Facebook Pixel நாவிற்கினிய ஜாம் வகைகள்! | Penmani - womens-interest - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

நாவிற்கினிய ஜாம் வகைகள்!

Penmani

|

June 2026

பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.

- உஷாமுத்துராமன்

நாவிற்கினிய ஜாம் வகைகள்!

கடைகளில் வாங்கும் ஜாம்களில் அதிக நாள் கெடாமல் இருப்பதற்காக சில வேதியல் பொருட்களை கலப்பார்கள் என்பதால் நாமே தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அது ஆரோக்கியமாகவும் அவ்வப்போது பிரஷாகவும் இருப்பது தான் உண்மை. மிக எளிதாகவும் வேகமாகவும் தயாரிக்க கூடிய சில ஜாம் வகைகளை பார்க்கலாம்.

அன்னாசிப்பழம் ஜாம்

தேவையான பொருட்கள்: அன்னாசி பழம் - ஒன்று, சர்க்கரை - 300 கிராம், அன்னாசிப்பழ எசன்ஸ் - சிறுதுளிகள், ஏலக்காய் - தேவையான அளவு, டியூட்டிபுருட்டி - தேவையான அளவு, நெய் - ரெண்டு ஸ்பூன், பசும்பால் - ஒரு கப்

செய்முறை: நல்ல பழுத்த அன்னாசி பழத்தின் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய அன்னாசி பழ துண்டுகளுடன் அதன் எசன்சையும் பசும்பாலையும் சேர்த்து கூழ் போல் அரைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை போட்டு சிறிதளவு நீர் ஊற்றி, பிறகு கிளறவும். அதில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி சிறிதளவு உருட்டிப் பார்க்க அது தக்காளிப் பழம் போல் வந்தவுடன் அதன் மீது அரைத்து வைத்துள்ள அன்னாசிப்பழக் கூழையும் போட்டு நன்றாக கிளறி ஏலப் பொடியையும் டியூட்டிப்ருட்டியையும் மீதமுள்ள நெய்யையும் போட்டு கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது கீழே இறக்கி வைத்துவிட்டு ஆறிய பிறகு எடுத்து ஒரு ஜாடியில் போட்டு வைத்தால் சுவையான அன்னாசி பழ ஜாம் தயார்.

நெல்லிக்காய் ஜாம்

தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் - கால் கிலோ சர்க்கரை - 400 கிராம், ஏலப்பொடி - சிறிதளவு, நெய் - இரண்டு ஸ்பூன்.

செய்முறை: நெல்லிக்காய்களை நன்றாக கழுவி குக்கரில் தண்ணீர் இல்லாமல் வேகவைத்து கொள்ளவும். பிறகு அதில் உள்ள விதைகளை எடுத்துவிட்டு நெல்லிக்காயை மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து கூழ் போல் அரைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கிளறி சக்கரை கரைந்ததும் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் கூழை போட்டு நெய்யை ஊற்றி கிளறவும். பிறகு ஏலப் பொடியையும் போட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது கீழே இறக்கி வைத்து விட்டு ஒரு ஜாடியில் எடுத்து வைத்தால் சுவையான நெல்லிக்காய் ஜாம் தயார்.

Penmani からのその他のストーリー

Penmani

Penmani

அணியும் உடையில் அழகின் ரகசியம்!

ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நாவிற்கினிய ஜாம் வகைகள்!

பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நல் வாழ்விற்கு யோகா..

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!

time to read

4 mins

June 2026

Penmani

Penmani

பிரபலங்களின் சுவாரசியங்கள்!

அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!

மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!

இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.

time to read

2 mins

June 2026

Penmani

Penmani

பூக்கூடை

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.

time to read

1 mins

June 2026

Penmani

முத்துச்சிதறல்

மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.

time to read

1 mins

June 2026

Penmani

Penmani

வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்

பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

ஆழ்மனதின் அற்புதம்!

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.

time to read

1 min

June 2026

Listen

Translate

Share

-
+

Change font size