Prøve GULL - Gratis
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
Penmani
|October 2025
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
பாசிகாட்: அருணாசல பிரதேசத்தின் நுழைவாயில் எனப்படும் இந்த அழகான சிறிய நகரம், சியாங் நதி பள்ளத்தாக்கு கள் ஆகியன இமய மலைகளில் அழகாக அமைந்துள்ளன. புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அதிகம் வருமிடம் பாசிகாட்.
தேசு: அருணாசல பிரதேசத்திலுள்ள லோஹித் மாவட்டத்தின் தலைமையகம் மற்றும் ஒரு பழமையான மலை நகரமாகிய தேசு, மலைகளால் சூழப்பட்டுள்ளது. சமவெளி நிலங்கள்; அடர்ந்த வனப் பகுதிகள் மற்றும் ஆறுகளுக்கும் பெயர் பெற்ற இடம். முக்கிய சுற்றுலாத் தலமாகிய இங்கே கோவில், மடாலயம், குருத்வாரா போன்ற பல மதங்களின் புனித இடங்கள் ஒரே வளாகத்தில் உள்ளன.
தேசு தாவரவியல் பூங்கா: தேசு நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. கல்வி நிகழ்ச்சிகள், தாவரவியல் தோட்டங்கள் மற்றும் வனவிலங்கு கண்காட்சிகள் இப்பூங்காவில் இடம்பெற்றுள்ளன. பிக்னிக் செல்ல ஏற்ற இடம்.
பரசுராம் குண்ட்: புனித யாத்திரை இடமாகிய பரசுராம் குண்ட், லோஹித் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்து புராணங்களில் பரசுராமருடன் தொடர்புடையது. சும்லாங் ரிசர்வ் வனப் பகுதிகளில் அமைந்துள்ள குண்ட், ருத்ராட்ச மரங்களால் சூழப்பட்டுள்ளது. பிரபலமான சுற்றுலாத் தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் மகரசங்கராந்தி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே கூடுகின்றனர்.
மெச்சுக்கா ஏரி: கடல்மட்டத்திலிருந்து ஆறாயிரம் அடி உயரத்தில் உள்ளது. ரோலிங் பச்சை புல்வெளிகள், மர வீடுகள் போன்ற அழகான காட்சிகளைக் காணலாம். அமைதியான, அருமையான இடம். மெச்சுக்கா பள்ளத்தாக்கில், மீன் பிடித்தல், மலையேற்றம், படகு சவாரி போன்ற சாகச நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
மாலினிதன் கோவில்: தொல்பொருள் தளம் மற்றும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். சியாங் மலைகளின் அடிவாரத்தில், பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. இடிபாடுகளுடன் இருப்பினும், முக்கிய இந்து வழிபாட்டுத் தலமாக கருதப்படுவதால், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். புராண முக்கியத்துவம் வாய்ந்த மாலினிதன் கோவில், முழுக்க முழுக்க கிரானைட் கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி சமயம், விலை மதிப்பற்ற வேதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதென கூறப்படுகிறது.
Denne historien er fra October 2025-utgaven av Penmani.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Penmani
Penmani
பெரு- பொலிவியாவில் மிதக்கும் வீடுகள்!
உரோஸ் என்ற பழங்குடியினரால் உருவாக் கப்பட்ட உரோஸ் தீவுகள் உலகின் மிகவும் புனிதமான மனித பொறியியல் சாதனைகளில் ஒன்று!
1 mins
May 2026
Penmani
இசை மருத்துவம்!
'இசைகேட்டால் புவி அசைந்தாடும் என்னும் திரைப்படப்பாடல்தான் எத்தனை பொருள் பொதிந்தது.
2 mins
May 2026
Penmani
வயலினில் என் விரல்களின் நடனம்!
வயலின் இசைக்கலைஞர் எச்.என்.பாஸ்கர்
2 mins
May 2026
Penmani
வாழ்க்கைப் போரில் வெற்றிக்கு வழி!
வாழ்க்கையில் பெரும்பாலானோர் செய்யும் மிகப் பெரிய தவறு தங்களைத் தாமே தாழ்வாக எடைபோடுவதுதான்!
2 mins
May 2026
Penmani
செயற்கை இதயம்!
ஆஸ்திரேலியா நாட்டில் இதய பாதிப்புக்கு உள்ளான ஒரு நபருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டு, மாற்று இதயம் கிடைக்கும் வரை செயற்கை இதயத்தின் உதவியுடன் உயிர் வாழ்ந்த நிகழ்வு இதய நோய் தொடர்பான சிகிச்சையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 2026
Penmani
ஏழைகளைக் கண்டால் மனம் வாடும் காமராஜர்!
காமராஜர் சிறுவயதில் இருந்தே மக்க ளோடு பழகி வாழ்ந்தவர்.
1 min
May 2026
Penmani
வியப்பூட்டும் வியட்நாம்!
ஆசிய நாடுகள் ஏதேனும் ஒன்றினுக்கு செல்லலாம், இரண்டு வாரங்கள் இருந்து விட்டு வரலாம் என்று தீர்மானித்தோம்.
3 mins
May 2026
Penmani
நம் நிழலில் நாம் ஒதுங்க முடியுமா?
ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.
2 mins
May 2026
Penmani
பூக்கூடை
நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி தெருவில் தரைக்கு கீழே 25 மீட்டர் ஆழத்தில் பெடரல் ரிசர்வ் தனது பிரதான கட்டிடத்தின் அடித்தளத்தில் பெரும்பான்மையான தங்கத்தை பாதுகாத்து வருகிறது.
1 mins
May 2026
Penmani
படேஷ்வர் மகாதேவ் கோயில்கள்!
மத்திய பிரதேசத்தில் மொரேனா மாவட்டத்தில் குர்ஜரா மன்னர்களால் கட்டப்பட்ட சுமார் 200 மணற்கல் கோயில்களை தரிசிக்கலாம்.
1 min
May 2026
Translate
Change font size

