कोशिश गोल्ड - मुक्त
ரெயில்...எளியோர்களுக்கு இல்லை!
Kanmani
|March 05, 2025
உத்திரபிரதேச பிரயாக்கில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா மூலம் எதிர்பார்த்தபடியே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை நெருங்கிவருகிறது.
உள்ளூர் போக்குவரத்து கட்டணம், பார்க்கிங் வரி, வணிகம், விளம்பரம், ஸ்பான்சர்ஷிப், ஒப்பந்தம் போன்றவற்றின் மூலம் அரசு செம கல்லா கட்டுகிறது. ஆனால், 'கும்பமேளா மரண மேளாவாக ஆகிவிட்டது' என்று மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு நிலமை மோசமாகிவிட்டது.
'இறந்தவர்கள் எண்ணிக்கையை பாஜக அரசு குறைத்து கூறுகிறது. முறையான திட்டமிடல் இல்லை. பணக்காரர் மற்றும் விஐபிக்களுக்கு ரூ.1 லட்சத்தில் முகாம் கிடைக்கிறது. ஏழைகளுக்கு போதிய ஏற்பாடுகள் இல்லை' என்ற அவர் குற்றச்சாட்டுக்கு ஏற்ப நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலியாகும் நிகழ்வு தொடர்கதையாகிவிட்டது.
இந்த வரிசையில் டெல்லி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் செல்லும் ரயிலில் இடம்பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியானார்கள்.ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டபோதும், தேவையான முன்னேற்பாடுகளை செய்யாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது இதற்கு காரணமாக மாறிவிட்டது.
குறிப்பாக பிப்ரவரி 17ல், ஒரே நாளில் 1.57 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். தொடர்ந்து பல லட்சம் மக்கள் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்ததால், உத்தரப்பிரதேசத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டிராபிக்கில் சிக்கியவர்கள் 45 மணி நேரமாக ஊர்ந்து சென்றனர். பல மணி நேரம் ஒரே இடத்தில் தவித்தனர். சாப்பிட, தண்ணீர் குடிக்க வழி இல்லை. உதவ யாரும் இல்லை. இயற்கை உபாதைக்கு இடம் இல்லை. மருத்துவமனைக்கு போக முடியவில்லை. மத்தியப்பிரதேசம் வரை அந்த சிரமம் எதிரொலித்தது. டிராபிக் ஜாமை சரி செய்ய சில நாட்கள் ஆகிவிட்டன.இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு கூடுதலாக 992 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். மேலும், 174 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும், பிரயாக்ராஜ் - அயாத்தியா, வாரணாசி - பிரயாக்ராஜ் மார்க்கத்தில் 140 சிறப்பு ரயில்களை இயக்கவும் திட்டமிட்டதாக கூறப்பட்டது.
यह कहानी Kanmani के March 05, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Kanmani से और कहानियाँ
Kanmani
நடிகனாக விடைபெற்ற இமயம்!
தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.
3 mins
June 24, 2026
Kanmani
மூன்றெழுத்து மந்திரம்!
நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.
3 mins
June 24, 2026
Kanmani
தூக்கம் ஏன் கெடுகிறது?
பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.
3 mins
June 24, 2026
Kanmani
ஹபீபி
கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.
1 mins
June 24, 2026
Kanmani
மண்ணின் பிள்ளை!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.
2 mins
June 24, 2026
Kanmani
தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !
விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.
1 min
June 24, 2026
Kanmani
எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி
சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
June 24, 2026
Kanmani
டபுள் ஆக்ஷன்
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
1 mins
June 24, 2026
Kanmani
வெண்டை புளி குழம்பு!
சமையல்
1 mins
June 24, 2026
Kanmani
கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!
இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.
2 mins
June 24, 2026
Translate
Change font size
