிரெடிட் கார்டு கடன் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் பெறும் கடனுக்கான வட்டி மானியம் ரூ.3000 லிருந்து 5000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மோடி ஆட்சிக்கு வந்தது முதலே, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு காப்பீடு, ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடும் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு பட்ஜெட்டில் விடையில்லை.
This story is from the February 05-07, 2025 edition of Nakkheeran.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Nakkheeran
Nakkheeran
ஆளுங்கட்சி... ஆனா எதிர்க்கட்சி
“பா.ஜ.க.விற்கு எதிர்பாராத ‘ட்விஸ்ட்’ கொடுத்து, தி.மு.க.வின் எதிர் காலத்தை எஸ்கலேட்டரில் ஏற்றியிருக்கிறார் ஸ்டாலின்” எனக் கூறுகிறார்கள் தேசிய அரசியலை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் அரசியல் வல்லுநர்கள்.
2 mins
April 25-28, 2026
Nakkheeran
உயிர்களை விழுங்கும் பட்டாசு ஆலைகள்! அதிர்ச்சிகரமான உண்மைகள்!
25 பேரின் உயிரைப் பறித்த கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
3 mins
April 25-28, 2026
Nakkheeran
தேர்தல் திருவிழா! காணாமல்போன சுவரோவியங்கள்!
1990 களில் தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே திருவிழா போல களைகட்டும்!
2 mins
April 25-28, 2026
Nakkheeran
தேர்தல் திருவிழா! உற்சாகமாக வாக்களித்த தலைவர்கள்!
“ஹலோ தலைவரே முதல் ஆளா ஜன நாயகக் கடமையை முடிச்சுட்டு, செய்தி கொடுக்க வந்திருக்கீங்க போலிருக்கு!” “ஆமாம்பா, நான் ஓட்டுப் போடறதுதான் முக்கியமா? அரசியல் கட்சித் தலைவர்கள், வி.ஐ.பி.க்கள் எல்லாம் ஓட்டுப் போட்டாங்களானு நோட்டம் விட்டிருப்பியே அதைச் சொல்லு.”
4 mins
April 25-28, 2026
Nakkheeran
ஹாரர் சந்தானம்!
சந்தானம் நாயகனாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் புதிதாக கமிட்டாகும் படங்கள் சில காரணங்களால் தள்ளிப்போகிறது.
1 min
April 25-28, 2026
Nakkheeran
அகிலேஷுக்கு டீ கொடுத்தது குத்தமா? -புலம்பும் டீக்கடை உரிமையாளர்!
குதிரை முன்னால் சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் என்பார்கள். அரசியலும் அத்தகையதுதான்.
1 min
April 25-28, 2026
Nakkheeran
அன்புமணிக்கு தடை! நீதிமன்றம் உத்தரவு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்தமுறை பல விசித்திரங்களைச் சந்தித்திருக்கிறது.
2 mins
April 25-28, 2026
Nakkheeran
அரசியல் வியூகம்... தந்திரம்... விளைவு! வார் ரூம்
சம்பவக்காரர் மம்தா!
2 mins
April 25-28, 2026
Nakkheeran
ஈரான் யுத்தம்! விடை தெரியாத, கேள்விகள்!
ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த சில ஆண்டுகளாகவே போரில் உள்ளன. இதனால் ரஷ்யா- உக்ரைன் மக்களுக்கு சில நெருக்கடிகள் இருந்தாலும், உலகத்துக்கு எந்தப் பெரிய நெருக்கடியும் இல்லை.
2 mins
April 25-28, 2026
Nakkheeran
பணப்பட்டுவாடா படுஜோர்!
-கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!
1 min
April 25-28, 2026
Translate
Change font size
