मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்!

Dinamani Chennai

|

September 05, 2025

உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு, அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரர்தான்.

- இளங்கோ கட்டிமுத்து

ஆண்டுதோறும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை (செப்டம்பர் 5), அவரது பங்களிப்புகள் மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடுகிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். அவர் தத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றவர். இவர் அன்னிபெசன்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பேச்சுவன்மை மிகுந்தவராகவும், தன்பேச்சால் அனைவரையும் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார்.

தன் முதல் பணியை சென்னை மாநில கல்லூரியில் தொடங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து, நீண்ட காலமாக தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 'சர்' பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு, இவருக்கு 1954-இல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1952 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய போது, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை, ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாட அனுமதி கோரி அவருடைய மாணவர்கள் அவரை அணுகியபோது, 'எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனது பெருமைக்குரிய பாக்கியமாக இருக்கும்' என்ற கோரிக்கையைப் பரிந்துரை செய்தார். அதன்படி, இந்தியாவில் 1962-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ளவர் குரு. நமக்கு இந்த உலகைக் கற்பிக்கும் ஆசான். நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். பெற்றோர் சொல்வதைவிட ஆசிரியர் சொல்வதைத்தான் மாணவர்கள் கேட்பார்கள். எனவே, ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்.

Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai

Dinamani Chennai

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா

பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!

ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறவும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

time to read

2 mins

December 03, 2025

Dinamani Chennai

பபாசி தலைவர்- ஆர்.எஸ்.சண்முகம் புதிய நிர்வாகிகள் தேர்வு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கான (பபாசி) புதிய தலைவராக ஆர்.எஸ். சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

இந்திய மருத்துவம், யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்

புதிய விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

கைபேசிகளில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை விரும்பமாட்டால் நீக்கிக் கொள்ளலாம்

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

இரு நாள்களில் 14 துணை மின் நிலையங்கள், 26 மின்மாற்றிகள் பாதிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஸ்குவாஷ்: காலிறுதிச்சுற்றில் வேலவன், அனாஹத்

ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி பொறுப்பேற்பு

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக, மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி பொறுப்பேற்றார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

time to read

1 min

December 03, 2025

Dinamani Chennai

அச்சகப் பணியாளர்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகள் திறப்பு

சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் ரூ.39.30 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.

time to read

1 min

December 03, 2025

Translate

Share

-
+

Change font size