Try GOLD - Free
கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்
Andhimazhai
|March 26
‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.
குறிப்பாக வைதிக சநாதனம் உருவாக்கியிருந்த இறை பற்றிய மூட நம்பிக்கையைச் சிதலமாக்கிய கலைஞரின் தொடக்க காலத் திரைப்பட முயற்சிகள், கலகப் பிரதிகளாக வெளியாகியுள்ளன. பெரியாரின் அரசியல், சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளைப் பதின்பருவத்திலே பின்பற்றிய கலைஞர் திரைப்படக் காட்சி ஊடகத்தின் மூலமாகத் தமிழ்ச் சமூகத்தில் அழுத்தமான அரசியல் கருத்துகளைப் பரப்பினார். கலைஞர் கதை-வசனம் எழுதிய திரைப்படங்கள் பெரிதும் எதார்த்தத்தை நகலெடுப்பவை அல்ல. மந்திரி குமாரி, பூம்புகார் போன்ற வரலாற்றுத் திரைப்படங்களிலும்கூட சமகாலப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட பிரதிகள் திரையில் காட்சிப்படுத்தப்படும்போது பார்வையாளர்களிடம் கேள்விகளை எழுப்புகின்றன. வெறுமனே பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை போன்றவற்றை முன்வைத்து வணிகரீதியில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்குக் கலைஞர் கதை-வசனம் எழுதியிருந்தாலும் அவருடைய திராவிட இயக்க அரசியல் சொல்லாடலை முன்வைத்திடும் திரைப்படங்கள் காலங்கடந்து இன்றளவும் நிலைத்திருக்கின்றன. தமிழ்த் திரையுலக வரலாற்றில் கலைஞரின் அரசியல் தோய்ந்த கதை-வசனம் உருவாக்கிய விளைவுகள் காரணமாக அவர் கலகக்காரராக இன்றும் விளங்குகிறார்.
அறிவியல் தொழில்நுட்பத்தின் விளைவாக உருவான திரைப்படம் இந்தியாவில் அறிமுகமானபோது பெரிதும் வைதீக சநாதனம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை உள்வாங்கியிருந்தது. புராணம், இதிகாசக் கதைகள் பின்புலத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் வருணாசிரமத்தை நியாயப்படுத்திடும் சூழல் நிலவியது. இந்நிலையில் திராவிட இயக்கத்தினரின் திரைப்படம் சார்ந்த பார்வை, அன்றைய சாதியம், சநாதனத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியது. நாட்டு விடுதலைக்குப் பின்னர் கல்வியறிவு பரவலாகிடாத காலகட்டத்தில் திராவிடக் கருத்தியலை முன்வைத்த திரைப்படங்கள் பெரிதும் கவனம் பெற்றன. பிரெஞ்சுச் சிந்தனையாளர் வால்டேரின் கூற்று அடிப்படையில் திராவிட அரசியலைப் பிரச்சாரம் செய்திட அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோர் நாடகம், திரைப்படம் போன்ற காட்சி ஊடகங்களைப் பயன்படுத்தி வெற்றியடைந்தனர்.

This story is from the March 26 edition of Andhimazhai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Andhimazhai
Andhimazhai
குடும்பத்தின் கதை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.
1 min
March 26
Andhimazhai
குடும்ப அரசியலும் மத அரசியலும்
இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.
4 mins
March 26
Andhimazhai
அங்கே குற்றம்...இங்கே சகஜம்!
உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:
6 mins
March 26
Andhimazhai
கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்
‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.
4 mins
March 26
Andhimazhai
அவர் பாடும் பாடல்!
எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.
4 mins
March 26
Andhimazhai
நிலவின் கதைகள்
\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.
1 min
March 26
Andhimazhai
பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்
இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.
4 mins
March 26
Andhimazhai
குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...
அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.
2 mins
March 26
Andhimazhai
ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!
பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.
1 mins
March 26
Andhimazhai
வெற்று சாகசம்: முதல்வன்
ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.
2 mins
March 26
Listen
Translate
Change font size

